சிட்ரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்ரிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
Citric-acid-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-கார்பாக்சி-3-ஹைட்ராக்சி பென்டேன் டையோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-ஹைட்ராக்சி புரோபேன்- 1,2,3- டிரைகார்பாக்சிலிக் அமிலம்
3-ஹைட்ராக்சி பென்டேன் டையோயிக் அமிலம்-3-கார்பாக்சிலிக் அமிலம்
ஹைட்ரசன் சிட்ரேட்
இனங்காட்டிகள்
77-92-9 N
ChemSpider 305
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 311
பண்புகள்
C6H8O7
வாய்ப்பாட்டு எடை 192.124 கி/மோல் (நீரிலி)
210.14 கி/மோல் (ஒரு நீர் மூலக்கூற்றுடன்)
தோற்றம் வெண் திண்மப் படிகம்
அடர்த்தி 1.665 கி /செமீ3
உருகுநிலை
கொதிநிலை 175 °C, சிதையும் தன்மையுள்ளது
133 கி /100 ml (22 °C)
THF, எதனோல், மெதனோல்-இல் கரைதிறன் நீரிலி: THF 1.80 M, எதனோல் 1.6 M, மெதனோல் 3.08 M [1]
monohydrate: THF 1.52 M, ethanol 1.78 M, methanol 2.27 M [2]
காடித்தன்மை எண் (pKa) pKa1=3.15
pKa2=4.77
pKa3=6.40
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தோல் மற்றும் கண் நமைச்சல் காரணி
தீப்பற்றும் வெப்பநிலை ?°C
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் சோடியம் சிட்ரேட், கால்சியம் சிட்ரேட்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சிட்ரிக் அமிலம் அல்லது சிட்ரிக் காடி என்பது C6H8O7 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு பலவீனமான கரிம அமிலம் ஆகும். சிட்ரிக் அமிலம் இயற்கையாகவே பாதுகாக்கும் இயல்புடையது. மேலும், உணவுக்கும் குளிர்பானங்களுக்கும் அமில அல்லது புளிப்பு சுவையை ஊட்ட சிட்ரிக் அமிலம் பயன்படுகிறது. உயிர்வேதியியலில், சிட்ரிக் அமில சுழற்சியில் இடைநிலை அம்சமாக இருப்பதால் இது ஒரு முக்கியமான அமிலமாகும். பெரும்பாலும் அனைத்து உயிர்களிலும் வளர்சிதைமாற்றத்தில் சிட்ரிக் அமிலம் தோன்றுகிறது. சிட்ரிக் அமிலத்தை சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் சுத்தப்படுத்தியாகவும் பயன்படுத்தலாம்.

சிட்ரிக் அமிலம் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் குறிப்பாக சிட்ரஸ் பழங்களில், கண்டறியத்தக்க தடமறி அளவை விட அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக எலுமிச்சம் பழங்கள் மற்றும் எலுமிச்சை வகைகளில் அதிக செறிவுள்ள சிட்ரிக் அமிலம் காணப்படுகிறது: இந்தப் பழங்களின் உலர் எடையில் கிட்டத்தட்ட 8% சிட்ரிக் அமிலத்தின் எடையாக (சாறுகளில், 47 கி/லி என்ற அளவில் உள்ளது) இருக்கிறது.[3] சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் செறிவுகளின் வரம்பு, ஆரஞ்சுப் பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்களில் 0.005 மோல்/லி என்ற அளவு முதல் எலுமிச்சம் பழங்கள் மற்றும் எலுமிச்சை வகைப் பழங்களில் 0.30 மோல்/லி என்னும் அளவு வரை காணப்படுகிறது. ஒரு இனத்திற்குள்ளேயே, பழங்கள் வளர்க்கப்படும் விதம் மற்றும் சூழலைப் பொறுத்து இந்த மதிப்பு வேறுபடுகிறது.

