பண்ருட்டி (கடலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பண்ருட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பண்ருட்டி
—  முதல் நிலை நகராட்சி்  —
பண்ருட்டி
இருப்பிடம்: பண்ருட்டி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°46′N 79°33′E / 11.77°N 79.55°E / 11.77; 79.55ஆள்கூறுகள்: 11°46′N 79°33′E / 11.77°N 79.55°E / 11.77; 79.55
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் பண்ருட்டி வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]
நகராட்சித் தலைவர்.
நாடாளுமன்ற உறுப்பினர்.
மக்கள் தொகை 60 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


32 மீட்டர்கள் (105 ft)

இணையதளம் www.municipality.tn.gov.in/Panruti/

பண்ருட்டி (ஆங்கிலம்:Panruti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டம் மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, என்பது மறுவி பண்ருட்டி என்று பெயர் பெற்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 60,323 பேர் இங்கு வாழ்கின்றனர்.[4] இவர்களில் 50% பேர் ஆண்களும், 50% பேர் பெண்களும் ஆவர். பண்ருட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76.19% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 62% ஆகவும் அமைகிறது. இது இந்தியத் தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட கூடியதே. பண்ருட்டி மக்கள்தொகையில் 6,257 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

தொழில்[தொகு]

பண்ருட்டி வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. இங்கு செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவைப் பயிரிடுகின்றனர். இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே, சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது.

பண்ருட்டி தொடர்வண்டி நிலையம்.
பண்ருட்டி பெரிய கோயிலின் இரவு தோற்றம்

முக்கிய பிரமுகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "2011 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி". இந்திய அரசு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ருட்டி_(கடலூர்)&oldid=2934346" இருந்து மீள்விக்கப்பட்டது