கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இத்தாலியக் கப்பலான அமெரிகோ வெஸ்புச்சி (Amerigo Vespucci), 1976 இல் நியூ யார்க் துறைமுகத்தில் நின்றபோது எடுக்கப்பட்ட படம்.

கப்பல், ஒரு பெரிய கடலோடும் வாகனமாகும். சில வேளைகளில், கப்பலில் பல அடுக்குகளும் இருக்கக்கூடும். மேலும், கப்பலானது அதற்கு தேவையான அளவு பல்வேறு வகையான படகுகளையும் தன்னகத்தே வைத்திருக்கக் கூடியது. உயிர்காப்புப் படகுகள், திருப்புப்படகுகள், இழுவைப் படகுகள் போன்றன இவற்றுள் அடங்கும். "ஒரு படகை கப்பலில் உள்ளடக்க முடியும், ஆனால் கப்பலைப் படகில் உள்ளடக்க முடியாது". என்ற மரபுச் சொல் வழக்கானது ஒரு கப்பலுக்கும், படகுக்கும் இடையிலான அளவு வேறுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்கும் என்பதற்கு இல்லை. பல்வேறு நாடுகளிலும் உள்ள உள்ளூர்ச் சட்டங்களும், விதிகளும் அளவு, பாய்மரங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு படகு, கப்பல் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கின்றன.

கப்பல்கள் மற்றும் படகுகள் மனித வரலாற்றுடன் இணைந்து வளர்ந்தது. ஆயுத மோதல் மற்றும் அன்றாட வாழ்வில் அவை நவீன வணிக மற்றும் இராணுவ அமைப்புகளில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களால் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இராணுவ படைகள் போர் மற்றும் படைகளின் போக்குவரத்திற்காக இயங்குகின்றன. கிட்டத்தட்ட 35,000 வர்த்தக கப்பல்கள் 2007 ல் 7.4 பில்லியன் டன் எடையுள்ள சரக்கை ஏற்றிசென்றன. [1]

கப்பல்கள் எப்போதும் வரலாற்றின் கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணமாக இருந்தன. கடல்வழி பயணங்களால் தான் திசைகாட்டி, வெடிமருந்து போன்ற கண்டுபிடிப்புகள் பரவியது. கப்பல்கள் காலனித்துவம் மற்றும் அடிமை வர்த்தகம் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர், ஐரோப்பிய மாலுமிகள் வழியாக அமெரிக்காவிற்கு வந்த புதிய பயிர்களினால் கணிசமாக உலக மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது. [2] கடல்வழி போக்குவரத்து இன்றைய உலக பொருளாதார முறையை உருவாக்கியுள்ளது.

வரலாறு[தொகு]

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால காலகட்டத்திற்கு முன்பிருந்தே, மனிதன் கப்பல்களை அறிந்திருந்தான். ஆனால் அவற்றை முறையான கப்பல்கள் என்று கொள்ள முடியாது. முதலில் விலங்கு தோல்கள் அல்லது நெய்த துணிகளை sails பயன்படுத்த தொடங்னர். ஒரு படகில் நிமிர்த்தியவாறு அமைக்கப்பட ஒரு கம்பின் மேல் முனையில் இவற்றை இணைத்து, நெடுந்தூரப்பயனங்களுக்கு பயன்படுத்தினான்.

மொகெஞ்சதாரோவில் காணப்பட்ட ஒரு பலகை மிதக்கும் படகோட்டத்தை சித்தரித்தது. கப்பல்கள் பல வகையாக இருந்தன; அவற்றின் கட்டுமானத்தை யுக்தி கல்ப தரு என்ற பண்டைய இந்திய உரை விவரிக்கிறது. இது கப்பல் கட்டும் நுட்பங்களை அறிய ஒரு தொழில்நுட்ப விளக்கத்தை கொடுக்கிறது. இது பல்வேறு கப்பல்களின் வகைகள், அவற்றின் அளவுகள், மற்றும் அவை கட்டப்பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை கொடுக்கிறது.