பண்புகள்[தொகு]

தளவிளைவுக்குட்படுத்தப்பட்ட ஒளியிலான சிட்ரிக் அமில படிகப் படம்

அறைவெப்பநிலையில் சிட்ரிக் அமிலம் வெண்ணிற படிகத் துகள்களாக விளங்குகிறது. இது நீரிலி (நீர் இல்லாத) வடிவத்திலோ அல்லது மோனோஹைட்ரேட்டாகவோ இருக்கலாம். நீரற்ற வடிவமானது வெந்நீரிலிருந்து படிகமாகிறது, மோனோஹைட்ரேட் வடிவமானது சிட்ரிக் அமிலத்தை குளிர் நீரிலிருந்து படிகமாக்கும் போது கிடைக்கிறது. மோனோஹைட்ரேட்டை 78 °C க்கு அதிகமான வெப்பநிலையில் சூடுப்படுத்துவதன் மூலம் நீரற்ற வடிவமாக மாற்றலாம். சிட்ரிக் அமிலம் தூய (நீரற்ற) எத்தனோலில் (100 பங்கு எத்தனோலில் 76 பங்கு சிட்ரிக் அமிலம்) 15 °C -யில் கரையக்கூடியதாகும்.

வேதிக் கட்டமைப்பில், சிட்ரிக் அமிலம் பிற கார்பாக்சிலிக் அமிலங்களின் பண்புகளையே பகிர்ந்துகொண்டுள்ளது. 175 °C-க்கு மேல் வெப்பப்படுத்தும் போது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை இழந்து சிதைகிறது. சிட்ரிக் அமிலம் வெண்ணிற படிக வீழ்ப்படிவை விட்டுச் செல்கிறது.

சிட்ரிக் அமிலத்தின் பிற புரோட்டான் உடைய குழுக்களிலிருந்து உருவாகும் மூலக்கூறுகளுக்கிடையேயான ஹைட்ரசன் பிணைப்பினால் எதிர் அயனியானது நிலைநிறுத்தப்படுவதனால் சிட்ரிக் அமிலம் வழக்கமான கார்பாக்சிலிக் அமிலங்களை விட சிறிதளவு அதிக வலிமையானதாகும்.

அளவீடு[தொகு]

சிட்ரிக் அமிலம் குளிர்பானங்கள், பியர் மற்றும் கார்பனேற்றப்பட்ட நீர் ஆகியவற்றில் சேர்க்கப்படும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், சிட்ரிக் அமிலம் பல பழச்சாறுகளில் இயற்கையாக உள்ளது. சர்க்கரைக்கான தரநிலையான அளவீட்டு முறையானது, ஒளிவிலகல் எண்ணாகும் என்பதால் சிட்ரிக் அமிலத்தின் அளவீட்டில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில், சர்க்கரையின் ஒளிவிலகல் எண்ணும் சிட்ரிக் அமிலத்தின் ஒளிவிலகல் எண்ணும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது. குளிர்பானங்கள் மற்றும் ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றுக்கு, இனிப்பை அளப்பதற்கான சிறந்த அளவீடு, சர்க்கரை/அமிலம் விகிதமே ஆகும். சமீபத்தில், அகச்சிவப்பு உணரிகளைப் பயன்படுத்துவதால், சர்க்கரைகளையும் சிட்ரிக் அமிலத்தையும் அவற்றின் சிறப்பியல்பு மூலக்கூறு அதிர்வுகளின் மூலம் சர்க்கரை உள்ளடக்கம் (பிரிக்ஸ்) மற்றும் அமிலத்தன்மை ஆகிய இரண்டையும் அளவிட முடிகிறது; இதனால் பானத்தின் துல்லியமான இனிப்பளவு கணக்கிடப்படுகிறது.

