உள்ளடக்கத்துக்குச் செல்

சதுர மைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள சதுரமொன்றின் அளவுகள்.
ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள சமபக்க முக்கோணம் ஒன்றின் அளவுகள்.
ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள வட்டமொன்றின் அளவுகள்.

சதுர மைல் என்பது பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் இம்பீரியல் அளவை முறை சார்ந்த ஒரு அலகு ஆகும். ஒரு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட ஒரு பகுதியின் பரப்பளவு (= நீளம் x அகலம்) ஒரு சதுர மைல் ஆகும். பெரிய நில மற்றும் நீர்ப் பரப்புகளை அளப்பதற்குப் பயன்படும் இந்த அலகு, மீட்டர் அளவைமுறையில் அண்ணளவாக 2.59 சதுர கிலோமீட்டருக்குச் சமமானது.

சதுர மைலும், பிற பரப்பளவை அலகுகளும்[தொகு]

இம்பீரியல் அளவை முறையில் சிறிய பரப்பளவுகளை அளப்பதற்குச் சதுர அங்குலம், சதுர அடி, சதுர யார் போன்ற அலகுகள் பயன்படுகின்றன. இவற்றைவிட அளவில் சிறிய நிலப் பரப்புகளையும், நீர்ப் பரப்புகளையும் அளப்பதற்குப் பரவலாக வழக்கில் உள்ள அலகுகளில் ஏக்கர், ஹெக்டேர் போன்றவை முக்கியமானவை. இவ்வலகுகளுடன் சதுர மைலுக்கு உள்ள தொடர்புகள் கீழுள்ள அட்டவணையில் தரப்படுகின்றன.

1 சதுர மைல் = 4,014,489,600 - சதுர அங்குலம்
1 சதுர மைல் = 27,878,400 - சதுர அடி
1 சதுர மைல் = 3,097,600 - சதுர யார்
1 சதுர மைல் = 640 - ஏக்கர்
1 சதுர மைல் = 258 - ஹெக்டேர்

சதுர மைலில் சில பரப்பளவுகள்[தொகு]

பூமியின் பரப்பளவு : 196,936,481 - சதுர மைல்
பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 - சதுர மைல்
பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 - சதுர மைல்
இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 - சதுர மைல்
இலங்கையின் பரப்பளவு : 25,332 - சதுர மைல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர_மைல்&oldid=2740670" இலிருந்து மீள்விக்கப்பட்டது