பரிசோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒவ்வொரு இளைய குழந்தையும் உலகைப் பற்றியும் பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் பற்றியும் தொடக்க நிலை ஆய்வுகளை நிகழ்த்துகின்றன.

பரிசோதனை (An experiment) என்பது ஒரு கருதுகோளை ஆதரிப்பதற்கு, மறுப்பதற்கு, அல்லது செல்லத்தக்கதாக்குவதற்காக பயன்படுத்தப்படும் செயல்முறையாகும். ஒரு குறிப்பிட்ட காரணியானது கையாளப்படும் போது என்ன விளைவு ஏற்பட்டது என்பதை நிரூபிப்பதன் மூலம் சோதனையையும் விளைவுகளையும் நுணுக்கமாக பரிசோதிக்கிறது.பரிசோதனைகள் இலக்கு மற்றும் அளவு ஆகியவற்றில் பெரிதும் வேறுபடுகின்றன. ஆனால், முடிவுகள் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கத்தக்க நடைமுறை மற்றும் தருக்கரீதியா பகுப்பாய்வு ஆகியவற்றை எப்போதும் சார்ந்திருக்கின்றன. இயற்கையான சோதனை ஆய்வுகள் உள்ளன. இயல்பான பரிசோதனை குறித்த ஆய்வுகளும் உள்ளன.

ஒரு குழந்தையானது, புவியீர்ப்பைப் புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படை சோதனைகளை எளிதில் நடத்தி விடலாம். ஆனால், அதே நேரத்தில் அறிவியலாளர்கள் தங்களின் விழிப்புணர்வை பற்றிய புரிதலை முன்னெடுக்க பல ஆண்டுகள் விடாமுயற்சி தேவைப்படலாம். அறிவியல் வகுப்பறையில் மாணவர்களின் கற்றலுக்கு மிகவும் அவசியமானது. ஒரு நீடித்த காலத்திற்கு பரிசோதனைகள் மூலம் செய்து கற்றலைப் பயன்படுத்துவதால், தேர்வுகளின் மதிப்பெண்களை உயர்த்தவும், ஒரு மாணவர் தான் கற்றுக் கொள்ளும் பொருள் குறித்து அதிக ஈடுபாடு கொண்டவராக மாறவும், ஆர்வத்துடன் கற்கவும் அது பயன்படக்கூடும்.[1] பரிசோதனைகள், தனிப்பட்ட மற்றும் முறைசாராத, இயற்கையான ஒப்பீடுகளிலிருந்து (எ.கா. ஒரு விருப்பத்தை கண்டறிவதற்காக இனிப்பு வகைகளை சுவைத்தல்), மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட (உ.ம். அணுவின் அடிப்படைத் துகள்களைப் பற்றிய தகவல்களை அறிய முடியும் என்ற நம்பிக்கையுடன் பல அறிவியலாளர்களால் ஆய்வு செய்யப்பட்ட சிக்கலான உபகரண அமைப்புகளைக் கொண்டு செய்யப்படும் சோதனைகள்) சூழ்நிலைகள் வரை வேறுபடுகின்றன. பரிசோதனைகளின் பயன்கள் இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய புலங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேறுபடுகின்றன. ஒற்றை தற்சார்பு மாறி தவிர வேறு மாறிகளால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்திகளை பரிசோதனைகள் உள்ளடக்கியுள்ளன. இது முடிவுகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது, பெரும்பாலும் கட்டுப்பாட்டு அளவீடுகளுக்கும் மற்ற அளவீடுகளுக்கும் இடையில் ஒப்பீடு மேற்கொள்ளப்படுகிறது. அறிவியல்ரீதியான கட்டுப்பாடுகள் அறிவியல் முறையின் ஒரு பகுதியாகும். இயல்பான, ஒரு பரிசோதனையில் அனைத்து மாறிகளும் கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் (கட்டுப்படுத்தப்பட்ட அளவீடுகள் மூலம் கணக்கில் கொண்டு வரப்படுகின்றன) மற்றும் எவையுமே கட்டுப்பாடற்றவையாகவும் இருக்கின்றன. அத்தகைய ஒரு பரிசோதனையில், அனைத்து கட்டுப்படுத்திகளும் எதிர்பார்த்தபடி வேலை செய்தால், பரிசோதனையானது எதிர்பார்த்தபடி வேலை செய்வதாக முடிவு செய்ய முடியும், மேலும், முடிவுகளானவை, சோதனைக்குட்படுத்தப்பட்ட மாறிகளால் ஏற்பட்ட விளைவின் காரணமாக ஏற்பட்டவையாக இருக்கலாம்.

கண்ணோட்டம்[தொகு]

அறிவியல் முறையில், ஒரு சோதனை என்பது அனுபவபூர்வமாக, போட்டியிடக் கூடிய கருதுகோள்கள் மற்றும் மாதிரிகளை ஆய்ந்து நடுநிலையான முடிவைக் கூறும் நடைமுறையாகும்.[2][3] ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே இருக்கும் அறிவியல் கோட்பாடுகள் அல்லது புதிய கருதுகோள்களை ஆராய்ந்து, அவற்றை ஆதரிப்பதற்காகவோ அல்லது நிராகரிப்பதற்காகவோ பரிசோதனையைப் பயன்படுத்துகின்றனர்.[3][4] ஒரு பரிசோதனையானது ஒரு கருதுகோளைச் சோதிக்கிறது. பரிசோதனையானது, ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது நிகழ்வு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய எதிர்பார்ப்பு ஆகும். ஆயினும், ஒரு பரிசோதனையானது, பரிசோதனை என்ன வெளிப்படுத்துகிறது என்ற குறிப்பிட்ட எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு "என்ன-என்றால்" கேள்விக்கு பதில் கூறுவதாகவும் அமையலாம். ஒரு பரிசோதனையைக் கவனமாக நடத்தினால், முடிவுகள் பொதுவாக கருதுகோளை ஆதரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்யும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசோதனை&oldid=3937305" இலிருந்து மீள்விக்கப்பட்டது