உடலியக்க மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இயன்முறைமருத்துவம்
Polio physical therapy.jpg
இந்த இயங்கு மருத்துவர் போலியோ நோயால் தாக்கப்பட்ட இரு சிறார்களுக்கு கம்பிவடத்தைப் பற்றிக்கொண்டு கால் உறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ICD-9-CM 93.0-93.3
MeSH D026761

இயங்குனர் மருத்துவம் அல்லது இயன்முறைமருத்துவம் அல்லது இயக்குமருத்துவம் அல்லது உடற்கூற்று மருத்துவம் (Physiotherapy அல்லது Physical therapy) என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனிநபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது அளிக்கப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டது.

இம்மருத்துவம் வாழ்வின் தரத்தை அறியவும் கூடுதலாக்கவும் ஆய்வு செய்கிறது. இயக்கத்தை மேம்படுத்த, காயங்களை தவிர்த்திட, அடிபடும்போது காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல், ஊனத்தைச் சரிசெய்ய மற்றும் ஊனமுற்றவர் மீளவும் தமது வாழ்க்கைத்தரத்தை பெற்றிட வேண்டிய மருத்துவமுறைகளை குறித்து இம்மருத்துவம் அமைந்துள்ளது. அப்போது எழும் உடல் மற்றும் உளவியல், சமூகநலம் குறித்தும் கவனத்தில் கொள்கிறது. இம்மருத்துவமுறையில் இயங்கு மருத்துவர்கள், நோயாளிகள்/வாடிக்கையாளர்கள், பிற மருத்துவர்கள், குடும்பங்கள், நலம்விரும்பிகள் மற்றும் சூழ்ந்துள்ள சமூகம் முதன்மை பங்கு வகிக்கின்றனர்.[1] Physical therapy is performed by either a physical therapist (PT) or an assistant (PTA) acting under their direction.[2] இயன்முறைமருத்துவம் [3] (ஆங்கிலம்-Physiotherapy-பிசியோதெரபி) என்பது நவீன உலகில் வளர்ந்து வரும் ஒரு சிறந்த மருத்தவ முறையாகும்.

விளக்கம்[தொகு]

பிசியோதெரபி[தெளிவுபடுத்துக] என்பது சக்தி மற்றும் இயக்கங்கள் (உயிர்-இயக்கவியல் அல்லது நுண்ணுயிரியல்), கையேடு சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் எலெக்ட்ரோதெரபி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குறைபாடுகளை சரிசெய்து, நோயாளிகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் இது இணைந்த ஆரோக்கியமான மருத்துவ முறை ஆகும். நோயாளிகளின் உடல் பரிசோதனை, நோய் கண்டறிதல், முன்கணிப்பு மற்றும் உடல் பயிற்சி சிகிச்சை மூலம் நோயாளியின் உயிர் தரத்தை மேம்படுத்துவதற்கு இயன்முறைமருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.

இயன்முறைமருத்துவ கல்வி[தொகு]

இயன்முறைமருத்துவ கல்வி ஒரு தொழில் முறை கல்வி ஆகும். இது தசைகள், உடல் திறன் விளையாட்டு, நரம்பியல், காயம் பாதுகாப்பு, குழந்தைகள் நலன், இதயவியல் நுரையீரல், வயது மூப்பு, எலும்பியல், பெண்கள் ஆரோக்கியம், மற்றும் சிறுநீரகம் போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட தொழில்முறை கல்வி. இது குறிப்பாக நரம்பியல் மற்றும் மறுவாழ்வு துறையில் வேகமாக வளர்ந்துவரும் மருத்துவம் ஆகும். இயன்முறைமருத்துவத்தை வழங்குபவர் இயன்முறைமருத்துவர் (Physiotherapist) ஆவார்.

இந்தியாவில்[தொகு]

இளங்கலை படிப்பு[தொகு]

இயன்முறைமருத்துவ படிப்பை படிக்க பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டின் இயற்பியல் வேதியியல் உயிரியல் அல்லது தாவரவியல் & விலங்கியல் பாட பிரிவில் தேற்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இயன்முறைமருத்துவத்திற்கான மாணவர்களின் கலந்தாய்வு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் அரசு நடத்துகிறத.நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்:

முதுகலை படிப்பு-இரண்டு வருடங்கள்[தொகு]

எலும்பியல், நரம்பியல், இதயவியல், உடல் திறன் விளையாட்டுக்கான இயன்முறைமருத்துவ முதுகலை படிப்பு.

இயன்முறைமருத்துவ படிப்பிற்கான முனைவர் பட்டம்[தொகு]

சில இயன்முறைமருத்துவ கல்லூரிகள்[தொகு]

 • அரசு புனர்வாழ்வளிக்கும் மருத்துவ நிறுவனம், சென்னை.[4]
 • அரசு இயன்முறைமருத்துவ கல்லூரி, திருச்சி.[4]
 • அப்பல்லோ பிசியோதெரபி கல்லூரி,ஹைதராபாத்.[5]
 • ஸ்ரீ ராமகிருஷ்ண பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.[6]
 • சேரன் பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.[7]
 • விநாயக மிஷன் பிசியோதெரபி கல்லூரி, சேலம்.[8]
 • ஆர்.வி.எஸ். பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.
 • பிசியோதெரபி கல்லூரி, அகமதுநகர்.[9]
 • மகாத்மா காந்தி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, கோட்டயம்.[10]
 • கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிபால்.
 • அரசு மருத்துவ கல்லூரி, நாக்பூர்

புனர்வாழ்வு[தொகு]

புனர்வாழ்வு என்பது நோயுற்ற பிறகு பயிற்சி மற்றும் சிகிச்சையின் மூலம் உடல், மனது மற்றும் சமூக அடிப்படையில் ஆரோக்கியமான அல்லது சாதாரண வாழ்க்கைக்கு ஒருவரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை. இதில் இயன்முறைமருத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.

மேற்கோள்[தொகு]

 1. Description of Physical Therapy – The World Confederation for Physical Therapy (WCPT)
 2. American Physical Therapy Association. "Discovering Physical Therapy. What is physical therapy". American Physical Therapy Association. பார்த்த நாள் 2008-05-29.
 3. "இயன்முறைமருத்துவம்".
 4. 4.0 4.1 "இயன்முறைமருத்துவ கல்லூரிகள்".
 5. https://hyderabad.apollohospitals.com/college-of-physiotherapy/
 6. http://www.sriramakrishnacollegeofphysiotherapy.com/principal-profile.html
 7. http://cherancolleges.org/college-of-physiotherapy/
 8. https://www.vinayakamission.com/Physiotherapy.php
 9. http://www.paruluniversity.ac.in/faculty/faculty-of-physiotherapy/ahmedabad-physiotherapy-college/
 10. http://sme.edu.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடலியக்க_மருத்துவம்&oldid=2532579" இருந்து மீள்விக்கப்பட்டது