உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லை காளி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளி கோயில்
கோயில் முகப்பு
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:காளி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

தில்லை காளி கோயில் (Thillai Kali Temple) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரின் புறநகரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். 1229 முதல் 1278 வரை கடலூரை ஆண்ட பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சடாவர்மன் சுந்தர பாண்டிய மன்னரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. [1]

கோயில்

[தொகு]
நடராசருடன் காளி நடனமாடுதல், உருத்ர தாண்டவம். சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள சிற்பம்

சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. காளி தேவி, சிவனுடனான நடனப் போட்டியில் தோற்ற பிறகு, இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது.

சிவம் (சிவபெருமான்), சக்தி (பார்வதி) இவர்களில் மேலானவர் யார் என்று ஒரு வாதம் வந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விஷ்ணு, பிரம்மா மற்றும் பிற தெய்வங்களின் முன் சிதம்பரத்தில் ஒரு நடன நிகழ்ச்சி நடத்திப்பட்டது. அவர்கள் நடனம் ஆடுகையில், சிவன் தோற்கடிக்கப்படவிருந்தார்.[2]

ஆனால் சிவன் உருத்ர தாண்டம் என்ற நடனத்தை முழுமையாக அறிந்திருந்ததால், தலையின் மேலே காலை தூக்கி வைத்து நடனம் ஆடினார். பார்வதியால் இந்த தோரணையில் சமமாக நன்றாக நடனம் ஆட முடியவில்லை. எனவே தோல்வியை ஒப்புக்கொண்டார்.

கோபத்தில் பார்வதி தனது உக்கிரமான காளி வடிவத்தை எடுத்து சிதம்பரத்தை (தில்லை) விட்டு நகர எல்லைக்கு வெளியே குடியேறினார். இதனால், இங்கே தில்லை காளி என்று வணங்கப்படுகிறாள். வேதம் ஓதியும் காளியைப் புகழ்ந்தும் அவளுடைய கோபத்தை பிரம்மா தணித்தார்.

காளி மகிழ்ந்து, பிரம்மாவைப் போன்ற நான்கு தலைகளுடன் ஒரு மென்மையான வடிவத்தை எடுத்து, தில்லை அம்மன் (தில்லையின் தாய்) அல்லது பிரம்மா சாமுண்டீசுவரி என்று அழைக்கப்பட்டார்.

கோயிலில் இரண்டு முக்கிய சன்னதிகள் உள்ளன. மேற்கு நோக்கிய சன்னதியில் தெய்வம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மா சாமுண்டீசுவரியாகக் காட்சியளிக்கிறார்.

கிழக்கு நோக்கிய சன்னதியில், தேவி தில்லை காளி என்றழைக்கப்படும் தனது மூர்க்கமான வடிவத்தில் தோன்றுகிறாள்.

சரசுவதி தேவி வீணா வித்யாம்பிகையாகவும், கடம்பவன தட்சிணா ரூபிணி என்ற பெண் வடிவத்தைக் கொண்ட தட்சிணாமூர்த்திக்காகவும் (சிவனின் ஒரு வடிவம்) வீற்றிருக்கும் மற்ற முக்கியமான சன்னதிகள் உள்ளன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "சகல சௌபாக்கியங்கள் அருளும் தில்லை காளி கோயில்". தினமணி. https://www.dinamani.com/religion/religion-news/2018/Aug/04/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2974367.html. பார்த்த நாள்: 10 November 2025.
  2. ↑ V., Meena (1974). Temples in South India (1st ed.). Kanniyakumari: Harikumar Arts. p. 41.
  3. ↑ "Thillai Kali". Dinamalar Temple. DINAMALAR.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லை_காளி_கோயில்&oldid=4425664" இலிருந்து மீள்விக்கப்பட்டது