பாபநாசம் அணை
பாபநாசம் அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
புவியியல் ஆள்கூற்று | 8°42′43″N 77°23′35″E / 8.712°N 77.393°Eஆள்கூறுகள்: 8°42′43″N 77°23′35″E / 8.712°N 77.393°E |
திறந்தது | 1942 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 143 ft (44 m) |
உயரம் (foundation) | 200 ft (61 m) |
நீளம் | 744 ft (227 m) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | பாபநாசம் நீர்தேக்கம் |
மொத்தம் capacity | 5.5×10 9 cu ft (126,263 acre⋅ft) |
மின் நிலையம் | |
Operator(s) | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் |
Commission date | அலகு 1: ஜூலை 8, 1944 அலகு 2: டிசம்பர் 12, 1944 அலகு 3: ஜூன் 10, 1945 அலகு 4: ஜூலை 7, 1951 |
வகை | எடையீர்ப்பு அணை |
சுழலிகள் | 4 x 8 MW பிரான்சிசு-வகை |
பெறப்படும் கொள்ளளவு | 32 MW |
பாபநாசம் அணை, தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். இந்த அணையில் 143 அடிவரை நீரைத் தேக்க இயலும். அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1942 இல் இந்த அணை கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன[1]. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ,தென்காசி மாவட்டங்களின் ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை அணை தருகிறது.
புனல்மின் உற்பத்தி நிலையம்[தொகு]
பாபநாசம் அணையில் புனல் மின் நிலையம் செயல்பட்டுவருகிறது. இது 28 மெகாவாட் திறன் கொண்டது. இதில் நான்கு ஃபிரான்சிஸ் விசையாழி-மின்னாக்கிகள் உள்ளன. முதல் அலகு 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் இயக்கப்படுகிறது.[2][3]