திருப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருப்பூர்
—  மாநகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். பழனிசாமி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 2.479 (2011) (7th)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


301 metres (988 ft)

திருப்பூர் (Tiruppur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, திருப்பூர் மாவட்டத் தலைநகரமாகும்.[4] இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் இதுவும் ஒன்று. மேலும் தமிழ்நாட்டின் 7-வது மிகப்பெரிய நகரம் ஆகும்.[சான்று தேவை] மேலும் திருப்பூரில் இருந்து காமநாயக்கன் பாளையம் 28 கி.மீ ஆகும். இதுவே இந்த மாவட்ட எல்லைப் பேரூராட்சி ஆகும்.

வேலம்பாளையம், எஸ்.நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகன்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட சாலைகள் விளங்குகின்றன.

திருப்பூரின் சிறப்பு[தொகு]

திருப்பூருக்கு மேலும் சிறப்பு - விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.

பெயர் காரணம்[தொகு]

மகாபாரத காலத்தில் (ஸ்ரீபுரம்) திருப்பூர் என்ற பெயர் உருவானதாக சொல்லப்படுகிறது. வரலாற்றின் படி, பாண்டவர்களின் கால்நடைகள் திருடர்களால் திருடப்பட்டன. அதேபோல அர்ஜூனனின் படைகளால் திருப்பூர் (திருப்பூர்: திருப்ப்பு: தமிழில் இடம் மாற்றவும்) அதாவது "அவர்கள் திரும்பிய இடத்திற்கு" என்று பொருள் கொள்ளப்பட்டது.[சான்று தேவை]

திருப்பூரின் தொழில் வளம்[தொகு]

தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர்.[சான்று தேவை] தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 இருக்கின்றன. ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உற்பத்திச் செய்கிறது. இதில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர்.[சான்று தேவை]

அகில இந்திய காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனம், கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது.

திருப்பூருக்கு மேலும் சிறப்பு செய்யும் தொழிலாக வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொழில் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.

திருப்பூரின் சுற்றுலாத் தலங்கள்[தொகு]

திருப்பூர் இறை வழிபாடு தலங்கள்[தொகு]

அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோவில்[தொகு]

அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் சர்க்கார் பெரியபாளையம் என்ற இடத்தில் உள்ளது சுக்ரீஸ்வரர் திருக்கோவில். ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

இந்த ஆலயம் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். எனவே இந்தத் தலம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்பாள், தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. ஆலய சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவா ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.

இந்தக் கோவிலில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களும் கோவிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

பயிறாக மாறிய மிளகு : முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி, இந்த ஆலயத்தின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றி சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார்.

மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, வியாபாரி பாசிப்பயிறு இருப்பதாக பொய்யுரைத்தார். பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளன. ஆலயத்தின் முன்பாக வைத்து பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, அந்த வியாபாரி கதறி அழுதார். இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல்.

வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்துடன் கடந்த 14 வருடங்களாக அஷ்டமி தேய்பிறையில் கால பைரவர் பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ஆலய அமைப்பு :[தொகு]

1952-ம் ஆண்டு கோவிலை புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது தெரியவந்தது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு நந்தி :[தொகு]

இந்தக் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை அறிந்து இறைவனை வேண்டி மன்னிப்பு கேட்டார்.

பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. ஆகவேதான் இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது...

  • திருப்பூர் திருப்பதி
  • கைலாசநாதர் திருக்கோயில்
  • திருமுருகன் பூண்டி திருக்கோயில்
  • பெருமாள் கோயில், அழகு மலை
  • ஜோசப் சர்ச்
  • அருள்மிகு கொண்டத்துகாளியம்மன் திருக்கோவில்

திருப்பூர் ஆறுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tiruppurcorp.tn.gov.in/index.html

மேலும் பார்க்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பூர்&oldid=2612170" இருந்து மீள்விக்கப்பட்டது