ஜேம்ஸ் வாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் வாட்
James Watt
James Watt by Henry Howard.jpg
பிறப்பு சனவரி 19, 1736(1736-01-19)
ஸ்கொட்லாந்து, பிரித்தானியா
இறப்பு ஆகத்து 25, 1819(1819-08-25) (அகவை 83)[1]
இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்

ஜேம்ஸ் வாட் (James Watt, ஜனவரி 19, 1736ஆகஸ்ட் 25, 1819) ஒரு ஸ்காட்டியப் புத்தாக்குனரும், இயந்திரப் பொறியாளரும் ஆவார். நீராவி இயந்திரத்துக்கு இவர் செய்த மேம்பாடுகளே பிரித்தானியாவிலும், உலகின் பிற பாகங்களிலும் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தன.

ஜேம்ஸ் வாட் 1736 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் நாள் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் கப்பல் கட்டுனராகவும், கப்பல் உரிமையாளராகவும், ஒப்பந்தகாரராகவும் இருந்தார். ஜேம்ஸ் வாட்டின் தாயார் அக்னஸ் முயிர்ஹெட், மதிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். நன்றாகப் படித்திருந்தார்.

வாட் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், பெரும்பாலும் வீட்டிலேயே தாயாரிடம் கற்றுவந்தார். கணிதம் கற்பதில் இவர் அதைக ஆர்வம் காட்டிவந்தார். இவர் 18 வயதாக இருந்தபோது இவரது தாயார் காலமானார். இவரது தந்தையின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கருவிகள் செய்வது பற்றிக் கற்றுக்கொள்வதற்காக இலண்டனுக்குச் சென்ற வாட், ஒராண்டின் பின்னர் திரும்பவும் ஸ்காட்லாந்துக்கு வந்தார். அங்கே அவர் தனது சொந்த கருவிகள் செய்யும் தொழில் தொடங்க எண்ணினார்.

குறிப்புகள்[தொகு]

  1. Although a number of otherwise reputable sources give his date of death as 19 August 1819, all contemporary accounts report him dying on 25 August and being buried on 2 September. The earliest known instance of the 19 August date appearing in the literature is in a book published in 1901.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_வாட்&oldid=1729118" இருந்து மீள்விக்கப்பட்டது