வரலாறு[தொகு]

எலுமிச்சம்பழங்கள், ஆரஞ்சு மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ள வேறு சிட்ரஸ் பழங்கள்

சிட்ரிக் அமிலத்தின் கண்டுபிடிப்புக்கான பெருமை எட்டாம் நூற்றாண்டின் பெர்சிய வேதியியலரான ஜாபிர் இப்ன் ஹய்யானையேச் (ஜெபெர்) சேரும்.[4][5][6] ஐரோப்பாவின் இடைக்கால கல்வியாளர்கள் எலுமிச்சை மற்றும் எலுமிச்சை வகைச் சாறுகளின் அமிலப் பண்பை அறிந்திருந்தனர்; இது போன்ற அறிவு அவர்களுக்கு இருந்ததற்கான ஆதாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டு கலைக்களஞ்சியமான, வின்செண்ட் ஆஃப் பீயவைஸ் தொகுத்த ஸ்பெக்குலம் மாஜஸில் (மாபெரும் கண்ணாடி ) பதிவு செய்யப்பட்டுள்ளது.[சான்று தேவை]

1784 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டு வேதியியலாளரான கார்ல் வில்ஹெம் ஸ்கீலி என்பவரால் சிட்ரிக் அமிலம் முதன் முதலில் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது, அவர் எலுமிச்சைச் சாறிலிருந்து அதைப் படிகமாக்கிப் பிரித்தெடுத்தார்.[7][8] தொழிற்துறை அளவிலான சிட்ரிக் அமிலத் தயாரிப்பு 1890-ஆம் ஆண்டு தொடங்கியது. அது இத்தாலிய சிட்ரஸ் பழ தொழிற்துறையினை அடிப்படையாகக் கொண்டது.

1893-ல் சி. வெஹ்மர் பென்சிலியம் பூஞ்சையானது சர்க்கரையிலிருந்து சிட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். இருப்பினும், முதல் உலகப்போரால் இத்தாலிய சிட்ரஸ் ஏற்றுமதி தடைப்படும் வரை, சிட்ரிக் அமிலத்தின் நுண்ணுயிரியல் உற்பத்தியானது தொழிற்துறை ரீதியாக முக்கியமானதாக ஆகவில்லை. 1917-ஆம் ஆண்டு அமெரிக்க உணவு வேதியியலாளர் ஜேம்ஸ் கர்ரி, அஸ்பெர்ஜிலஸ் நிகரின் சில குறிப்பிட்ட வகை பூஞ்சைகள் செயல்திறன் மிக்க சிட்ரிக் அமில உற்பத்திப்பொருள்களாக இருக்ககூடும் என்பதைக் கண்டுபிடித்தார், மேலும் பீஃபிசர் நிறுவனம், 1929-ல் சிட்ரிக் பெல்ஜ் நிறுவனம் உற்பத்தி செய்ததற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முறையைப் பயன்படுத்தி தொழிற்துறை அளவிலான உற்பத்தியைத் தொடங்கியது.

தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சிட்ரிக் அமிலத்தின் உற்பத்திக்கான பிரதான முறையாக இன்றும் உள்ள இந்த உற்பத்தி முறையில், ஆஸ்பெர்ஜிலஸ் நிகரின் வளர்த்தொகுப்புகள் சுக்ரோசில் அல்லது குளுக்கோஸ் உள்ள ஊடகத்தில் செலுத்தப்பட்டு சிட்ரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரையின் மூலமாக சோளம் மிகுந்த சாராயம், கரும்புவெல்லப்பாகு, நீராற்பகுக்கப்பட்ட சோள மாச்சத்து அல்லது பிற மலிவான சர்க்கரை கரைசல்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.[9] விளையும் கரைசலிலிருந்து பூஞ்சையானது வடிகட்டப்பட்ட பின்னர், கால்சியம் சிட்ரேட் உப்பை உருவாக்குவதற்காக அதை சுண்ணாம்புடன் (கால்சியம் ஹைட்ராக்சைடு) சேர்த்து வண்டற்படிவாக்குவதன் மூலம் சிட்ரிக் அமிலம் தனித்துப் பிரிக்கப்படுகிறது, இந்த உப்பை கந்தக அமிலத்துடன் வினைபுரியச் செய்யும்போது, சிட்ரிக் அமிலம் மீண்டும் உருவாக்கப்படுகிறது.

சிட்ரிக் அமில சுழற்சி[தொகு]

சிட்ரிக் அமிலம் கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவற்றின் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை வழங்குவதற்கான உடலியக்கவியல் உயிர்வழியேற்றத்தில் ஈடுபடும் சேர்மங்களின் வரிசையில் ஒன்றாகும்.