கப்பல்களின் வகைகள்[தொகு]

வர்த்தக கப்பல்கள்[தொகு]

வர்த்தக கப்பல்கள் அல்லது வணிக கப்பல்களை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் - சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், மற்றும் சிறப்பு தேவை கப்பல்கள்.[3] சரக்கு கப்பல்கள் உலர் மற்றும் திரவ சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுகிறது.

பயணிகள் கப்பல்களின் அளவு சிறிய ஆற்று படகுகளில் இருந்து மிக பெரிய கப்பல்கள் வரை செல்லும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிகளை கொண்டு செல்லும் கப்பல்கள், குறுகிய பயணங்களுக்கு பயணிகள் மற்றும் வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல்கள், இன்ப பயணங்கள் மேற்கொள்ளப்படும் கப்பல்கள் இந்த வகையில் அடங்கும்.

கடற்படை கப்பல்கள்[தொகு]

கடற்படை கப்பல்கள், இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கப்பல்கள் ஆகும். கடற்படை கப்பல் பல வகையாக உள்ளன. கடலின் மேற்பரப்பில் போர் புரியும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், மற்றும் ஆதரவு மற்றும் துணை கப்பல்கள்.

பெரும்பாலான இராணுவ நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகும். இரண்டாம் உலக போரின் முடிவு வரை டீசல் / மின்சார நீர்மூழ்கிகளின் முதன்மை பணி கப்பல் எதிர்ப்பு போர், இராணுவ படைகளுக்கு உதவி மற்றும் உளவு பணிகள். சிறந்த சோனார் அமைப்புகள், அணு உந்துவிசை வளர்ச்சி போன்ற காரணிகளால் நீர்மூழ்கி கப்பல்கள் திறம்பட பணிபுரிய முடிந்தது.

மீன்பிடி படகுகள்[தொகு]

மீன்பிடி படகுகள் வர்த்தக கப்பல்களின் ஒரு துணைக்குழு, ஆனால் அளவு சிறியதாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் இருக்கும். அவற்றை பல விதங்களிலும் வகைப்படுத்த முடியும்: கட்டுமானம், அவற்றல் பிடிக்கப்படும் மீன்களின் வகை, பயன்படுத்தப்படும் மீன்பிடி முறை, புவியியல் தோற்றம், மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்.

படகுகளும், கப்பல்களும்[தொகு]

கட்டுமானம்[தொகு]

கப்பல் கட்டுமானம் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறுகிறது. கட்டப்படும் கப்பலின் அளவை பொருத்து அது ஒரு சில மாதங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கும். கப்பல் கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கப்பலின் அளவு போன்றவை கட்டுமான முறையை தீர்மானிப்பதில் ஒரு பெரிய பங்கு வகிக்கும். ஒரு கண்ணாடியிழை படகு மேலோடு அச்சிலிருந்தும், ஒரு சரக்கு கப்பல் எஃகு பாகங்களை ஒன்றாக பற்ற வைத்தும் கட்டப்படுகிறது.

பொதுவாக, கப்பலின் கட்டுமானம் அதன் வெளிப்புற சுவர் கட்டப்படுவதுடன் தொடங்குகிறது. இது பெரும்பாலும் நிலப்பகுதியில் செய்யப்படுகிறது. வர்ணம் பூசப்பட்ட பின், அது மிதக்கவிடப்படுகிறது. மேல் பகுதிகளை கட்டுவதும் உபகரணங்களை நிறுவுவதும் பின்னர் செய்யப்படும். கப்பல் தொடங்குதல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக இருக்கிறது. வழக்கமாக கப்பல் அப்போது தான் முறையாக பெயரிடப்படும்.

மேலும் காண்க[தொகு]

பட்டியல்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. UNCTAD 2007, p. x and p. 32.
  2. "The Columbian Exchange"வடக்கு கரோலினா பல்கலைக்கழகம்.
  3. UNCTAD 2007, p. xii இதே போன்ற, ஆனால் சற்றே விரிவான வகைப்பாடு முறையை பயன்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பல்&oldid=2160693" இருந்து மீள்விக்கப்பட்டது