ஜூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜூல் (இலங்கை வழக்கு: யூல், குறியீடு: J) ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகுகள் சார்ந்த அலகு ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

விளக்கம்[தொகு]

ஒரு ஜூல் என்பது, ஒரு நியூட்டன் அளவுள்ள விசை ஒன்று அவ்விசையின் திசையில் ஒரு மீட்டர் நகரும் பொழுது செய்யப்படும் வேலையின் அளவு ஆகும். இந்த அளவு நியூட்டன் மீட்டர் என்றும் குறிக்கப்படுவது உண்டு. நியூட்டன் மீட்டர் "N.m" என்னும் குறியீட்டால் எழுதப்படும்.

அடிப்படை அலகுகளில்,

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூல்&oldid=2742419" இருந்து மீள்விக்கப்பட்டது