திரவ பெட்ரோலிய வாயு
இனங்காட்டிகள் | |
---|---|
68606-25-7 | |
EC number | 271-734-9 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (Liquified Petroleum Gas), திரவ பெட்ரோலிய வாயு (Liquid Petroleum Gas) (எல்பிஜி எல்பி வாயு), என்பது எரிவளி ஆகும். இது எளிதில் தீப்பற்றக்கூடிய நீரகக்கரிம வாயுக்களான, குறிப்பாக புரொப்பேன், பியூட்டேன் மற்றும் ஐசோபியூட்டேன் ஆகியவற்றின் கலவையைக் கொண்டிருக்கக் கூடிய ஒன்றாகும். இது சில சமயங்களில் சிறிதளவு புரோப்பிலீன், பியூட்டீன் மற்றும் ஐசோபியூட்டீன் ஆகியவற்றையும் கொண்டிருக்கக்கூடும்.[1][2][3]
இந்த வாயுவானது வெப்பப்படுத்தும் சாதனங்களிலும் சமையல் சாதனங்களிலும் வாகனங்களிலும் எரிவளியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஏரோசால் உந்துசக்தியாகவும் குளிர் பதனூட்டியாகவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[4] and a ,[5] ஓசோன் படல சிதைவினைத் தொடர்ந்து குளோரோபுளோரோகார்பன்களைக் குறைக்கும் நடவடிக்கைகளின் காரணமாக இது குளிர் பதனூட்டிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வாகனங்களில் எரிபொருளாக மட்டும் பயன்படுத்தப்படும் நேர்வுகளில் இது தானிவாயு (autogas) என குறிப்பிடப்படுகிறது.
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என்று விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் பலவித வாயுக்களில் பெரும்பான்மையாக புரோப்பேனையோ (C
3H
8), அதிக அளவில் பியூட்டேனையோ (C
4H
10), மேலும், பெரும்பான்மையாக இவை இரண்டையுமே அதிக அளவில் கொண்ட கலவையாகவோ காணப்படுகின்றன. பூமியின் வடகோளத்தின் குளிர்காலத்தில் இந்தக் கலவையில் அதிக அளவு புரோப்பேன் கலக்கப்படுகிறது. கோடையில், அதிக அளவில் பியூட்டேன் கலக்கப்படுகிறது.[6][7] அமெரிக்க ஐக்கிய நாடுகளில், முதன்மையாக இரு தர நிலைகளில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுக்கள் விற்கப்படுகின்றன: அவை, வணிக புரோப்பேன் மற்றும் எச்டி-5. இத்தகைய வரைமுறைகள் வாயு செயல்முறையாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்படுகின்றன.[8] and the American Society of Testing and Materials.[9] இந்த வரைமுறைகளில் புரோப்பேன்/பியூட்டேன் கலவை விகிதங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
புரோப்பிலீன், பியூட்டிலீன் மற்றும் C2H6, CH4, C3H8 போன்ற பல ஐதரோகார்பன்களும் சிறிய வீதங்களில் கலந்திருக்கக்கூடும். எச்டி-5 (HD-5) என்ற வகையானது தானிவாயுவிற்கான வரையறையில் புரோப்பிலீனின் அளவை 5% என்ற அளவிற்கு வரையறுத்து வைத்துள்ளது. கசிவுகளை எளிதில் கண்டறியும் வகையில், சக்தி வாய்ந்த வாசனை கொண்ட ஈத்தேன்தயால் சேர்க்கப்படுகிறது. பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஐரோப்பிய தரநிலை EN 589 ஆகும். அமெரிக்காவில், டெட்ராஐதரோதயோபீன் (தயோபேன்) அல்லது அமில் மெர்காப்டன் ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்ட மணமூட்டிகள் ஆகும்.[10] இருப்பினும் இவை இரண்டும் தற்போது பயன்படுத்தப்படுவதில்லை.
