தீக்கதிர்
![]() | |
வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளை , தமிழ்நாடு |
தலைமை ஆசிரியர் | இராமலிங்கம் ச |
நிறுவியது | 29 ஜூன் 1963 |
அரசியல் சார்பு | இடதுசாரி | முற்போக்கு |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
இணையத்தளம் | இபேப்பர் தீக்கதிர் |
தீக்கதிர் என்பது உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.[1]
வரலாறு[தொகு]
1962-63 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தத்துவார்த்தப் போராட்டம் கூர்மையடைந்திருந்த நிலையில், 1962ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்திய - சீன எல்லை மோதலைத் தொடர்ந்து கட்சியின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்களும் ஊழியர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் தீக்கதிர் ஏடு தோன்றியது.தீக்கதிர் ஏட்டைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றியவர் எல்.அப்பு என்ற அற்புதசாமி ஆவார். 101 உறுப்பினர்கள் கொண்ட ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பேரவை உறுப்பினர்களுள் ஒருவரான அவர், கோவை மாவட்டத்தில் பிரபல தொழிற்சங்கத் தலைவர்களுள் ஒருவருமாவார்.அப்பு கோவை மாவட்டத் தொழிலாளிகளிடம் வசூல் செய்த பணத்தைக் கொண்டு தீக்கதிர் வார ஏட்டின் முதல் இதழ் 1963 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதி அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியானது, கோவைத் தொழிலாளி வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம் என்ற வாசகங்களை தீக்கதிர் இதழில் வெளிவந்தது.தீக்கதிர் உருவாக்கத்திற்கு பெரிதும் பாடுபட்டவர்களில் மற்றொருவர் எம்.என்.ராமுண்ணி. இவர் மின்சார தொழிலாளர் சங்கத்தின் ஊழியர்களில் ஒருவராக இருந்தார். கட்சி உறுப்பினரும் ஆவார்.தீக்கதிரின் முதல் அலுவலகம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆண்டவர் நகர் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்றின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் அமைக்கப்பட்டது. தீக்கதிரை அச்சிட்டுத்தர பல அச்சகத்தார் தயங்கினர். இறுதியில் தியாகராயநகர் ரங்க நாதன் தெருவில் டிரெடில் மிஷின் ஒன்றை வைத்து மொழியரசி அச்சகம் என்ற பெயரில் சிறிய அச்சகம் ஒன்றை நடத்தி வந்த புலவர் வே. புகழேந்தி அதை அச்சிட்டார்.
திருச்சி பதிப்பு[தொகு]
பொன்மலை சங்கத் திடலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த 5 தியாகிகளின் நினைவு நாளான செப்-5 , 2010 இல் தீக்கதிர் திருச்சி பதிப்பு துவங்கப்பட்டது .[2]
பொன்விழா[தொகு]
1963 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நாளிதழின் 50ஆம் ஆண்டு பொன்விழாவின்[3] தொடக்க நாள் நிகழ்வுகள் சென்னையில் உள்ள அப் பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்றது. பொன்விழா ஆண்டின் இறுதி நிகழ்ச்சி மதுரையில் 2013 சூன் 29 அன்று நடைபெற்றது.
மூலம்[தொகு]
- ↑ Rajendran, S P (சூன் 3, 2007). "Third Edition Of Theekkathir Launched". People's Democracy. Archived from the original on 8 ஆகஸ்ட் 2012. https://web.archive.org/web/20120808192907/http://pd.cpim.org/2007/0603/06102007_theekkathir.htm. பார்த்த நாள்: 30 May 2012.
- ↑ "5ம் ஆண்டில்... :: தீக்கதிர் - திருச்சி பதிப்பு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 5 செப்டம்பர் 2014. p. 2. 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 செப்டம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தீக்கதிர் நாளிதழ் பொன்விழா ஆண்டு". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-01 அன்று பார்க்கப்பட்டது.