வேதியியலுக்கான வேந்திய சங்கம்
சங்கத்தின் சின்னம் | |
உருவாக்கம் | 1980 (1877) |
---|---|
வகை | துறைதேர்ந்தோர் சங்கம் |
தலைமையகம் | இலண்டன் |
தலைமையகம் | |
உறுப்பினர்கள் | 46,000 |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | http://www.rsc.org/ |
வேதியியலுக்கான வேந்திய சங்கம் (Royal Society of Chemistry) என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு உயர்தொழில்சார் சங்கம் ஆகும். வேதியியல்சார் அறிவியல்களை முன்னேற்றுவதே இதன் நோக்கம். வேதியியல் சங்கம், வேதியியலுக்கான அரச நிறுவனம், பரடே சங்கம், பகுப்பாய்வு வேதியியலுக்கான சங்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, 1980 ஆம் ஆண்டில் அரச பட்டயத்துடன் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இதற்கு 34,000 உறுப்பினர்களும், வெளிநாடுகளில் 8,000 உறுப்பினர்களும் இருந்தனர். இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள பிக்காடிலியில் பேர்லிங்டன் மாளிகையில் அமைந்துள்ளது. இதன் வெளியீட்டுப் பிரிவு கேம்பிரிட்சில் தாமசு கிரகாம் அவுசில் (Thomas Graham House) உள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே, ஐக்கிய அமெரிக்காவில் பிலடெல்பியாவில் உள்ள பல்கலைக்கழக நகர் அறிவியல் மையத்தில் ஒரு அலுவலகமும், சீனாவில் பீஜிங்கிலும், சாங்காயிலுமாக இரண்டு அலுவலகங்களும், இந்தியாவில் மும்பாயில் ஒரு அலுவலகமும் உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lagowski, J. J. (1991). "A British sesquicentennial". Journal of Chemical Education 68 (1): 1. doi:10.1021/ed068p1. Bibcode: 1991JChEd..68....1L.
- ↑ "Trustees Report 2019" (PDF). www.rsc.org. Royal Society of Chemistry. பார்க்கப்பட்ட நாள் 8 July 2020.
- ↑ "RSC History". Rsc.org. 2014-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-01-08.