இந்த வேதி வினைகளின் தொடர்களே, கிட்டத்தட்ட அனைத்து வளர்சிதைமாற்ற வினைகளுக்கும் மையமானதாகும். மேலும் உயர் உயிரினங்களில், உணவிலிருந்து பெறப்படும் ஆற்றலில் மூன்றில் இரண்டு பங்கின் மூலமும் இவ்வினைகளேயாகும். இந்தக் கண்டுபிடிப்புக்காக, ஹான்ஸ் அடால்ஃப் கிரெப்ஸ் 1953 ஆம் ஆண்டு உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். இந்த தொடர் வினைகளுக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன, அவற்றில் சிட்ரிக் அமில சுழற்சி , கிரெப்ஸ் சுழற்சி மற்றும் டிரைகார்பாக்சிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி ) ஆகியவையும் உள்ளடங்கும்).

பயன்கள்[தொகு]

2007-ஆம் ஆண்டு சிட்ரிக் அமிலத்தின் உலகளவிலான ஆண்டு உற்பத்தி தோராயமாக 1,7000,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. அதில் ஐம்பது சதவிகிதத்திற்கு அதிகமான அளவு சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான அளவு சிட்ரிக் அமிலம், பானங்களில் புளிப்புச் சுவை வழங்குவதற்காகவும், சுமார் இருபது சதவிகிதம் அளவு பிற உணவுப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இருபது சதவிகிதம் அளவு சலவைத்தூள் பயன்பாடுகளுக்கும் பத்து சதவிகிதம் அளவு, அழகுப்பொருள் உற்பத்தி, மருந்து உற்பத்தி மற்றும் வேதிப்பொருள் தொழிற்துறை போன்ற உணவு-அல்லாத தொடர்புடைய பிற பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

உணவில் சேர்க்கும் பொருளாக[தொகு]

உணவில் சேர்க்கும் பொருளாக சிட்ரிக் அமிலம் சுவைக் கூட்டவும், பாதுகாக்கும் பொருளாகவும் உணவிலும், பானங்களிலும், குறிப்பாக குளிர் பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அது E எண் E330 என்பதன் மூலம் குறிப்பிடப்படுகிறது. பல்வேறு உலோகங்களின் சிட்ரேட் உப்புகள், பல துணை உணவுப்பொருள்களில் உயிரியல் ரீதியாகக் கிடைக்கக்கூடிய தாதுக்களை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன. சிட்ரேட்டுகளின் தாங்கல் பண்புகள், வீட்டு சுத்தப்படுத்திகள் மற்றும் மருந்துகளில் அமிலக் கார குறியீடு (pH) அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் உணவில் சேர்க்கும் பொருளாக சிட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்துவதற்கான தூய்மைக் கட்டுப்பாடுகள் உணவு வேதிப் பட்டியலேட்டினால் பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம் (FCC) வரையறுக்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்க மருந்தியல் குறிப்பேட்டில் (USP) வெளியிடப்படுகிறது. இதை செர்ரி பழங்களின் பொதிதல் செயலாக்கத்திற்கும் பயன்படுத்தலாம். இந்த தொழில் வண்ணப் பாதுகாப்பு என அழைக்கப்படுகிறது.

நீர் மென்மையாக்கல்[தொகு]

சிட்ரிக் அமிலத்தின் உலோகங்களுடனான இடுக்கி இணைப்பு வினையை ஏற்படுத்தும் திறனானது சோப்புகள் மற்றும் சலவை தூள்களில் மிகவும் பயனுள்ளதாகும். உலோகங்களை கடின நீரில் இடுக்கி இணைப்புக்குள்ளாக்குவதன் மூலமாக, இந்த சுத்தப்படுத்திகள் நுரையை உண்டாக்கவும், நீரின் மென்மையாக்கலுக்கான அவசியமின்றியும் சிறப்பாக செயல்பட முடிகிறது. இதே முறையில், சேர்ந்திருக்கும் உலோக அயனிகளை சிட்ரிக் பொருள்களாக அகற்றுவதன் மூலம், நீர் மென்மையாக்கிகளில் பயன்படுத்தப்படும் அயனிப் பரிமாற்றப் பொருள்களை மீண்டும் உருவாக்க சிட்ரிக் அமிலம் பயனபடுத்தப்படுகிறது. சிட்ரிக் அமிலம் மற்றும் நீரின் பூரிதப் புள்ளி ஐம்பத்தியொன்பது சதவிகிதமாகும்.

