மாலை மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாலை மலர்
Maalai Malar
இது மாலை மலர் நாளிதழின் சின்னம் ஆகும்
வகை தின நாளிதழ்
வடிவம் தாள்

உரிமையாளர்கள் சி. பா. ஆதித்தனார்
வெளியீட்டாளர் தினத்தந்தி குழுமம்
தொடக்கம் 1977 ஆம் ஆண்டு
மொழி தமிழ்
தலைமையகம் தமிழ் நாடு

இணையம்: http://www.maalaimalar.com

மாலை மலர் தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ். மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 1977 இல் சி. பா. ஆதித்தனாரால் கோவையில் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கோவை, சென்னை, சேலம், ஈரோடு, புதுச்சேரி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், வேலூர் போன்ற நகரங்களில் இருந்து எட்டு பதிப்புகளாக வெளியாகின்றது.

இச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் சினிமாவுக்கென்று பிரத்தியேகமாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் சினிமா சம்பந்தமான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாலை_மலர்&oldid=1521601" இருந்து மீள்விக்கப்பட்டது