கார்பனீராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கார்பன் டை ஆக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காபனீரொக்சைட்டு
கார்பன்-டை-ஆக்சைடு
Carbon dioxide Carbon dioxide
வேறு பெயர் காபோனிக் அமில வளிமம்,
Carbonic anhydride,
உலர் பனிக்கட்டி(திண்மம்)
மூலக்கூற்றுக் குறியீடு CO2
மோலார் திணிவு 44.0095(14) கி/மோல்
திண்ம நிலை உலர் பனிக்கட்டி,
கார்போனியா
தோற்றம் நிறமற்ற வளிமம்
CAS எண் [124-38-9]
இயல்புகள்
அடர்த்தியும் நிலையும் 1600 கிகி/மீ³, திண்மம்
approx. 1.98 கிகி/மீ³, gas at STP
நீரில் கரைதன்மை 1.45 கிகி/மீ³
பதங்கமாதலின்
மறைவெப்பம்
25.13 கிஜூ/மோல்
உருகுநிலை −57 °C (216 K), அமுக்கத்தில்
கொதிநிலை −78 °C (195 K), பதங்கமாதல்
அமிலத்தன்மை (pKa) 6.35 உம் 10.33 உம்
பாகுநிலை 0.07 cP at −78 °C
அமைப்பு
மூலக்கூற்று வடிவம் linear
பளிங்கு அமைப்பு குவாட்ஸ்-போல
இருமுனைவுத் திருப்பம் பூச்சியம்
ஆபத்துக்கள்
MSDS External MSDS
Main ஆபத்துக்கள் asphyxiant, irritant
NFPA 704

NFPA 704.svg

0
0
0
 
(நீர்மம்)
R-phrases R: As, Fb
S-phrases S9, S23, S36(நீர்மம்)
RTECS எண் FF6400000
துணைத் தரவுப் பக்கம்
அமைப்பும் இயல்புகளும் n, εr, etc.
Spectral data UV, IR, NMR, MS
தொடர்பான சேர்வைகள்
தொடர்புடைய
ஒட்சைட்டுக்கள்
கார்பன் மோனாக்சைடு
carbon suboxide
இருகாபன் ஓரொட்சைட்டு
காபன் மூவொட்சைட்டு
Except where noted otherwise, data are given for
materials in their standard state (at 25 °C, 100 kPa)
Infobox disclaimer and references


காபனீரொக்சைட்டு அல்லது கார்பன்-டை-ஆக்சைடு அல்லது கரியமிலவாயு (இலங்கை வழக்கு: காபனீரொட்சைட்டு) (Carbon dioxide) என்பது, அதன் மூலக்கூற்றில், ஒரு கரிம (கார்பன்) அணுவையும், இரண்டு ஆக்சிசன் (ஒட்சிசன்) அணுக்களையும் கொண்டது. இது CO2 என்று குறிக்கப்படுகிறது. இது புவியின் வளிமண்டலத்தில் 0.039 சதவீதம் என்ற குறைந்த அளவில் உள்ளது. இது ஒரு நிறமற்ற மணமற்ற வாயு, காற்றை விடக் கனமானது. நீரில் சிறிதளவே கார்பன் டை ஆக்சைடு கரையும். -78 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர்வித்தால் கார்பன் டை ஆக்சைடு நேரடியாக திண்மமாக மாறும். திண்ம நிலையில் இது உலர் பனிக்கட்டி (dry ice) என அழைக்கப்படுகின்றது. இது உருகாமல் நேரடியாக கார்பன் டை ஆக்சையாக மாறும். இது கரிம வட்டத்தின் (கார்பன் வட்டம்) முக்கியமான கூறுகளில் ஒன்றாகும்.

வளிமண்டலத்தில் உள்ள காபனீரொக்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) பல்வேறு இயற்கை மூலங்களிலிருந்து உருவாகிறது. எரிமலை வளிம வெளியேற்றம், கரிமப் பொருட்கள் எரிதல், உயிரினங்கள் மூச்சுவிடல் (சுவாசித்தல்) என்பன இவற்றுள் அடங்குவன. இவற்றை விட மனிதனால் உருவாக்கப்படுகின்ற காபனீரொக்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) பெரும்பாலும், வெப்பமுண்டாக்கல், மின் உற்பத்தி, போக்குவரத்து, போன்ற தேவைகளுக்காகப் பெற்றோலியப் பொருட்களை எரித்தல் மூலமே உருவாகின்றது. இவற்றைவிடப் பல நுண்ணுயிர்களின் நொதிப்பு, சுவாசம் போன்ற செயற்பாடுகளினாலும் காபனீரொட்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) உருவாகின்றது. தாவரங்கள், ஒளித்தொகுப்பு (photosynthesis) என்னும் செயற்பாட்டின்போது காபனீரொட்சைட்டை(கார்பன்-டை-ஆக்சைடை) உள் எடுத்து, ஒட்சிசனை (ஆக்சிசனை) வெளியேற்றுகின்றது. இதன்போது ஒளியின் முன்னிலையில் காபனீரொக்சைட்டும், நீரும் சேர்ந்து காபோவைதரேட்டை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுகின்றன.

வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். [1]

வரலாறு[தொகு]

கார்பன் டை ஆக்சைடு காற்றில் இருக்கும் முக்கிய வாயுக்களில் ஒன்றாகும்.பதினேழாம் நூற்றாண்டில் பாப்டிஸ்ட் வான் ஹெல்மொன்ட் என்ற வேதியியலாளர் மூடிய பாத்திரத்தில் கரியை எரிந்தபோது உருவாவதை கண்டறிந்தார். 1750 ல் ஸ்காட்லாந்து மருத்துவர் ஜோசப் பிளாக் என்பவர் கார்பன் டை ஆக்சைடின் முழுமையான பண்புகளை கண்டறிந்தார்.அவர் விலங்குகளின் சுவாசம் மற்றும் நுண்ணுயிர் நொதித்தல் மூலம் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது என்று கண்டறிந்தார். 1772 இல் ஆங்கிலம் வேதியியலாளர் ஜோச பிரீஸ்ட்லி என்பவர் சுண்ணாம்பு கல் மற்றும் கந்தக அமிலம் மூலம் செயற்கை முறையில் உருவாக்கினார். 1823 ல் ஹம்ப்ரி டேவி மற்றும் மைக்கேல் ஃபாரடே மூலம் முதன்முதலில் கார்பன் டை ஆக்சைடு(உயர்ந்த அழுத்தங்களில்) திரவமாக்கப்பட்டது. 1835 ல் திரவ கார்பன் டை ஆக்சைடு ஒரு அழுத்த கொள்கலன் மூலம் குறைந்த வெப்பநிலையில் திடப்பொருளாக மாற்றப்பட்டது.அதுவே திடப்பனி என்று அழைக்கப்பட்டது.

தன்மைகள்[தொகு]

  1. நீரில் கரைந்து கார்பானிக் அமிலத்தைக் கொடுக்கும். இவ்வமிலம் நீல லிட்மசை சிவப்பாக மாற்றும்.
CO2 + H2O is in equilibrium with H2CO3
  1. மேலும் நீற்றுச் சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்.[2]

பௌதிகப் பண்புகள்[தொகு]

காபனீரொட்சைட்டின் மும்மைப் புள்ளியைக் காட்டும் அதன் அமுக்க-வெப்பநிலை வரைபு.
உலர் பனி

காபனீரொக்சைட்டு நிறமற்ற வாயுவாகும். குறைந்த செறிவில் மணமற்றது. அதிக செறிவில் அமிலங்களுக்குரிய மணத்தைக் கொண்டிருக்கும். சாதாரண வெப்பநிலையிலும் அமுக்கத்திலும், காபனீரொக்சைட்டு 1.98 kg/m3 அடர்த்தியைக் கொண்டிருக்கும். இவ்வடர்த்தியானது வளியின் அடர்த்தியின் 1.67 மடங்காகும். (வளியை விட அடர்த்தி கூடியது) சாதாரண வளிமண்டல அமுக்கத்தில் காபனீரொக்சைட்டுக்கு திரவ நிலை கிடையாது. -78.5°C (−109.3 °F; 194.7 K) வெப்பநிலையில் இது நேரடியாக திண்ம நிலையை அடைந்து விடும். திண்ம காபனீரொக்சைட்டும் இவ்வெப்பநிலைக்கு மேல் பதங்கமாகி விடும்.

உலர் பனி நேரடியாக வாயு நிலையை அடைதல்

திண்ம காபனீரொக்சைட்டை உலர் பனி என அழைப்பர். வளிமண்டல அமுக்கத்தை விட 5.1 மடங்கு அமுக்கத்திலேயே காபனீரொக்சைட்டின் திரவ நிலையை அவதானிக்க முடியும்.

பிரித்தெடுத்தலும் உற்பத்தியும்[தொகு]

நான்கு பிரதான கைத்தொழில்களின் (சுவட்டு எரிபொருள், ஐதரசன் உற்பத்தி, அமோனியா உற்பத்தி, நொதித்தல்) பக்க விளைபொருளாக காபனீரொக்சைட்டு விளங்குகின்றது. வளியை வடிக்கட்டல் மூலம் இதனை உற்பத்தி செய்தல் நட்டத்துக்குரியதாகும்.

ஐதரோகார்பன்களை எரிக்கும் போது காபனீரொக்சைட்டு விளைபொருளாகக் கிடைக்கின்றது.

CH4+ 2 O2→ CO2+ 2 H2O

சுண்ணக்கல்லை 850°C வெப்பநிலையில் சூடாக்கி நீறாத சுண்ணாம்பை உற்பத்தி செய்யும் போது பக்க விளைபொருளாகக் காபனீரொக்சைட்டு கிடைக்கின்றது.

