கரைதிறன்
கரைதிறன் (solubility) என்பது, ஒரு பொருள், அதாவது கரையம், ஒரு கரைப்பானில் கரையும் திறனைக் குறிக்கும் ஒரு இயற்பியல் இயல்பு ஆகும். இது, ஓய்வுநிலையில் ஒரு கரைப்பானில் கரையக்கூடிய மிகக்கூடிய கரையத்தின் அளவு மூலம் அளக்கப்படுகின்றது.[1] விளையும் கரைசல் நிரம்பிய கரைசல் எனப்படும். சில பொருட்கள் எந்த அளவிலும் ஒரு குறிக்கப்பட்ட கரைப்பானில் கரையக்கூடியவை. நீரில், எதனோல் கரைவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது கலக்கும் தன்மை எனப்படும். சில சந்தர்ப்பங்களில் சமநிலைக் கரைதிறனையும் தாண்டி மிகைநிரம்பல் கரைசல் ஏற்படுவது உண்டு. இது சிற்றுறுதி நிலை அல்லது தோற்றச் சமநிலையில் இருக்கும்.
ஒரு கரைசலில், கரைப்பான் பொதுவாக நீர்மமாகவே இருக்கும். கரையம், வளிமமாகவோ, நீர்மமாகவோ அல்லது திண்மமாகவோ இருக்கலாம். கரைதிறனில் பெருமளவில் வேறுபாடு காணப்படுகின்றது. இது முடிவிலியில் இருந்து மிகக் குறைவானது வரை உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Solubility". Compendium of Chemical Terminology Internet edition.