மற்றவை[தொகு]

சிட்ரிக் அமிலம் நைட்ரிக் அமிலத்திற்குப் பதிலாக உயிர்தொழில்நுட்பவியலிலும் மருந்துத் தொழில்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட நைட்ரிக் அமிலத்தை அகற்றுவதில் தீங்கு இருக்கிறது, ஆனால் சிட்ரிக் அமிலத்தில் இந்த சிக்கல் இல்லை.

சிட்ரிக் அமிலம், கழிவறை மற்றும் சமையலறைகளைச் சுத்தப்படுத்தும் கரைசல்களில் செயல்மிகு உள்ளடக்கப்பொருளாகும். ஆறு சதவிகிதம் செறிவுள்ள சிட்ரிக் அமிலக் கரைசல், கண்ணாடியில் உள்ள கடின நீரின் கறைகளை தேய்க்காமலே அகற்றக்கூடியதாகும். தொழிற்துறையில் இது எஃகிலிருந்து துருவை அகற்றப் பயன்படுத்தப்படுகிறது.[10]

சிட்ரிக் அமிலம் பொதுவாக, பழுப்பு நிற ஹெராயினின் கரைதிறனை அதிகரிப்பதற்கு தாங்கலாகப் பயன்படுத்தப்படுகிறது. எயிட்ஸ் மற்றும் ஈரலழற்சி ஆகியவை பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக ஹெராயின் பயன்படுத்துபவர்கள் தங்கள் சுத்தமற்ற ஊசிகளுக்கு பதிலாக சுத்தமான ஊசிகளைப் பரிமாறிப் பயன்படுத்துவதற்கான ஊக்கப்படுத்தியாக, ஒற்றைப் பயன்பாட்டு சிட்ரிக் அமிலச் சிறு பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.[11]. அஸ்கார்பிக் அமிலம், அசிட்டிக் அமிலம் மற்றும் லாக்டிக் அமிலம் ஆகியவை பழுப்பு நிற ஹெராயினுக்குப் பயன்படுத்தப்படும் பிற அமிலமாக்கிகளாகும்; இவை இல்லாவிட்டால் போதை மருந்து பயன்படுத்துபவர் அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு அல்லது வினிகரைப் பயன்படுத்துவார்.

HMTD தொகுப்பாக்கத்திற்குத் தேவைப்படும் வேதிப்பொருள்களில் சிட்ரிக் அமிலம் ஒன்றாகும். HMTD என்பது அசிட்டோன் பெராக்சைடைப் போலவே அதிக வெப்பம், உராய்வு மற்றும் அதிர்வு உணர்வுத் தன்மை உள்ள வெடிப் பொருளாகும். இந்தக் காரணத்தினாலேயே சிட்ரிக் அமிலம் அதிக அளவில் வாங்கினால், அது தீவிரவாத செயல்களுக்காக வாங்கப்படுவதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழக்கூடும்.[சான்று தேவை]

கொழுப்பு உருண்டைகளை வைத்திருக்க பனிகுழைமத்திலும் (ஐஸ் க்ரீமிலும்) சிட்ரிக் அமிலம் சேர்க்கப்படலாம், புதிய எலுமிச்சைச் சாறு பயன்படுத்த வேண்டிய இடங்களிலெல்லாம் உணவுப் பொருள்களிலும் சிட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம். சிட்ரிக் அமிலமானது, பல்வேறு நுரை சூத்திரத் தேவைகளில் சோடியம் பைகார்பனேட்டுடன் பயன்படுத்தப்படுகிறது, இது உள்ளெடுத்துக்கொள்ளுதல் (எ.கா., பொடி, மாத்திரைகள்) மற்றும் தனிப்பட்ட கவனிப்புக்காகவும் (எ.கா., குளியல் உப்புகள், குளியல் உருண்டைகள் (ஈரமாக்கப்படும் போது அதிக நுரை தரும் உருண்டைகள்) மற்றும் கிரீஸ் சுத்தப்படுத்துதல்) பயன்படுகின்றது.

