உள்ளடக்கத்துக்குச் செல்

டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டன் (அல்லது தொன்) என்பது பல சொற்பொருள்களில் வழங்கும் ஓர் அலகு (அளவையியல்). இது எடையைக் குறிக்கவும்[சான்று தேவை], கொள்ளளவைக் குறிக்கவும், ஆற்றலைக் குறிக்கவும், விசையைக் குறிக்கவும் பயன்படுத்தும் அலகுகளில் பயன்படும் சொல்.

எடை

[தொகு]

எடையைக் குறிக்கும் டன் என்னும் சொல் பொதுவாக மூன்று பொருளில் ஆளப்படுகின்றது.

 • மெட்ரிக் டன் 1000 கிலோ கிராம் எடை கொண்டது. இது ஏறத்தாழ 2,204.6 பவுண்டு எடை ஆகும்.
 • பெரிய டன் (லாங் டன்) என்பது ஐக்கிய இராச்சியத்தில் முன்னர் பயன்படுத்திய இம்ப்பீரியல் அலகு முறையில் 2,240 பவுண்டு எடையைக் குறித்தது. 17-18 ஆவது நூற்றாண்டுகளில் இரும்பு எடையைக் குறிக்க சின்ன எடை டன் (ஷார்ட் வெய்ட் டன்) என்பது 2,240 பவுண்டும், பெரிய டன் என்பது 2400 பவுண்டும் என்று வழக்கில் இருந்தது.
  • பெரிய டன் (லாங் டன்) என்பது பெட்ரோலியம் முதலியவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர்.
  • கப்பல்களில் ஏற்றிச்செல்லும் எண்ணெய், மற்றும் பொருள்களை அளவிட டெட் வெய்ட் டன் (deadweight ton, dwt) என்னும் அளவைப் பயன்படுத்துகின்றனர். இதன் எடை 2,240 பவுண்டு (= 1016 கிலோ கிராம்). இது அமெரிக்காவிலும் பயன்படுத்துகின்றனர்.
 • சின்ன டன் (ஷார்ட் டன்) என்பது 2000 பவுண்டு ( = 907.18474 கிலோ கிராம்).

விசை

[தொகு]

விசையைக் குறிக்க SI அலகுகள் அல்லாதவற்றுள் கிலோ கிராம் விசை என்று கூறுவதுபோல டன் விசை என்று கூறுவதுண்டு.

 • 1 சின்ன டன் (ஷார்ட் டன்) விசை = 2000 பவுண்டு விசை = 8.896443230521 கிலோநியூட்டன் (kN)
 • 1 பெரிய டன் விசை (லாங் டன் விசை) = 2240 பவுண்டு-விசை (lbf) = 9.96401641818352 kN
 • 1 டன் விசை = 1000 கிலோ கிராம் விசை (kgf) = 9.80665 kN

கொள்ளளவு

[தொகு]

கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படும் கொள்ளளவைக் குறிக்க டன் என்னும் சொல் பயன் படுகின்றது. இதனைச் சரக்கு டன்னேஜ் என்றும் சொல்வர்.

ஒரு டன் என்பது:

ஆற்றலும் திறனும் குறிக்கப் பயன்படும் அலகுகள்

[தொகு]

டன் என்னும் சொல் ஆற்றலின் அலகுகளில் ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக வெடிகுண்டுகள், அணுகுண்டு போன்ற வெடி பொருட்களின் அளவைக் குறிப்பிட TNT (டி.என்.டி) எனப்படும் டிரை-நைட்ரோ-தொலியீன் (TNT Trinitrotoluene) என்னும் வேதிப்பொருளின் வெடிப்பின் வழி வெளியாகும் ஆற்றலைக் குறிப்பர்.

ஒரு டி.என்.டி டன் என்பது

 • 109 (வெப்பவேதியியல்) கலோரி ஆற்றல் ஆகும். இது கிகாகலோரி (gigacalorie) (Gcal) என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் அளவு SI அலகான ஜூல் வழி சொல்லும் பொழுது 4.184 கிகாஜூல் (gigajoules) (GJ) ஆகும்.
 • ஒரு கிலோடன் டி.என்.டி என்பது 1012 காலரிகள் அல்லது டெராகலோரி (teracalorie) (Tcal), அல்லது 4.184 டெராஜூல் (terajoules) (TJ) அளவு ஆற்றலாகும்.
 • ஒரு மெகா டன் டி.என்.டி என்பது (1,000,000 மெட்ரிக் டன்). இது ஒரு பேட்டா கலோரி (petacalorie) (Pcal) அல்லது 4.184 பேட்டா ஜூல் (petajoules) (PJ) ஆற்றலாகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டன்&oldid=3038421" இலிருந்து மீள்விக்கப்பட்டது