CaCO3→ CaO + CO2

இரும்பு உற்பத்தியில் இரும்பின் ஒக்சைட்டுகளை காபன்மொனொக்சைட்டு அல்லது கார்பனால் தாழ்த்தும் போது பக்க விளைபொருளாகக் காபனீரொக்சைட்டு கிடைக்கின்றது.

Fe2O3+ 3 CO → 2 Fe + 3 CO2

அற்கஹோல் உற்பத்தியில் காபனீரொக்சைட்டும் அற்கஹோலும் மதுவத்தால் சீனி நொதிக்கப்பட்ட பின் கிடைக்கின்றன.

C6H12O62 CO2+ 2 C2H5OH

ஆய்வுகூட உற்பத்தி[தொகு]

உலோக கார்பனேட்டுகளும் அனேகமான அமிலங்களும் தாக்கமடையும் போது காபனீரொக்சைட்டு வெளிப்படுகின்றது. உதாரணமாக கல்சியம் காபனேற்று (முட்டைக்கோது, சிப்பியோட்டில் பெறலாம்) மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் தாக்கமடையும் தாக்கமானது கல்சியம் குளோரைட்டு மற்றும் காபனீரொக்சைட்டு ஆகியவற்றை விளைவுகளாகத் தோற்றுவிக்கும்.

2 HCl+ CaCO3→ CaCl2+ H2CO3

தொழிற்சாலை உற்பத்தி[தொகு]

காபனீரொக்சைட்டைத் தனியாக உற்பத்தி செய்வதை விட பக்கவிளைபொருளாகப் பெறுவதே இலாபம் ஈட்டித் தரக்கூடியதாகும். எனவே காபனீரொக்சைட்டை பக்கவிளைபொருளாகத் தோற்றுவிக்கும் தொழிற்சாலைகளில் இது உற்பத்தி செய்யப்படு திண்ம உலர் பனியாகவோ அல்லது அமுக்கப்பட்ட வாயுவாகவோ விற்பனை செய்யப்படுகின்றது.

பயன்கள்[தொகு]

சோடாவில் காபனீனொக்சைட்டு குமிழிகள்

தீயணைக்கும் பொருளாகவும் காற்றேற்றம் பெற்ற குளிர்பானங்களிலும், சலவை சோடா மற்றும் ரொட்டி சோடா தயாரிக்கவும் பயன்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகளிலும் உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. சர்க்கரை தொழிற்சாலைகளில் நீர்ம கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.[3]

சுற்றுசூழல் பாதிப்புகள்[தொகு]

கார்பன் டை ஆக்சைடு சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை உருவாக்குகின்றன.மேலும் இது சூரியனின் வெப்ப கதிர்வீச்சினை உறிஞ்சி பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தும் பசுமை இல்ல வாயுகலீல் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.இதுவரையிலான காலகட்டத்தில் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் விலங்குகள் சுவாசித்தல் மூலம் கார்பன் சுழற்சி ஒரு சமநிலையில் வைக்கப்பட்டிருந்தது.எனினும் தொழில் புரட்சிக்கு பிறகு கார்பன் சார்ந்த எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு செறிவு வேகமாக அதிகரித்து உலக வெப்பமயமாதலில் முக்கிய காரணியாக விளங்குகிறது.மேலும் இது தண்ணீரில் கரைந்து வலிமைகுறைந்த கார்பானிக் அமிலமாக மாறுகிறது இதனால் கடல் அமிலமாதல் நிகழ்கிறது.

நச்சுத்தன்மை[தொகு]

காபனீரொக்சைட்டின் அதிக செறிவுக்கேற்றபடியான உலலியல் மாற்றங்கள்

பொதுவாக 1% க்குக் குறைந்த அளவில் காபனீரொக்சைட்டு நச்சுத்தன்மை அற்றது. (சாதாராண வளியில் 0.036% தொடக்கம் 0.039% வரை வேறுபடும்). ஒக்சிசன் போதியளவில் காணப்பட்டாலும் காபனீரொக்சைட்டு செறிவு 7% - 10% இடையில் காணப்படுமானால் கண் பார்வை குறைதல், மயக்கத் தன்மை, தலை நோ என்பன ஏற்படும். ஏனெனில் இரத்தத்தில் ஒக்சிசனின் இடத்தை காபனீரொக்சைட்டு பிடித்துக்கொள்வதலாகும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. Carbon Dioxide at NOAA’S Mauna Loa Observatory reaches new milestone: tops 400 ppm., என்.ஓ.ஏ.ஏ செய்தி அறிக்கை, மே 10, 2013
  2. Sr, Venkatesan (31 அக்டோபர், 2013). "அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி". தினமணி. மூல முகவரியிலிருந்து 31 அக்டோபர், 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 நவம்பர், 2013.
  3. Sr, Venkatesan (31 அக்டோபர், 2013). "அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி". தினமணி. மூல முகவரியிலிருந்து 31 அக்டோபர், 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 நவம்பர், 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனீராக்சைடு&oldid=1887577" இருந்து மீள்விக்கப்பட்டது