உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:Neutral point of view இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு எழுதப்படவேண்டும். அதாவது அனைத்து முக்கிய பார்வைகளுக்கும் தகுந்த, நியாயமான இடம் தரப்பட வேண்டும். அந்தப் பார்வைகள் பக்கச்சார்பை வலியுறுத்தாமல் ஆதாரபூர்வமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.

நடுநிலைமை விக்கிப்பீடியாவினதும், தமிழ் விக்கிப்பீடியாவினதும் ஆணிவேர்க் கொள்கைகளில் ஒன்று. இந்தக் கொள்கை, பல்வேறு பயனர்களின் பங்களிப்பை உள்வாங்கி் உள்வாங்கித் தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோளான எளிய தமிழில், தரமான கலைக்களஞ்சியத்தை ஆக்குவதை ஏதுவாக்குகின்றது.

நடுநிலைமைக் கொள்கையை விளங்கிக் கொள்ளல்

[தொகு]

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி. - திருக்குறள் 118

முரண்பாடுகளும் நடுநிலைமையும்

[தொகு]

நடுநிலைமை என்பது, ஒரு விடயம் நோக்கி முரண்படும் கருத்துடைய பார்வைகளை, ஒரே கட்டுரையில் பகிர வசதிசெய்யும் ஒரு வழிமுறை ஆகும். ஆனால் இது அனைத்துப் பார்வைகளுக்கும் சமஉரிமை, சமமுக்கியத்துவம் தருவதென்று பொருள்படாது. நடுநிலை நோக்கு என்பது, அனைத்து முக்கியப் பார்வைகளுக்கும் தகுந்த நியாயமான இடம் தரப்படவேண்டும் என்றே வேண்டுகின்றது.

கருத்து வேறுபாடுகள் விவரிக்கப்படலாம், பகிரப்படலாம்; ஆனால், கருத்துவேறுபாடானது, இழுபறியில் ஈடுபடக்கூடாது. துல்லியமான கட்டுரைகள், கருத்துக்களை நோக்கிய மதிப்பீடுகளை முன்வைக்கலாம்; ஆனால், தீர்க்கமான பக்கச் சார்பான முடிவுகளை முன்வைக்கக்கூடாது.

உண்மையும் நடுநிலைமையும்

[தொகு]

'உண்மைக்கு முன், நடுநிலைமை என்பது இல்லை' என்பது சரியே. உண்மையான நோக்கில் தகவல்களைத் தரும்பொழுது "நடுநிலைமை கலைவதில்லை"[1]. ஆனால், ஒரு பக்கப் பார்வையே உண்மையானது; மற்றவருடைய பார்வை பொய்யானது என்ற கருத்து இழுபறியில் ஈடுபடுவதைத் தமிழ் விக்கிப்பீடியா அனுமதிக்காது. பார்வைகளை ஆதாரப்பூர்வமாக நிலைநிறுத்திப் பயனர்கள் முடிவுசெய்வதற்கு வசதிசெய்வதே, தமிழ் விக்கிப்பீடியாவின் நடுநிலை நோக்கின் தன்மையாகும்.

பக்கச்சார்பும் நடுநிலைமையும்

[தொகு]

இயன்றவரை விடயநோக்காகவும், ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையிலும், ஒரு பக்கச்சார்பின்றியும் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பதையே நடுநிலைமை நோக்கு வேண்டுகின்றது. எனினும், `மனிதர்களுக்குப் பக்கச்சார்பு எதோ ஒருவகையில் இயல்பாகவே அமையும்` என்ற கூற்றில் உண்மையுண்டு. அவற்றை அவதானித்துத் தவிர்ப்பது நன்று. ஒருவருடைய எழுத்தில் பின்வரும் பக்கசார்புகள் இருக்கலாம்:

  • வர்க்கம் அல்லது சாதிச் சார்பு
  • குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது கோட்பாட்டுச் சார்பு
  • சமயச் சார்பு
  • ஆண் ஆதிக்கச் சார்பு
  • பால் நிலைச் சார்பு
  • இனச் சார்பு
  • தேசியச் சார்பு

Templates

[தொகு]


  • General NPOV templates:
    • {{POV}}—message used to attract other editors to assess and fix neutrality problems
    • {{POV-check}}—message used to request that an article be checked for neutrality
    • {{POV-section}}—message that tags only a single section as disputed
    • {{POV-lead}}—message when the article's introduction is questionable
    • {{POV-title}}—message when the article's title is questionable
    • {{POV-statement}}—message when only one sentence is questionable
    • {{NPOV language}}—message used when the neutrality of the style of writing is questioned
    • {{ASF}}—message when a sentence may or may not require in-text attribution (e.g., "Jimmy Wales says")
    • {{Attribution needed}} — when on-text attribution should be added
  • Undue-weight templates:
    • {{Undue}}—message used to warn that a part of an article lends undue weight to certain ideas relative to the article as a whole
    • {{Undue-section}}—same as above but to tag a section only
    • {{Undue-inline}}—same as above but to tag a sentence or paragraph only

மேற்கோள்கள்

[தொகு]
  1. "உன்மையின் பக்கம் சாய்வதில் நடுநிலைமை கலைவதில்லை." சுஜாதா http://www.ambalam.com/sujatha/2002/april/sujatha14_01.html

வெளி இணைப்புகள்

[தொகு]