சிட்ரிக் அமிலமானது பொதுவாக ஒயின் தயாரிப்பில் அமிலத் தன்மை குறைவான அல்லது அமிலத்தன்மையற்ற பழங்களைப் பயன்படுத்தும் நிலையில் பதிலீடாக அல்லது மேம்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செலவு குறைவென்பதால் இது பெரும்பாலும் அதிக விலை ஒயின்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[12]

கூந்தலிலிருந்து மெழுகையும் வண்ணங்களையும் கழுவியகற்ற, நுரைமக் கழுவியிலும் (ஷாம்பூ) சிட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம். வெளிரலுக்கான தயாரிப்பில் சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது விளைவிக்கும் சேத அளவின் காரணமாக பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை.[சான்று தேவை]

சிட்ரிக் அமிலம் புகைப்படச் சுருள்களைத் துலக்கும் செயலாக்கத்தின் ஒரு பகுதியான நிறுத்து நீர்மமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக படத் துலக்கியாகப் பயன்படுவது காரமாகும், ஆகவே நீரினால் நடுநிலையாக்குவதை விட ஒரு மிதமான அமிலத்தால் நடுநிலையாக்கினால், நிறுத்து நீர்மத்தின் செயல்திறன் அதிகரிக்கிறது.[13]

வைரஸ் எதிர்ப்பு திசுக்களின் உற்பத்தியில் செயல்மிகு உள்ளடக்கப்பொருளாக சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.[14]

அடிப்படை வண்ணத்தின் அமிலக் கார குறியீடு (pH) அளவை சமநிலைப்படுத்துவதற்காக உணவுப்பொருள் வண்ணமூட்டலிலும் சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

சிட்ரிக் அமிலம் பிரதான மோட்சரெல்லா பாலாடைக்கட்டியின் தயாரிப்பின் முதல் படிகளில் முதிர்வூட்டும் காரணியாகப் பயன்படுத்தப்படலாம்.[15]

1940-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மன்ஹட்டான் பணித்திட்டத்தின் போது லாந்தனைடுகளின் மொத்த அயனி பரிமாற்றப் பிரிப்பில் பயன்படுத்தப்படும் முதல் வெற்றிகரமான பரப்புக் கவர் பொருள் நீக்கியாக சிட்ரிக் அமிலமே அமைந்தது. 1950-ஆம் ஆண்டுகளில் இது மிகவும் செயல்திறன் அதிகமான EDTA ஆல் பதிலீடு செய்யப்பட்டது.

சிட்ரிக் அமிலம், துருப்பிடிக்காத எஃகின் மட்டுப்படுத்தல் செயலாக்கத்தில் நைட்ரிக் அமிலத்திற்கான சிறந்த மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது (citrisurf)

தாமதப்படுத்தும் இயற்கையான சிமெண்ட் பொருளாக அமையும் வகையில் சிட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம். வேகமாகத் தங்கும் நேரத்தின் அளவை குறிப்பிடத்தக்க அளவு தாமதப்படுத்துகிறது.

பியர் உற்பத்தி செய்வதற்காக காய்ச்சும் நீரில் மாற்றங்களைக் கொடுக்க இல்லக் குடிபான (home brewers) உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் பல அமிலங்களில் சிட்ரிக் அமிலமும் ஒன்றாகும்.

