எத்தனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எதனோல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எத்தனால்
Ethanol-2D-skeletal.svg
Ethanol-3D-vdW.png
Ethanol flat structure.png
Ethanol-3D-balls.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 64-17-5
பப்கெம் 702
வே.ந.வி.ப எண் KQ6300000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C2H6O
வாய்ப்பாட்டு எடை 46.07 g mol-1
தோற்றம் colorless liquid
அடர்த்தி 0.789 g/cm3
உருகுநிலை

−114.3 °C, 159 K, -174 °F

கொதிநிலை

78.4 °C, 352 K, 173 °F

நீரில் கரைதிறன் கரைந்து கலக்கக்கூடியது
காடித்தன்மை எண் (pKa) 15.9
பிசுக்குமை 1.200 cP (20 °C)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.69 D (வளிமம்)
தீநிகழ்தகவு
ஈயூ வகைப்பாடு தீபற்றக்கூடியது (F)
NFPA 704

NFPA 704.svg

3
1
0
 
R-phrases R11
S-phrases S2 S7 S16
தீப்பற்றும் வெப்பநிலை 13 °C (55.4 °F)
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் மெத்தனால், புரொப்பனால்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

எத்தனால் (ethanol) என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம். இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று. சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்று நம்பப்படுகிறது.

எத்தனாலை வேதியியலில் C2H5OH என்று குறிப்பர். அதாவது எத்திலீனில் (C2H6) உள்ள ஓர் ஐதரசனுக்கு மாற்றீடாக ஒரு ஐதராக்சைல் குழு (-OH) உள்ளது. இதன் வாய்பாட்டை CH3-CH2-OH என்றும் குறிப்பது வழக்கம். இப்படி எழுதுவதில் இருந்து மெத்தில் குழுவில்(CH3-) உள்ள கரிமம் மெத்திலீன் குழுவில் (-CH2-) உள்ள கரிமத்துடன் இணைந்துள்ளது என்றும், அதன் கரிமம் ஐதராக்சைல் குழுவுடன் (-OH) இணைந்துள்ளது என்றும் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம்.

மாற்று எரிபொருளாக எத்தனால்[தொகு]

அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், கன்னெய் (பெட்ரோல்) போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் (~90%) அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனால் தயாரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. குறிப்பு: 2005இல் எத்தனால் தயாரிப்பு ஏறத்தாழ ஒன்பது பில்லியன் கேலன்கள்.

எத்தனால் எரிவதும் அதன் ஒளிமாலையும் (ஒளியலைகளின் குறிகோடுகளும்)

பிரேசிலில் விற்கப்படும் கன்னெய்களில் ஏறத்தாழ 20% எத்தனால் கலக்கப் படுகிறது. நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் ஊர்தி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரேசிலின் ஊர்திகளில் கிட்டத்ட்ட பாதியளவில் நேரடியாக எத்தனாலை மட்டுமே வைத்து ஓட்ட முடியும். நெகிழ்-எரி-எந்திரங்களில் முழுமையாக எத்தனாலையோ, அல்லது முழுமையாகப் பெட்ரோலையோ, அல்லது ஏதாவதொரு விகிதத்தில் இரண்டையும் கலந்தோ பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதிக அளவாக 85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை E85 என்று சந்தையில் விற்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தனால்&oldid=1827711" இருந்து மீள்விக்கப்பட்டது