வாட்டு (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாட்டு (Watt) (குறியீடு: W) என்பது திறனை அளக்கும் ஓர் அனைத்துலக (எசு.ஐ) அலகு. ஒரு வாட்டு என்பது ஒரு நொடிக்கு ஒரு சூல் ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த சேம்சு வாட்டு (James Watt) என்பாரைச் சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட்டு என்ற பெயரிட்டனர்.

மின்னியலில் சுலபமாக வாட்டு அளக்கும் அலகு

வரையறை[தொகு]

ஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட்டு அளவு ஆகும்.

.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

படியேறிச் செல்பவர் 200  வாட்டு வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து (மகிழுந்து) 25,000 வாட்டு வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்டுத் திறன் ஆகும்.

முன்னொட்டு குறியீடு பதின்ம (தசம)
1 mW 0.001 W
1 W 1W
1 KW 1000 W
1 MW 1,000,000 W
1 GW 1,000,000,000 W
1 TW 1,000,000,000,000 W
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டு_(அலகு)&oldid=2741949" இருந்து மீள்விக்கப்பட்டது