உற்பத்தியும் சேமிப்பும்
[தொகு]திரவ பெட்ரோலிய வாயு என்பது பாறை எண்ணெய் அல்லது ஈரமான இயற்கை எரிவளி ஆகியவற்றைச் சுத்திகரிப்பதன் மூலமும் மேலும் முதன்மையாகப் புதைபடிவ எரிமங்களின் மூலங்களிலிருந்து வருவிக்கப்படும் பொருள்களாகவும் இருக்கின்றன. பண்படா எண்ணெயைச் சுத்திகரிக்கும் செயல்முறையின் போது பூமியிலிருந்து வெளிவரும் பெட்ரோலியம் அல்லது இயற்கை எரிவாயு ஓட்டங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. 1910 ஆம் ஆண்டில் வால்டர் ஓ. ஸ்நெல்லிங் என்பவரால் முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டது. முதல் வணிகரீதியான விளைபொருள் 1912 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றன. இது நுகரப்படும் அனைத்து ஆற்றலில் 3% அளவிற்கு பங்களிக்கிறது. இது எரிக்கப்படும் போது புகைக்கரி இல்லவே இல்லை என்ற அளவிலும் மிகச் சிறிய அளவிலேயே கந்தகத்தை வெளியிட்டும் மிகவும் தூய்மையான எரிபொருளாகத் திகழ்கிறது. இது வாயுவாக இருப்பதால், இது நிலத்தையோ நீரையோ மாசுபடுத்தும் அபாயத்தைக் கொண்டிருப்பதில்லை. ஆனால், இது வளி மாசடைதலுக்குக் காரணமாகக்கூடும். திரவ பெட்ரோலிய வாயுவின் தன் எரிவெப்பம் 46.1 மெகாயூல்/கிகி என்ற அளவில் உள்ளது. இது எரிநெய்யின் தன் எரிவெப்பமான 43.5 மெகாயூல்/கிகி என்ற அளவோடு ஒப்பிடும் போது குறைவாக உள்ளது.[11] இருப்பினும், இதன் ஓரலகு கன அளவிற்கான ஆற்றல் அடர்த்தியானது 26 மெகா யூல்/லி ஆகும். இது பெட்ரோல் அல்லது எரிநெய்யின் ஓரலகு கன அளவிற்கான ஆற்றல் அடர்த்தியை விடக் குறைவானதாகும். திரவ பெட்ரோலிய வாயுவின் (அல்லது அதன் பகுதிப்பொருள்களின்) அடர்த்தி மற்றும் ஆவி அழுத்தமானது வெப்பநிலையோடு குறிப்பிடத்தக்க வகையில் மாறும் தன்மை கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் பயன்பாடு பாதுகாப்பு அல்லது பாதுகாப்பான பரிமாற்ற நடவடிக்கைகளுடன் இணைக்கப்படும் போது இந்த உண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.[12] ஆற்றல் கடத்துநராகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர, திரவ பெட்ரோலிய வாயு என்பது எத்திலீன், ப்ரோப்பிலீன் போன்ற ஓலிஃபின்களின் தொகுப்புக்கான வேதித் தொழிலில் ஒரு நம்பிக்கைக்குரிய மூலப்பொருளாகவும் உள்ளது.[13][14]
சாதாரண வெப்பம் மற்றும் அழுத்தத்தில், திரவ பெட்ரோலிய வாயு ஆவியாகும் தன்மையுடையது. இதனால், திரவ பெட்ரோலிய வாயுவானது அழுத்தமுள்ள எஃகு உருளைகளில் விநியோகிக்கப்படுகின்றன. கலத்தின் உள்ளே திரவத்தின் வெப்ப விரிவுக்கு ஈடுகொடுக்கும்பொருட்டு, இந்தக் கொள்கலன்கள் முழுவதுமாக நிரப்பப்படுவதில்லை; வழக்கமாக, அவற்றின் கொள்ளளவில் 80% முதல் 85% வரை அவை நிரப்பப்படுகின்றன. ஆவியாக்கப்பட்ட வாயுவின் கன அளவுக்கும் திரவமாக்கப்பட்ட வாயுவின் கன அளவுக்கும் உள்ள விகிதம் உட்பொருள், அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைச் சார்ந்து மாறுபடுகிறது; திரவ பெட்ரோலிய வாயு காற்றைவிட கனமானது, எனவே அது தரையில் ஓடி தரைக்குக்கீழ் உள்ள தாழ்வுப் பகுதிகளில் நின்றுவிடும். சரியான முறைப்படி கையாளப்படவில்லையெனில் இது தீ மூட்டம் அல்லது மூச்சுத்திணறல் இடையூறுகளுக்கான காரணமாக அமையும்.
