மீன்பிடிக் கலன்கள்
மீன்பிடிக் கலன் என்பது படகு அல்லது கப்பலைக் கொண்டு கடல், ஏரி, ஆறு ஆகிய நீர்நிலைகளில் மீன்களைப் பிடிக்க உதவும் சாதனமாகும். பல்வேறு வகையான மீன்பிடிக் கலன்கள் வணிக முறையான மீன் பிடித்தலில் பயன்படுத்தப்படுகின்றன. FAO வின் படி 2004 களில் நான்கு மில்லியன் மீன்பிடிக் கலன்கள் மீன் பிடித்தலில் பயன்படுத்தபடுகின்றன.[1]
பெரிய அளவில் மீன்பிடித்தலுக்கு மீன்பிடிப்பு கலன்கள் பயன்படுகின்றன. கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு பெரிய வகையான மீன் பிடிப்பிற்கு ஏற்றார்போல படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இரண்டு வகையான மீன் பிடிப்பு கலன்கள் உள்ளன. அவை:
மீன்பிடிக்கலன்களின் வகைகள்
[தொகு]- இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.
- இயந்திரப் படகுகள்
இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள்
[தொகு]கட்டுமரம், வள்ளம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள் ஆகும்.
கட்டுமரம்
[தொகு]இது ஒரு எளிமையான மீன்பிடிப்பு கலனாகும். சில வளைவு மரத்துண்டுகளை இணைத்து கட்டுமரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதை கிழக்குக் கடற்கரை பகுதிகளில் உபயோகிக்கின்றனர். ஒரிசா வகை, ஆந்திரா வகை, கோரமண்டல் வகை மற்றும் கன்னியாகுமரி வகை என்பன இந்தியாவில் மீன் பிடித்தலுக்குப் பயன்படும் நான்கு வகையான கட்டுமரங்கள் ஆகும்.
கடல்தோண்டி
[தொகு]கடற்கரை அருகில் உள்ள மீன்களை பிடிக்க உதவும் எளிமையான மீன்பிடிப்புத் தோணி வகை கடல் தோண்டி ஆகும். சிறு அளவுடைய தோணி மரப்பலகையினால் செய்யப்படுகிறது. இந்தியாவின் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் ஓடம், தோணி, வன்சியஸ் ஆகியவற்றை மீன் பிடிக்க பயன்படுத்துகின்றனர்.
மரப்பலகை தோணி
[தொகு]இது பெரிய வகையான தோண்டித் தோணியாகும். மரப்பலகையினால் ஆனது. கேரளாவில் மீன்பிடித்தலுக்குப் இவ்வகைத் தோணிகளைப் பயன்படுத்துகின்றனர்.
மசுலா படகு
[தொகு]ஆந்திராவில் மீன் பிடித்தலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது மசுலா படகு ஆகும். பாய்மரத்தை தென்னை நாரால் ஆன கயிறு மூலம் இணைத்து மசுலா படகு கட்டப்படுகிறது.
திங்கி
[தொகு]செதுக்கிய படகுகள் திங்கி என்று அழைக்கப்படுகிறது. இது பல விதமாக மீன்பிடித்தலுக்குப் பயன்படுகிறது.
வெளிமரத்தோணி
[தொகு]மரப்பலகையுடன் வெளியே ஒரு மரதோணியை இணைத்தால் வெளிமரத்தோணி. இது ரம்பணி படகு போன்றது. இதனை கர்நாடகாவில் மீன் பிடிப்பிற்குப் பயன்படுத்துகின்றனர்.
இயந்திர படகுகள்
[தொகு]மீன் பிடிக்க சிறு அல்லது நடுத்தர, சுமார் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் நீளமுள்ள படகுகளில் இயந்திரம் பொருத்தப்பட்டு அவைகளின் மூலம் தொலைவான இடஙகளுக்கு சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு,பொறி படகு, செவுள் வலைப் படகு, விசைப்படகு ஆகியவை இயந்திர மீன்பிடிப்புப் படகுகளாகும்.
கைத் தூண்டில் படகு
[தொகு]கைத்தூண்டில் படகு கடல் ஆழமில்லாத மற்றும் ஆழமுள்ள இடங்களில் உபயோகிக்கலாம். இந்திய மீன்பிடிப்பு படகில் கொக்கியுடன் 0.5மி.மீ-1மி.மீ அளவில் அமிழ்கட்டையில் ஒரு சிறு கல்லை கட்டி இயந்திரம் மூலம் இயக்குவார்கள். இந்தப் படகில் அனைத்து மீன்களையும் பிடிக்கலாம்.
கழி மூலம் மீன்பிடிப்பு
[தொகு]படகில் கழிகளை இணைத்து படகு தளத்தின் மேல் கலன்களை சேர்த்து, முன்பகுதியில் அம்பு வடிவத்தில் கழிகளை வைத்து மீன் பிடிப்பார்கள். இந்தியாவில் இதை ‘மஸ் ஒடி’ என்பார்கள்.
செவுள் வலை
[தொகு]செவுள் வலைக்கு ஏற்றவாறு கலன் அளவை பயன்படுத்தலாம். வலையின் எண்ணிக்கை கலன் அளவை பொருத்தே அமையும். படகின் முகப்பு முதல் அட்டி வரை உள்ள மீன்பிடிப்பு கலன்கள் மூலம் ஒரு கூட்ட மீன்களைப் பிடிக்கலாம். இக்கலனில் இயந்திர அறை மற்றும் செவுள் வலை வைக்க பின்புறம் இடம் அமைந்திருக்கும். படகு முழுவதும் இயந்திரம் மூலம் இயக்கப்படும்.[2]