இருமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இருமல் (cough) என்பது ஒரு தன்னியல்பு வினை (அனிச்சை செயல்). இது மனிதர்களின் சுவாசப் பாதையில் இருந்து அந்நியப் பொருட்கள், கோழை மற்றும் நோய்த் தொற்றுயிரிகள் போன்றவற்றை வெளியேற்றும் பொருட்டு ஏற்படுகிறது.

இருமல் அனிச்சை செயல் மூன்று நிலைகளில் நிகழ்கிறது. முதல்நிலையில் காற்று நுரையீரல்களுக்குள் இழுக்கப்படுகிறது. இரண்டாம் நிலையில் மூச்சுக்குழலின் முகப்பு மூடியநிலையில் நுரையீரல்களில் இருந்து காற்று வெளித்தள்ளப்படுகிறது. மூச்சுக்குழலின் முகப்பு மூடியிருப்பதால் உள்ளே அழுத்தம் அதிகரிக்கிறது. மூன்றாம் நிலையில் மூச்சுக் குழல் வாய் திறப்பதால் அழுத்தம் அதிகமுள்ள இடத்திலிருந்து அழுத்தம் குறைவான வெளிப்பகுதிக்கு காற்று மிக வேகமாக வெளிவருகிறது. இவ்வாறு வருகையில் கோழை (சளி) போன்றவற்றையும் கொண்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமல்&oldid=2400985" இருந்து மீள்விக்கப்பட்டது