தஞ்சாவூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
தலைநகரம் தஞ்சாவூர்
மிகப்பெரிய நகரம் தஞ்சாவூர்
மாவட்ட ஆட்சித் தலைவர்
அண்ணாதுரை
பரப்பளவு 3396.57கி.மீ²
மக்கள் தொகை
(கணக்கெடுப்பு வருடம்)
அடர்த்தி
2405890 (2011)
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 9
ஊராட்சி ஒன்றியங்கள் 14
மாநகராட்சி 1
நகராட்சிகள் 3
பேரூராட்சிகள் 21
ஊராட்சிகள் 589
பின்குறிப்புகள்

தஞ்சாவூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தஞ்சாவூர் ஆகும்.

வரலாறு[தொகு]

பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது தஞ்சாவூராகும். தஞ்சை மராட்டியரிடம் இருந்து இப்பகுதியின் ஆட்சி உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் 1798 இல் இதை ஒரு மாவட்டமாக உருவாக்கினர்.

வருவாய் கோட்டங்கள்[தொகு]

வருவாய் வட்டங்கள்[தொகு]

மாநகராட்சி[தொகு]

நகராட்சிகள்[தொகு]

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

பேரூராட்சிகள்[தொகு]

மக்களவைத் தொகுதி[தொகு]

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கான இரு மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி), ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி), பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி), பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி), திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி), திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி), பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுடன் நாகப்பட்டிணம் மாவட்டத்திலிருக்கும் மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி), சீர்காழி (தனி) (சட்டமன்றத் தொகுதி), பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)களும் சேர்த்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது.

தொகுதி உறுப்பினர் கட்சி
தஞ்சாவூர் எம். ரெங்கசாமி அதிமுக
ஒரத்தநாடு இராமச்சந்திரன் திமுக
பட்டுக்கோட்டை சேகர் வி  அதிமுக
பேராவூரணி கோவிந்தராசு அதிமுக
திருவையாறு துரை சந்திரசேகரன்   திமுக
கும்பகோணம் க.அன்பழகன் திமுக
திருவிடைமருதூர் செழியன் கோவி திமுக
பாபநாசம் இரா. துரைக்கண்ணு அதிமுக

இதையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_மாவட்டம்&oldid=2543014" இருந்து மீள்விக்கப்பட்டது