அதிக அளவிலான திரவ பெட்ரோலிய வாயு பெரிய தேக்கிகளில் தேக்கிவைக்கப்படலாம், தேவைப்பட்டால் பூமியிலும் புதைத்து வைக்கப்படலாம். மாற்றாக, வாயு உருளைகள் பயன்படுத்தப்படலாம்.
சமையல்
[தொகு]இந்தியாவின் 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியக் குடியிருப்பில் 17.5% அல்லது 33.6 மில்லியன் குடியிருப்புகள் 2001ஆம் ஆண்டில் திரவ பெட்ரோலிய வாயுவை சமையல் எரிவாயுவாகப் பயன்படுத்தின. இதைப் பயன்படுத்துவதில் 5.7% மட்டுமே பங்களிக்கும் இந்திய கிராமப்புறக் குடியிருப்புடன் ஒப்பிடும்போது பயன்பாட்டில் 48% சதவீதத்தைப் பங்களிக்கும் இந்தியக் குடியிருப்பினரில் 76.64% நகர்ப்புறக் குடியிருப்புகளே ஆகும். திரவ பெட்ரோலிய வாயுவிற்கு அரசு ஆதரவுநிதி அளிக்கிறது. எல்பிஜியின் விலை உயர்வு, நகர்புற நடுத்தர வகுப்பினர் வாக்களிப்பினைப் பாதிப்பதால், அது இந்தியாவில் அரசியல் பாதிப்புக்குரிய விஷயமாகும்.
ஒரு காலத்தில் ஹாங்காங்கில் திரவ பெட்ரோலிய வாயு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட எரிவாயுவாக இருந்தது; இருப்பினும், கட்டடங்களுக்கு வழங்கப்பட்ட நகர எரிவாயு விரிவாக்கத்தின் தொடர்ச்சி திரவ பெட்ரோலிய வாயு பயன்பாட்டினை குடியிருப்புகளில் 24%க்குக் குறைவாகக் குறைத்துள்ளது.
பிரேசில் நாட்டின் நகர்புறத்தில் அதிகமாகப் பொதுவாக, நடைமுறையில் எல்லா குடியிருப்புகளிலும் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு திரவ பெட்ரோலிய வாயு ஆகும். ஏழைக் குடும்பங்கள் அரசு நிதியுதவியுடன் திரவ பெட்ரோலிய வாயுவைப் பெறுவதற்கென்றேப் பிரத்யேகமாகப் பெறுகின்றன.
தமிழக எரிவாயு கலன்கள்
[தொகு]-
இந்துசுதான் பெட்ரோலியம்
-
பாரத்
-
இன்டேன்(indane)
-
சிறியது
-
சிறியது,பெரியது.
-
விளக்கொளி எரிகலன்
தமிழக எரிவாயுக் கருவிகள்
[தொகு]-
சீரியக்கி
-
சீரியக்கி
-
சீரியக்கி
-
எடைமிகு அடுப்பு
-
தமிழக அரசின் அடுப்பு
-
சமையலறை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ World Energy Prices: Database Documentation (PDF) (Report) (2020 ed.). பன்னாட்டு ஆற்றல் முகமை. Archived (PDF) from the original on February 8, 2024. பார்க்கப்பட்ட நாள் February 8, 2024.
- ↑ NFPA (2017). Liquefied Petroleum Gas Code. NFPA 58 (2017 ed.). Quincy, Mass.: National Fire Protection Association. pp. 11, 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1455913879.
- ↑ Enciclopedia degli idrocarburi [Encyclopaedia of Hydrocarbons] (in Italian). Vol. II. Roma, Italy: Eni and Istituto della Enciclopedia Italiana. 2005. p. 26. இணையக் கணினி நூலக மைய எண் 955421604.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Alvi, Moin ud-Din. "Aerosol Propellant | Aerosol Propellant Gas | Aerosol Supplies Dubai – Brothers Gas". www.brothersgas.com. Archived from the original on 30 December 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-06-14.
- ↑ "Performance and Safety of LPG Refrigerants" (PDF). Archived from the original (PDF) on 2015-03-10.
