மிசிசிப்பி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிசிசிப்பி ஆறு
Mississippi River - New Orleans.jpg
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலங்கள் மினசோட்டா, விஸ்கொன்சின், அயோவா, இலினொய், மிசூரி, கென்டக்கி, தென்னசி, ஆர்கன்சா, மிசிசிப்பி, லூசியானா
முதன்மை
நகரங்கள்
மினியாபொலிஸ் மற்றும் செயின்ட் பால், மினசோட்டா, செயின்ட் லூயிஸ், மிசூரி, மெம்ஃபிஸ், டென்னசி, பாடன் ரூஜ், லூசியானா, நியூ ஓர்லென்ஸ், லூசியானா
நீளம் 2,320 மைல் (3,734 கிமீ)
வடிநிலம் 11,51,000 ச.மைல் (29,81,076 கிமீ²)
வெளியேற்றம் பாடன் ரூஜ், LA
 - சராசரி [1]
வெளியேறும்
பிற இடங்கள்
 - சென். லூயிஸ் [2]
மூலம் இத்தாஸ்கா ஏரி
 - அமைவிடம் இத்தாஸ்கா அரச பூங்கா, கிளியர்வாட்டர் கவுண்டி, MN
 - உயரம் 1,475 அடி (450 மீ)
கழிமுகம் மெக்சிக்கோ குடா
 - அமைவிடம் பைலட்டவுன், பிளாக்மைன்ஸ் பாரிஷ், LA
 - உயரம் அடி (0 மீ)
முதன்மைக்
கிளை ஆறுகள்
 - இடம் ஒஹைய்யோ ஆறு
 - வலம் மிசூரி ஆறு, ஆர்கன்சா ஆறு
மிசிசிப்பி ஆற்றின் நிலப்படம்.
மிசிசிப்பி ஆற்றின் நிலப்படம்.

மிசிசிப்பி ஆறு வட அமெரிக்காவில் மிகப்பெரிய வடிகாலமைப்பையுடைய பிரதான ஆறாகும்.[3][4] ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் நீளத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி மெக்சிக்கோ குடாவில் கலக்கும் இது 2,320 மைல்கள் (3,734 கிமீ) நீளம் கொண்டது. ஐக்கிய அமெரிக்காவிலேயே அதிக நீளம் கொண்ட மிசூரி ஆறு இதன் கிளை ஆறு ஆகும்.

மிசிசிப்பி ஆறு, வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றும் ஆகிய ஜெபர்சன்-மிசூரி-மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீள அடிப்படையில், 3,900 மைல்கள் (6,275 கிமீ) நீளம் கொண்ட இத்தொகுதி உலகின் நான்காவது பெரியதும், 572,000 க.அடி/செ (16,200 கமீ/செ) சராசரி நீர் வெளியேற்ற அளவுடன், உலகின் 10 ஆவது பெரிய தொகுதியாகவும் இது விளங்குகின்றது.

பூர்வீக அமெரிக்கர்கள் நீண்ட காலமாக மிசிசிப்பி மற்றும் துணை ஆற்றுப் பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் பெரும்பாலானவர்கள் வேட்டைக் குழுக்களாகவும், மந்தை மேய்ப்பாளர்களமாக காணப்பட்டனர்.எனினும் சில மலைகளில் வீடுகள் அமைக்கும் குழுவினர் போன்றவர்கள் செழிப்பான விவசாய சமூகங்களை உருவாக்கியிருக்கின்றனர்.1500இல் ஐரோப்பியர்களின் வருகையானது அப்பிரதேச மக்களின் பூர்வீக வாழ்வின் பாதையை மாற்றியது.

மிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறுகளுள் மிக நீளமானது மிசூரி ஆறும், அதிக கன அளவு கொண்ட கிளை ஆறு, ஒஹைய்யோ ஆறும் ஆகும்.

பெயர் வந்த காரணம்[தொகு]

மெசிப்பி என்ற ஒபிஜிவே மொழியின் பிரேஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்தே ஆற்றின் பெயர் அதனடிப்படையிலே தோண்றியதாக கூறப்படுகின்றது.பல வளைவுகள் கொண்ட இந்த ஆற்றுக்கு மிசிசிப்பி என்ற பெயர் இந்திய வழிமுறையின் அடிப்படையில் ஏற்பட்டது.மிசிசிப்பி என்ற சொல் அல்கொன்றியன் இந்திய சொல்லாகும்.மிசி என்பது விசாலம்.சிப்பி என்பது தண்ணீர் என்றும் பொருள்படுகின்றது. மிசிசிப்பி ஒரு வசதியான ஆறாகக் கருதப்படுகின்றது.ஏனெனில்,இது ஏறத்தாழ கிழக்கு,தெற்கு,மத்திய மேற்கு அமரிக்கா மற்றும் மேற்கு அமெரிக்காவை பிரிக்கும் கோடாக காணப்படுகின்றது.

பெளதீக புவியியல்[தொகு]

மிசிசிப்பி ஆற்றின் புவியியல் ரீதியான அமைவானது நதயின் போக்கு,அதன் ஆற்றுப்பள்ளத்தாக்கு,அதன் வெளிப்பாய்ச்சல்,அதன் வரலாற்று முன்னைய காலம்,அதன் வரலாற்றுப் போக்கு மற்றும் எதிர்காலத்தில் அதன் போக்கில் மாற்றமடைவதற்கான சாத்தியங்கள் போன்றவற்ைற உள்ளடக்கியுள்ளது.

