பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (School) என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள். இந்தியாவில் வித்யாஷ்ரம், வித்தியாலயம், வித்யா மந்திர், வித்யா பவன் என்று சமஸ்கிருதத்தில் பள்ளி அழைக்கப்படுகிறது.
பெயர்க்காரணம்[தொகு]
தமிழில் பள்ளிக்கூடம் என்ற வார்த்தையின் பெயர்க்காரணத்தை தொ. பரமசிவன் விளக்கியுள்ளார். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் குருகுலத்திற்கு செல்ல முடியாது. சமண, பௌத்த மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கோரினர். தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் நாங்கள் பள்ளிக்குப்போகிறோம் : அதாவது, சமண, பௌத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது என்கிறார் அவர்.[1]
இந்தியாவில் பள்ளிப்படிப்பு[தொகு]
இந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garden), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garden), மற்றும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளி, 6 முதல் 8 வகுப்பு வரை நடுநிலைப்பள்ளி, 9வது மற்றும் 10வது வகுப்புகள் உயர்நிலைப்பள்ளி, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் மேல்நிலைப்பள்ளி என 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
இலங்கையில் பள்ளிப்படிப்பு[தொகு]
இலங்கையில் தரம் 1 முதல் தரம் 13 வரை பாடசாலைக் கல்வி போதிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மதுக்கூர் இராமலிங்கம் (4 செப்டம்பர் 2014). "குரு வேண்டாம்; ஆசிரியர் போதும்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். pp. 4 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305083952/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=77699. பார்த்த நாள்: 4 செப்டம்பர் 2014.
வெளி இணைப்புகள்[தொகு]