- ↑ ed, George E. Totten, ed. (2003). Fuels and lubricants handbook : technology, properties, performance, and testing (2nd printing. ed.). West Conshohocken, Pa.: ASTM International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780803120969. Archived from the original on 4 June 2016.
- ↑ Unipetrol. "Analysis of seasonal mixtures – Propane-butane Fuel Mixture (Summer, Winter)". Archived from the original on 9 August 2010. பார்க்கப்பட்ட நாள் 29 April 2013.
- ↑ "Liquefied Petroleum Gas Specifications and Test Methods". Gas Processors Association. Archived from the original on 21 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
- ↑ "ASTM D1835 – 11 Standard Specification for Liquefied Petroleum (LP) Gases". American Society for Testing & Materials. Archived from the original on 22 May 2012.
- ↑ வார்ப்புரு:CodeFedReg
- ↑ Horst Bauer, ed. (1996). Automotive Handbook (4th ed.). Stuttgart: Robert Bosch GmbH. pp. 238–239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8376-0333-1.
- ↑ Zivenko, Oleksiy (2019). "LPG Accounting Specificity During ITS Storage and Transportation" (in en). Measuring Equipment and Metrology 80 (3): 21–27. doi:10.23939/istcmtm2019.03.021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-6418.
- ↑ "High-purity propylene from refinery LPG".
- ↑ Kinetic studies of propane oxidation on Mo and V based mixed oxide catalysts. 2011.
வெளியிணைப்புகள்
[தொகு]- கூடுதல் எரிபொருள் யு.கே. வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள எல்பிஜி வழங்குபவர்
- AEGPL ஐரோப்பிய எல்பிஜி சங்கம்
- WLPGA உலக எல்பி சங்கம்
- PERC ப்ரொபேன் கல்வி & ஆராய்ச்சி கவுன்சில்
- NPGA பரணிடப்பட்டது 2016-09-01 at the வந்தவழி இயந்திரம் தேசிய ப்ரொபேன் வாயு சங்கம், யுஎஸ்ஏ
- தெ எல்பி வாயு வழங்கல் தொடர் பரணிடப்பட்டது 2014-10-08 at the வந்தவழி இயந்திரம் எல்பி வாயுவைக் கண்டுபிடி, உங்கள் வீட்டுக்கு என்பதிலிருந்து (க்ரேஃபிக் அனிமேஷன்)
- PGAC பரணிடப்பட்டது 2009-08-31 at the வந்தவழி இயந்திரம் கனடாவில் உள்ள ப்ரொபேன் வாயு சங்கம்
- LPGSASA எல்பி வாயு பாதுகாப்பு சங்கம், தெற்கு ஆப்ரிக்கா
- ப்ரொபேன் 101 ப்ரொபேன் மற்றும் எல்பி வாயு அடிப்படைக் கருத்து விளக்கம்
- UKLPG யுகேயில் எல்பிஜி
- எல்பிஜி உபயோகிப்போர் சங்கம் யுகே சங்கம் (ஃபோரம்)| விலை | வழங்குபவர்கள் | நிறுவல்| மாற்று வழிகள்
- ஷெல் பரணிடப்பட்டது 2010-02-19 at the வந்தவழி இயந்திரம் ஒரு யுகே எல்பிஜி வழங்கும் ஷெல் நிறுவனத் தகவல்
- எல்பிஜி இன்ஃபோ சார்பற்ற தானியங்கி வாகன வாயு/எல்பிஜி தகவல் நிலையம்
- கேலர் பரணிடப்பட்டது 2010-03-08 at the வந்தவழி இயந்திரம் ஒரு யுகே எல்பிஜி வழங்கும் கேலர் நிறுவனத் தகவல்
- கிராமப்புற எரிபொருள் பரணிடப்பட்டது 2010-05-01 at the வந்தவழி இயந்திரம் யுகேயில் எல்பிஜிக்கு கேலர் வாயு வழிகாட்டி
- ஃப்ளோகேஸ் ஒரு யுகே எல்பிஜி வழங்கும் ஃப்ளோகேஸ் நிறுவனத் தகவல்
- BP வாயு பரணிடப்பட்டது 2014-12-23 at the வந்தவழி இயந்திரம் ஒரு யுகே எல்பிஜி வழங்கும் BP வாயு நிறுவனத் தகவல்