பிரவுகள்[தொகு]

மிசிசிப்பி ஆறானது உயர் மிசிசிப்பி,மத்திய மிசிசிப்பி மற்றும் தாழ் மிசிசிப்பி என பிரிக்கப்படுகின்றது. மிசிசிப்பியின் உயர் ஆறு மிசூரி ஆற்றுடன் சங்கமிக்கின்றது.மத்திய மிசிசிப்பி அதன் கீழ் நதியிலிருந்து,ஒகியோ நதிக்கு செல்கின்றதுடன் மற்றும் தாழ் மிசிசிப்பி அதன் கீழ்நதியிலிருந்து வளைகுடா மெக்சிகோவிக்கு செல்கின்றது.

உயர் மிசிசிப்பி[தொகு]

உயர் மிசிசிப்பி அதன் முகத்துவாரத்திலிருந்து, சென்.லுயிஸ் மிசூரியில் மிசூரி ஆற்றுடன் சங்கமிக்கின்றது.உயர் மிசிசிப்பி இரு பகுதியாக பிரிக்கப்படுகின்றது.

  • முகத்துவாரம் 493 மைல்(793 கி.மீ.),மினியாப்பொலிஸ்ஸின் சைட் அந்தனி நீர்வீழ்ச்சி முதலில் இருந்துமற்றும்
  • ஒரு பயணிக்கத்தக்க ,மினியாப்பொலிஸ் மற்றும் சென்.லுயிஸ்,மிசூரி இடையே 664மைல்(1,069 கி.மீ.) நீளமான ஒரு மனித உருவாக்க ஏரியாக தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட பகுதி.
இல்தஸ்கா ஏரியில் மிசிசிப்பி நதியின் தொடக்கம்(2004)
Coon Rapids Dam
மிசிசிப்பியின் பிரதான வழிசெலுத்தல்: கோன் ரபிட்ஸ் அணை

உயர் மிசிசிப்பி கிளையின் உற்பத்தி இடம் இல்தஸ்கா ஏரி என மரபார்ந்த முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.இது கடல் மட்டத்திலிருந்து 1475அடி(450மீற்றர்)உயரத்தில் சுத்தமான தண்ணீர் நாட்டின், இல்தஸ்கா பூங்காவில் அமைந்துள்ளது. இல்தஸ்கா எனும் சொல் ,உண்மை(veritas) என்ற இலத்தீன் சொல்லின் இறுதி நான்கு எழுத்தின் சேர்க்கையாவதுடன்,தலைக்கான(caput )இலத்தீன் சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களாகும்.[5]

இல்தஸ்கா ஏரியில் ,இதன் ஆரம்ப உருவாக்க இடத்திலிருந்து சென்.லுயிஸ்,மிசூரி வரையான நீர்ப்பாதைகள் 43 அணைக்கட்டுகளால் மறிக்கப்பட்டுள்ளது.இவற்றில் 14அணைகள் மினியாப்பொலிஸ்ஸிற்கு மேல் முகத்துவாரப் பகுதயில் அமைந்துள்ளதுள்ளதுடன் மின்உற்பத்தி,உல்லாசப் பயணத்துறை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.எஞ்சிய 29அணைகளும் மினியாப்பொலிஸ்ஸின் நகரின் கீழ்பகுதியில் ஆரம்பிக்கின்றன.இவை அனைத்தும் பூட்டுகளைக் கொண்டுள்ளதுடன், மேல் ஆற்றின் வணிக வழிசெலுத்தலை அதிகரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளன.

உயர் மிசிசிப்பியானது தனிச்சிறப்பான பல இயற்கை மற்றும் செயற்கையான ஏரிகளைக் கொண்டுள்ளது.இதன் மிகப்பெரிய ஏரியாக மினசோட்டாவின்,கிராண்ட் ராபிட் நகருக்கு அருகில் அமைந்துள்ள வின்னிபிகோசிஸ் காணப்படுகின்றது.இது 7மைலுக்கும்(11கிமீ)அதிகமான நீளத்தையுடையது.ஒனலஸ்கா ஏரி(ஏழாம் இலக்க அணையால் உருவாக்கப்பட்டது) விஸ்கோன்ஸினின், லா குரேஸ்ஸே அருகில் அமைந்துள்ளதுடன், நான்கு மைலுக்கும்(3.2 கிமீ) அதிகமான அகலத்தைக் கொண்டது.அதற்கு அடுத்தபடியாக,இயற்கை ஏரியாக பேபின் ஏரி காணப்படுகின்றது.இது வின்கோன்ஸினின் சிப்பேவா ஆற்றின் கலிமுகத்தினால் ,மிசிசிப்பியின் மேல் பகுதயில் நுழையும் போது உருவாக்கப்படுகின்றது. இது இரண்டு மைலுக்கும் அதிகமான(3.2 கிமீ)அகலத்தைக் கொண்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Median of the 1,826 daily mean streamflows recorded by the USGS for the period 1978-1983 at Baton Rouge.
  2. Median of the 14,610 daily mean streamflows recorded by the USGS for the period 1967-2006.
  3. United States Geological Survey Hydrological Unit Code: 08-09-01-00- Lower Mississippi-New Orleans Watershed
  4. "Lengths of the major rivers". United States Geological Survey. பார்த்த நாள் March 14, 2009.
  5. Upham, Warren. "Minnesota Place Names: A Geographical Encyclopedia". Minnesota Historical Society. பார்த்த நாள் August 14, 2007.
  6. "Mississippi River Facts". Nps.gov. பார்த்த நாள் November 6, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசிசிப்பி_ஆறு&oldid=1827659" இருந்து மீள்விக்கப்பட்டது