உள்ளடக்கத்துக்குச் செல்

தொலுயீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொலுயீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில்பென்சீன் (Methylbenzene)
வேறு பெயர்கள்
பீனைல்மெத்தேன்
தொலூல்
Anisen
இனங்காட்டிகள்
108-88-3 Y
ChEBI CHEBI:17578 N
ChEMBL ChEMBL9113 Y
ChemSpider 1108 Y
DrugBank DB01900 N
InChI
  • InChI=1S/C7H8/c1-7-5-3-2-4-6-7/h2-6H,1H3 Y
    Key: YXFVVABEGXRONW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H8/c1-7-5-3-2-4-6-7/h2-6H,1H3
    Key: YXFVVABEGXRONW-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01455 Y
பப்கெம் 1140
வே.ந.வி.ப எண் XS5250000
  • Cc1ccccc1
UNII 3FPU23BG52 Y
பண்புகள்
C7H8
வாய்ப்பாட்டு எடை 92.14 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்[1]
அடர்த்தி 0.87 g/mL (20 °C)[1]
உருகுநிலை −95 °C (−139 °F; 178 K)
கொதிநிலை 111 °C (232 °F; 384 K)
0.47 g/L[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.497 (20 °C)
பிசுக்குமை 0.590 cP (20 °C)
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.36 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் மிகவும் தீப்பற்றும் தன்மை
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் SIRI.org
R-சொற்றொடர்கள் R11, R38, R48/20, R63, R65, R67
S-சொற்றொடர்கள் (S2), S36/37, S29, S46, S62
தீப்பற்றும் வெப்பநிலை 6 °C (43 °F)[1]
Threshold Limit Value
50 mL m−3, 190 mg m−3
தொடர்புடைய சேர்மங்கள்
அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள்
தொடர்புடையவை
பென்சீன்
சைலீன்(xylene)
நாப்த்தலீன்(naphthalene)
தொடர்புடைய சேர்மங்கள் மெத்தில்-சைக்ளோ-ஹெக்சேன்
(methylcyclohexane)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தொலுயீன் (Toluene) என்னும் வேதிப்பொருள் மெத்தில்பென்சீன் (methylbenzene) என்றும் பினைல்மெத்தேன் (phenylmethane) என்றும் அழைக்கப்படும்.[2] இது பென்சீனைப் போலவே அறுகோண கரிம வளையம் கொண்ட வேதிப்பொருள், ஆனால், ஒரேயொரு ஹைட்ரஜன் இணைப்பு மட்டும் மாறி ஒரு மெத்தில் (CH3) குழு அமைந்த வேதிப்பொருள். தொலுயீன், நீரில் அரிதிற் கரையக்கூடிய, நிறமற்ற, ஒருவகையான (மணம்) நெடிவீசும் நீர்மப் பொருள்.[3] இந்த நெடி அல்லது மணமானது கதவுகள், சன்னல்கள் போன்றவற்றுக்கு நிறப்பூச்சு (பெயிண்ட்) செய்யும் பொழுது பயன்படுத்தும் நிறப்பூச்சு நீர்மத்தை நீர்க்கப் பயன்படுத்தும் பொருளில் இருந்து வரும் நெடிபோன்றதே. தொலுயீன் என்னும் இந்த மணம்வீசும் அரோமாட்டிக் ஹைடிரோகார்பன் (மணம்வீசும் கரிம-நீரதை) பல தொழிலகங்களில் அடிப்படையான கரைப்பானாகவும், முதற்பொருளாகவும் (கச்சாப் பொருள், raw material, feedstock) பயன்படுகின்றது.

பெயர்வரலாறு

[தொகு]

அமெரிக்க மரமாகிய மைராக்சிலன் பால்சாமம் (Myroxylon balsamum) என்னும் மரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மணம் தரும் தொலூல் (toluol) என்னும் தொலூல் பால்சம் (toluol balsam) என்பதில் இருந்து தொலுயீனை முதன்முதல் பெற்றதால் இப்பெயர் பெற்றது. இப்பெயரை முதலில் யோன்ஸ் யாக்கொப் பெர்செலியஸ் (Jöns Jakob Berzelius) பயன்படுத்தினார்.

வேதியியல் பண்புகள்

[தொகு]

தொலுயீன் பொதுவாக மற்ற மின்மயீர்ப்பு மணப்பொருள் மாற்றாக (electrophilic aromatic substitution) இயைபுறுகின்றது. இதில் உள்ள மெத்தில் (CH3) குழுவால், தொலுயீன் பென்சீனை விட 25 மடங்கு அதிக வேதியியல் இயைபுத்தன்மை உடையதாக உள்ளது. இது நைட்ரஜன் கூட்டத்தால் ஆர்த்தோ (ortho) மற்றும் பேரா (para) நைட்ரோதொலுயீன் ஓருரு வடிவங்கள் அடைகின்றன. இவற்றுக்கு சூடேற்றினால் வெடிக்கவல்ல டிரை-நைட்ரோ-தொலுயீன் (டி.என்.டி) (trinitrotoluene (TNT).) என்னும் வேதியியல் பொருளாக மாறுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. "Toluene (methylbenzene)". National Pollutant Inventory. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2015.
  3. "CHEMICALS IN THE ENVIRONMENT: TOLUENE (CAS NO. 108-88-3)". U.S. ENVIRONMENTAL PROTECTION AGENCY. 1994 ஆகத்து. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலுயீன்&oldid=3946954" இலிருந்து மீள்விக்கப்பட்டது