சிட்ரிக் அமில சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்ருலின் சுழற்சி ஒரு மீள்பார்வை

சிட்ரிக் அமில சுழற்சி (Citric acid cycle) (அ) டிரை கார்பாக்சிலிக் அமில (TCA) சுழற்சி என்னும் கிரெப்ஸ் சுழற்சியானது நொதிகளால் வினையூக்கப்பட்ட தொடர் வேதி வினைகளாகும். இச்சுழற்சி, உயிர்வளியை உயிரணு சுவாசித்தலுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து உயிரணுக்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நிகழ்முறையின் சுருக்கம்[தொகு]

  • சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் படியில் இரு கார்பன் அசெடைல் தொகுதி, அசெட்டைல் துணைநொதி A - விலிருந்து நான்கு கார்பன் ஏற்புச் சேர்மம் ஆக்சலோஅசெடேட்டுக்கு மாற்றப்பட்டு ஆறு கார்பன் சிட்ரேட்டாக உருவாகிறது.
  • சிட்ரேட் பின்னர் தொடர் வேதிமாற்றங்களையடைந்து இரு கார்பாக்சில் தொகுதிகளை (ஆக்சலோஅசெடேட்டிலிருந்து, அசெட்டைல் துணைநொதி A கார்பனிலிருந்து இல்லை) கார்பன் டை ஆக்சைடாக இழக்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் சுற்றில் அசெட்டைல் துணைநொதி A கார்பன்கள் ஆக்சலோ அசெடேட்டின் கட்டமைப்பு கார்பன்களாக உள்ளது.
  • இச்சுழற்சியில் உயிர்வளியேற்றத்தினால் உருவான சக்தியானது, சக்தி-நிறைந்த மின்னணுவாக NAD+ க்கு மாற்றம் செய்யப்பட்டு NADH உருவாகிறது. ஒவ்வொரு அசெடைல் தொகுதிக்கும் மூன்று NADH மூலக்கூறுகள் உருவாகிறது.
  • மின்னணுகள், மின்னணு ஏற்பி "Q" -வுக்கும் மாற்றப்பட்டு "QH2" உருவாகிறது.
  • சுழற்சியின் முடிவில், ஆக்சலோஅசெடேட் மீளாக்கப்பட்டு சுழற்சி தொடர்கிறது.

வினைகள் அட்டவணை[தொகு]

படி வினைபொருட்கள் விளைபொருட்கள் நொதிகள் வினை வகைகள் குறிப்புகள்
1 ஆக்சலோ அசெடேட்டு +
அசெட்டைல் துணைநொதி A +
H2O
சிட்ரேட்டு+
துணைநொதி A-SH
சிட்ரேட்டு தொகுப்பி அல்டால் ஒடுக்கம் மீளாநிலை,
4C ஆக்சலோஅசெடேட்டு - 6C மூலக்கூறாக நீட்டல்
2 சிட்ரேட்டு ஒரு பக்க-அகோனிடேட்டு +
H2O
அகோனிடேசு நீரகற்றல் மீளக்கூடிய மாற்றியமாக்கல்
3 ஒரு பக்க-அகோனிடேட்டு +
H2O
ஐசோசிட்ரேட்டு நீரேற்றம்
4 ஐசோசிட்ரேட்டு +
NAD+
ஆக்சலோசக்சினேட்டு +
NADH + H +
ஐசோசிட்ரேட் ஐட்ரசன் நீக்கி உயிர்வளியேற்றம் NADH உருவாகிறது (= 2.5 ATP)
5 ஆக்சலோசக்சினேட்டு α-கீட்டோ குளூடாரேட்டு +
CO2
கார்பாக்சிலகற்றல் வினை வீதவரம்பு, மீளாநிலை,
5C மூலக்கூறுகள் உருவாகிறது
6 α-கீட்டோ குளூடாரேட்டு +
NAD+ +
CoA-SH
சக்சினைல் துணைநொதி A +
NADH + H+ +
CO2
α-கீட்டோ குளூடாரேட்டு ஹைட்ரசன் நீக்கி உயிர்வளியேற்ற
கார்பாக்சிலகற்றல்
மீளாநிலை,
NADH உருவாகிறது (= 2.5 ATP),
4C தொடரி மீளாக்கம் [துணைநொதி A (Co A) தவிர்க்கப்பட்டது]
7 சக்சினைல் துணைநொதி A +
GDP + Pi
சக்சினேட்டு +
CoA-SH +
GTP
சக்சினைல் துணைநொதி A இணைப்பி வினைபொருள் மட்டத்தில் பாஸ்ஃபோ ஏற்றம் (அ) GDP→GTP-க்கு பதிலாக ADP→ATP[1]
ஒரு ATP (அ) அதற்குச் சமமான உருவாக்கம்
8 சக்சினேட்டு +
யுபிகுவினோன் (Q)
ஃபியூமரேட்டு +
யுபிகுவினோல் (QH2)
சக்சினேட் ஐட்ரசன் நீக்கி உயிர்வளியேற்றம் நொதியானது FAD -அய் இணைத் தொகுதியாக பயன்படுத்துகிறது (வினையின் முதல் கட்டத்தில்: FAD→FADH2),[1]
= 1.5 ATP உருவாகிறது
9 ஃபியூமரேட்டு+
H2O
L-மேலேட்டு ஃபியூமரேசு நீரேற்றம்
10 L-மேலேட்டு +
NAD+
ஆக்சலோ அசெடேட்டு +
NADH + H+
மேலேட் ஐட்ரசன் நீக்கி உயிர்வளியேற்றம் மீளக்கூடியது (வினையின் சமநிலை மேலேட்டிற்கு சாதகமாக உள்ளது), NADH உருவாகிறது (= 2.5 ATP)

