தினத்தந்தி
![]() | |
வகை | தினசரி நாளிதழ் |
---|---|
வடிவம் | பத்திரிகை, இணையத்தளம் |
நிறுவியது | 1942 |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
விற்பனை | 1,679,837 தினமும் (ஜனவரி முதல் ஜூன்2015) |
இணையத்தளம் | http://www.dailythanthi.com |
தினத்தந்தி தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது 1942 ஆம் ஆண்டு நவம்பர் 1 சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முழுவதும் 16 பதிப்புகளும், சர்வதேச அளவில் துபாய், கொழும்பு ஆகிய இரு பதிப்புகளும் கொண்டு உள்ளது. 16[1].
சிறப்புகள்[தொகு]
- தமிழகத்தில் நிறைய வாசகர்களைக் கொண்ட நாளிதழ் தினத்தந்தியாகும்[2].
- எளிய தமிழ்ச் சொற்களை பயன்படுத்துதல், ஒவ்வொரு பத்திக்கும் தலைப்பு இடுதல்.
- சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல்,திருப்பூர் புதுச்சேரி, பெங்களூர், மும்பை , துபாய், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து தினத்தந்தி பதிப்பிக்கப்படுகிறது.
கல்விப் பணிகள்[தொகு]
வருடத்தின் இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் தினத்தந்தி 'பத்து, பன்னிரண்டாம் வகுப்பு கேள்வி வினா விடை' புத்தகத்தை வெளியிடுகிறது. இதில் அனைத்து பாடங்களிலிருந்தும் விடைகளுடன் மாதிரி கேள்வித்தாள் தரப்படுகின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை 'வெற்றி நிச்சயம்' என்ற நிகழ்ச்சி தினத்தந்தியால் நடத்தப்படுகின்றது. இதில் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு துறையிலிருந்தும் வல்லுனர்கள் வந்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.
பதிப்பு வாரியாக பத்திரிக்கை விற்பனை விவரம்[தொகு]
பதிப்பு | சராசரி |
---|---|
சென்னை | 4,90,662 |
மதுரை | 1,25,778 |
கோயம்புத்தூர் | 1,18,470 |
வேலூர் | 67,274 |
திருச்சி | 1,00,758 |
திருநெல்வேலி | 1,28,698 |
சேலம் | 1,22,967 |
கடலூர் | 66,370 |
பெங்களூரு | 63,211 |
புதுச்சேரி | 29,047 |
ஈரோடு | 55,914 |
நாகர்கோவில் | 1,06,350 |
தஞ்சாவூர் | 91,817 |
திண்டுக்கல் | 51,815 |
திருப்பூர் | 41,038 |
மும்பை | 19,668 |
கல்விச்சீரமைப்புக் காலப் பணிகள்[தொகு]
பள்ளிப்பகல் உணவுத் திட்டம், சீருடைத்திட்டம், பள்ளிச்சீரமைப்புத் திட்டம் முதலான பல கல்வித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அவை குறித்த செய்திகளுக்கு முன்னுரிமையும் முழு அளவு இடமும் தாராளமாகத் தொடர்ந்து தந்த நாளிதழ்களில் முதலிடம் பெற்ற நாளிதழாக தினத்தந்தியைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றிய பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு.[3]
தினத்தந்தியின் இலவச இணைப்புகள்[தொகு]
நாள் | இலவச இணைப்புகள் |
---|---|
ஞாயிறு | ஞாயிறு மலர், குடும்ப மலர் |
திங்கள் | மாணவர் ஸ்பெஷல், கம்ப்யூட்டர் ஜாலம், வேலை வாய்ப்பு செய்திகள் |
செவ்வாய் | ஆன்மிகம் |
புதன் | வானவில் |
வெள்ளி | சிறுவர் தங்க மலர், வெள்ளி மலர் |
சனி | இளைஞர் மலர், முத்துச்சரம் மற்றும் சென்னை பதிப்பு மட்டும் உங்கள் முகவரி (ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில்நுட்பச் செய்திகள் |
- மேலும், 'தமிழ் மாத பலன்கள்' என்று ஜோதிடப் புத்தகம் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் திங்களன்று வெளியிடப்படுகின்றது.
தினத்தந்தியின் பிற பகுதிகள்[தொகு]
- கன்னித் தீவு - தொடர் கதை
- சாணக்கியன் சொல்
- ஆண்டியார் பாடுகிறார்
- தினபலன்
- மக்கள் மேடை
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தினம் ஒரு தகவல்
- தெரிந்து கொள்ளுங்கள்
- வெளிநாட்டு விநோதம்
மாணவர் ஸ்பெஷல்
விருதுகள்[தொகு]
- ஏழை, எளிய மக்கள் கல்வி கற்பதற்கு சிறப்பாக பணி புரிந்ததற்காக தினத்தந்தி நிர்வாக இயக்குநர் சிவந்தி ஆதித்தனாருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு வழங்கி கவரவித்தது.
- ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பத்தாம் வகுப்பு பிளஸ்-2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி மானியத்தொகை தினத்தந்தி வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சி.பா ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் தமிழக அறிஞர்களுக்கு பரிசு தொகையும் பொற்கிழியும் வழங்கி கவுரவித்து வருகிறது.
அரசியல் தாக்கம்[தொகு]
தி.மு.க சார்பில் 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் போட்டியிட்டதில் இருந்து 1976 இல் தி.மு.க அரசு நீக்கப்படும் வரை தி.மு.க சார்பு நாளிதழாகவும் பின்னர் ஓரளவு நடுநிலை நாளிதழாகவும் மாறியது.[4]
தினத்தந்தி குழும இதழ்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "About us, Daily Thanthi". Daily Thanthi. 09 Oct 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|access-date=
(உதவி) - ↑ "Submission of circulation figures for the audit period July - December 2015" (PDF). Audit Bureau of Circulations. 5 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 247
- ↑ ஊடகங்களில் செய்திகள் - ஒரு பார்வை