பாதுகாப்பு[தொகு]

உலர் சிட்ரிக் அமிலம் அல்லது அடர் சிட்ரிக் அமிலம் படுவதால் தோல் மற்றும் கண் எரிச்சல் உண்டாகலாம், ஆகவே இந்தப் பொருள்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பான ஆடைகளை அணிய வேண்டும்.[சான்று தேவை]

அதிகமாக இதைப் பயன்படுத்தினால் பற்களின் கனிமப்பூச்சு அரிக்கப்படும்.[16]

கண்களில் பட்டால் எரிச்சலுண்டாகலாம், மேலும் மிக அதிக செறிவுள்ள (போதுமான அளவு குறைந்த அமிலக் கார குறியீடு உள்ள எந்த செறிவும் இதற்குப் போதும்) அமிலம் அதிக காலத்திற்கு கண்களில் பட்டுக்கொண்டே இருந்தால் கண் பார்வை இழக்க நேரிடலாம்.

சில நேரங்களில், அதிக செறிவுள்ள சிட்ரிக் அமிலம் முடியைச் சேதப்படுத்தி வெளிரச்செய்யலாம்.

வில்லேஜுயிஃப் துண்டறிக்கை[தொகு]

லீஃப்லெட் ஆஃப் வில்லேஜுயிஃப் (த ஃப்ளையர் ஆஃப் வில்லேஜுயிஃப் அல்லது வில்லேஜுயிஃப் பட்டியல் என்றும் அழைக்கப்படும்) என்பது, துண்டுப்பிரசுரங்கள் அல்லது விளம்பர பிரசுரங்களினால் பரப்பப்பட்ட அறிவியல் பூர்வமாக துல்லியத்தன்மையற்ற வதந்தியாகும். அது 1980 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. புற்றுநோயை உண்டாக்கும் 10 ஆபத்தான பொருள்களின் பட்டியலில் சிட்ரிக் அமிலம் (E330) போன்ற பல தீங்கற்ற பொதுவான வேதிப்பொருள்கள் இடம் பெற்றிருந்ததே இதற்குக் காரணமாகும்.

தொகுப்புகள் சார்ந்த நிலை[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Solubility of citric acid anhydrous in non-aqueous solvents
 2. Solubility of citric acid monohydrate in non-aqueous solvents
 3. Penniston KL, Nakada SY, Holmes RP, Assimos DG (2008). "Quantitative Assessment of Citric Acid in Lemon Juice, Lime Juice, and Commercially-Available Fruit Juice Products" (PDF). Journal of Endourology 22 (3): 567. doi:10.1089/end.2007.0304+. பப்மெட்:18290732. http://www.liebertonline.com/doi/pdfplus/10.1089/end.2007.0304. 
 4. http://www.islamicspain.tv/Arts-and-Science/The-Culture-of-Al-Andalus/Chemistry.htm
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-01-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 6. http://journals.iucr.org/a/issues/2008/01/00/sc5012/index.html
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-07-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 8. http://books.google.com/books?id=OUXOm8bdG1UC&pg=PA944&dq=how+citric+acid+was+discovered
 9. "Citric acid production by a novel Aspergillus niger isolate: II. Optimization of process parameters through statistical experimental designs". Bioresource Technology 98 (18): 3470–3477. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 10. /Use of ammoniated citric acid for the chemical cleaning of high pressure boilers.
 11. Garden, J., Roberts, K., Taylor, A., and Robinson, D. (2003). "Evaluation of the Provision of Single Use Citric Acid Sachets to Injecting Drug Users" (pdf). Scottish Center for Infection and Environmental Health.
 12. J. Robinson, ed (2006). The Oxford Companion to Wine (Third ed.). Oxford University Press. p. 171.
 13. "நிறுத்து நீர்மங்கள்". 2008-10-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Tissues that fight germs". CNN. 2004-07-14. http://money.cnn.com/2004/07/14/news/fortune500/kleenex/. பார்த்த நாள்: 2008-05-08. 
 15. [2]
 16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-07-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 17. British Pharmacopoeia Commission Secretariat (2009). "Index, BP 2009" (PDF). 11 ஏப்ரல் 2009 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 February 2010 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 18. "Japanese Pharmacopoeia, Fifteenth Edition" (PDF). 2006. 2011-07-22 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 Februally 2010 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)

குறிப்புதவிகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ரிக்_அமிலம்&oldid=3553885" இருந்து மீள்விக்கப்பட்டது