விளைபொருட்கள்[தொகு]

முதல் சுழற்சியில் விளையும் பொருள்கள்: ஒரு GTP (அல்லது ATP), மூன்று NADH, ஒரு QH2, இரண்டு CO2.

ஒரு குளுகோஸ் மூலக்கூற்றிலிருந்து, இரண்டு அசெடைல் - துணைநொதி A உருவாவதால், ஒரு குளுகோஸ் மூலக்கூற்றிற்கு, இரு சிட்ரிக் அமில சுழற்சிகள் தேவைபடுகிறது. எனவே, இரு சுழற்சிகளில் விளையும் பொருள்கள்: இரண்டு GTP, ஆறு NADH, இரண்டு QH2 மற்றும் நான்கு CO2.

விவரணம் வினைபொருட்கள்' விளைபொருட்கள்
சிட்ரிக் அமில சுழற்சியின் ஒட்டுமொத்தச் சமன்பாடுகள் அசெடைல் - துணைநொதி A + 3 NAD+ + Q + GDP + Pi + 2 H2O → CoA-SH + 3 NADH + 3 H+ + QH2 + GTP + 2 CO2
பைருவேட்உயிர்வளியேற்ற வினைகளையும், சிட்ரிக் அமில சுழற்சி வினைகளையும் இணைத்தால், பைருவேட்உயிர்வளியேற்ற வினைக்கான ஒட்டுமொத்தச் சமன்பாடுகள் பைருவேட் அயனி + 4 NAD+ + Q + GDP + Pi + 2 H2O → 4 NADH + 4 H+ + QH2 + GTP + 3 CO2
மேற்கண்ட வினைகளை சர்க்கரைச் சிதைவு வினைகளுடன் இணைக்கும்போது, குளுகோஸ் உயிர்வளியேற்ற வினைக்கான ஒட்டுமொத்தச் சமன்பாடுகள் (சுவாசச்சங்கிலி வினைகளைத் தவிர்த்து) குளுகோஸ் + 10 NAD+ + 2 Q + 2 ADP + 2 GDP + 4 Pi + 2 H2O → 10 NADH + 10 H+ + 2 QH2 + 2 ATP + 2 GTP + 6 CO2

H2PO4- அயனியை Pi யும் ADP மற்றும் GDP, ADP2- மற்றும் GDP2- அயனிகளையும், ATP மற்றும் GTP, ATP3- மற்றும் GTP3- அயனிகளையும் முறையேக் குறிப்பிடும்பொழுது மேற்கண்ட வினைகள் சமன் செய்யப்படுகிறது.

கூடுதல் படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Berg, J. M.; Tymoczko, J. L.; Stryer, L. (2002). Biochemistry (5th ). WH Freeman and Company. பக். 476. ISBN 0-7167-4684-0.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Stryer" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ரிக்_அமில_சுழற்சி&oldid=2222352" இருந்து மீள்விக்கப்பட்டது