பானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்களால் அதிகம் குடிக்கப்படும் இரண்டாவது பானம், தேநீர் ஆகும்

மனிதன் குடிக்கும் திரவம் பானம் என அழைக்கப்படுகிறது.பானம், அடிப்படைத் தேவையான தாகம் தவிர மனித கலச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பானங்கள் நீர், பால், சாறுகள், குளம்பி, தேநீர் மற்றும் மென் பானங்கள் என வகைப்படும். கூடுதலாக மது பானங்களும் மனிதனின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியில் சுமார் 8,000 ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

உயிரியல்[தொகு]

மனித உடல் நீர்ப்போக்கினால் நீர்ச்சத்தை இழக்கும் போது, ஒருவருக்கு தாகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஏதோ ஒரு திரவத்தைக் குடிக்க வேண்டும் என்ற நீடித்த நாட்டம் ஏற்படுகிறது. தாகம் என்பது ஐப்போத்தலாமசினால் உடலில் உள்ள மின்பகுபொருளின் நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப உடல் நிலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான துலங்கல் ஆகும். மேலும், தாகமானது சுற்றோட்டத் தொகுதியின் கன அளவில் ஏற்படும் மாற்றத்தின் விளைவினாலும் ஏற்படுகிறது. ஆக்சிசன் இழப்பிற்கு அடுத்தபடியாக நீரின் முழுமையான இழப்பானது இறப்பினை நிகழ்த்தும்.[1] நீர் மற்றும் பால் (பானம்) ஆகியவை வரலாறு முழுமைக்கும் அடிப்படையான பானங்களாக இருந்து வந்துள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Cheney, Ralph (July 1947). "The Biology and Economics of the Beverage Industry". Economic Botany 1 (3): 243–275. doi:10.1007/bf02858570. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானம்&oldid=3862389" இலிருந்து மீள்விக்கப்பட்டது