விருதுநகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விருதுநகர் மாவட்டம்
TN Districts Virudunagar.png
விருதுநகர் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் விருதுநகர்
மிகப்பெரிய நகரம் விருதுநகர்
ஆட்சியர்
திரு V ராஜாராமன் இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

நஜ்மல்ஹோடா
பரப்பளவு 4243 Sq. Km.
மக்கள் தொகை
17,51,548
வட்டங்கள் 8
ஊராட்சி ஒன்றியங்கள் 11
நகராட்சிகள் 7
பேரூராட்சிகள் 9
ஊராட்சிகள் 450
வருவாய் கோட்டங்கள் 2

விருதுநகர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் விருதுநகர் ஆகும்.

எல்லைகள்[தொகு]

தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் வடமேற்கில் தேனி மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,751,301 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இதில் 44.39% நகர் புற மக்கள் தொகையாகும்.[1]

நிர்வாகம்[தொகு]

விருதுநகர் மாவட்டத்தின் வட்டங்கள்

வட்டங்கள்[தொகு]

இம்மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. அருப்புக்கோட்டை
  2. காரியாப்பட்டி
  3. இராஜபாளையம்
  4. சாத்தூர்
  5. சிவகாசி
  6. ஸ்ரீவில்லிப்புத்தூர்
  7. திருச்சுழி
  8. விருதுநகர்

சுற்றுலா[தொகு]

சஞ்சீவி மலை[தொகு]

இராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் சஞ்சீவி மலை உள்ளது. இங்குள்ள அமைதியும் எழிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இராமாயணத்தில் இலங்கைப்போரின்போது மயங்கி விழுந்த இலக்குமணனைக் காப்பாற்ற அனுமன் இம்மலையைக் கொண்டு வந்ததாகவும் பின்னர் இங்கு வீசியெறிந்ததாகவும் உள்ளூர்க் கதைகள் கூறுகின்றன. ஆகவே இங்கு உயிர்காக்கும் மூலிகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர்[தொகு]

தமிழக அரசின் இலச்சினையில் இடம் பெற்றிருக்கும் 12 நிலை கோபுரம் இவ்வூரின் அடையாளமாக விளங்குகிறது. இந்தக் கோபுரம் 192 அடி உயரமுடையது. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் வழிபட்ட கோவில் ஆகும். ஆடிப்பூரம் திருவிழாவின்போது ஓடும் தேர் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிப்புதூரின் பால்கோவாவும் பிரசித்தமானது.

செண்பகத்தோப்பு மரஅணில் வனவிலங்கு உய்விடம்[தொகு]

செண்பகத்தோப்பு மீன்வெட்டி பாறை அருவி

ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்துள்ள மலைத்தொடரில் பல அரிய தாவரங்களும் உயிரினங்களும் உள்ளன. 480 ச.கி.மீ பரப்பில் 1989ஆம் ஆண்டு செண்பகத்தோப்பு என்றவிடத்தில் மரஅணில் வனவிலங்கு உய்விடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தென்மேற்கில் பெரியார் புலிச் சரணாலயத்தினைத் தொடர்ந்தும் வடமேற்கில் மேகமலை காடுகளை அடுத்தும் அமைந்துள்ளது. இந்த உய்விடத்தில் அருகிவரும் மர அணில்களின்(arboreal - Grizzled Giant Squirrel -Ratufa macrora) வாழ்விடமாக உள்ளது. பழுப்பு நிற அணில்கள் ஓர் சிறு பூனையின் அளவில் 1 முதல் 1.8 மிலோவரை எடையுள்ளன. 735மிமீ வரை நீளமுள்ளன. மரக்கிளைகள் சந்திக்கும் பிரிவுகளில் கூடு கட்டுகின்றன. இதனால் ஆபத்து நேரங்களில் ஓர் கிளையிலிருந்து மற்றொன்றிற்குத் தாவிச் செல்வது எளிதாகிறது. இதனைப் பறக்கும் அணில் என்றும் கூறுவர்.

தேவதானம்[தொகு]

இராஜபாளையத்திலிருந்து 15கிமி தொலைவில் தென்காசி செல்லும் வழியில் அமைந்துள்ளது , இங்கு சாஸ்தாகோவில் ஆறு மற்றும் அணைக்கட்டும் அமைந்துள்ளது,

விருதுநகர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி சின்னம் பெற்ற வாக்குகள் பதிவான வாக்குகள்  %
இராஜபாளையம் கே. கோபால்சாமி அதிமுக 80,125 1,48,525 54
திருவில்லிபுத்தூர் என். பொன்னு பாண்டியன் இகம்யூ South Asian Communist Banner.svg 73,485 153739 48
சாத்தூர் உதயகுமார் அதிமுக 88,918 1,52,115 58
சிவகாசி ராஜேந்திர பாலாஜி அதிமுக 87,333 1,47,647 65
விருதுநகர் க.பாண்டியராஜன் தேமுதிக 70,441 1,34,546 52
அருப்புக்கோட்டை வைகைச்செல்வன் அதிமுக 76,546 1,49,640 51
திருச்சுழி தங்கம் தென்னரசு திமுக 81,613 1,48,867 55

விருதுநகர் மாவட்ட மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதி மக்களவைத் தொகுதி மக்களவை உறுப்பினர் கட்சி சின்னம்
இராஜபாளையம் , திருவில்லிபுத்தூர் தென்காசி மக்களவைத் தொகுதி வசந்தி முருகேசன் அதிமுக
சாத்தூர் , சிவகாசி , விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை விருதுநகர் மக்களவைத் தொகுதி இராதாகிருசுணன் அதிமுக
திருச்சுழி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அன்வர்ராஜா அதிமுக

தேவாரத் திருத்தலங்கள்[தொகு]

திருச்சுழி திருமேனிநாதர் கோயில் என்ற தேவார பாடல் பெற்ற சிவாலயம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருதுநகர்_மாவட்டம்&oldid=1783781" இருந்து மீள்விக்கப்பட்டது