மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மணிமுக்தா ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மணிமுத்தாறு தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாறு சேத்தியாத்தோப்புக்கு அருகில் வெள்ளாற்றுடன் இணைந்து, பரங்கிப்பேட்டையில் வங்கக் கடலில் கலக்கிறது.

மணிமுக்தா அணை[தொகு]

கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை கடந்த 1970 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசனத்தை சேர்ந்த 5,493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கல்வராயன்மலைப் பகுதியில் இருந்து மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு தண்ணீர் வருகிறது. மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடை வழியாகவும் அணைக்கு நீர் வருகின்றது[1] தமிழ்நாடு நீர்வளத் துறையில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காகத் தனி நபர்களிடம் குத்தகைக்கு விடப்படுகிறது.[2]


  1. "மணிமுக்தா அணை முழுகொள்ளளவை எட்டியது". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/manimukta-dam-reached-full-capacity-829045. பார்த்த நாள்: 9 November 2023. 
  2. "மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா- 7 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கின". மாலைமலர். https://www.maalaimalar.com/news/state/7-thousand-kg-of-fish-were-caught-during-fishing-festival-at-manimukta-dam-near-kallakurichi-608828. பார்த்த நாள்: 9 November 2023.