உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லம்

ஆள்கூறுகள்: 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E / 10.72; 79.08
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லம்
—  பேரூராட்சி  —
வல்லம்
இருப்பிடம்: வல்லம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E / 10.72; 79.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,758 (2011)

2,205/km2 (5,711/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.6 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi)

75 மீட்டர்கள் (246 அடி)

இணையதளம் www.townpanchayat.in/vallam

வல்லம் (Vallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

திருச்சி -- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை எண் 67-இல் அமைந்த வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

7.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,840 வீடுகளும், 16,758 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

வரலாறு

[தொகு]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E / 10.72; 79.08 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.

திடக்கழிவு மேலாண்மை

[தொகு]

வல்லத்தில் வீடுகள் மற்றும் தொழிலகங்களில் சேரும் குப்பகைகளை பேரூராட்சி சேகர்த்து இங்கு அமைந்துள்ள “வளம் மீட்பு பூங்காவில்” தரம் பிரித்து உரமாக மாற்றுகின்றது. தஞ்சாவூரில் 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வல்லமும் ஒன்றாகும். இதற்காக அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 22 முதல் 40 இலட்சம் வரை அரசு வழங்குகிறது. இங்கு குப்பைகள் மட்கும் குப்பைகள் மட்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து, மட்கும் குப்பைகள் மண்புழு மூலம் உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது.[8]

வல்லம், தஞ்சாவூர், திடக்கழிவு மேலாண்மை பூங்கா
திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்ற போது

கல்வி நிறுவனங்கள்

[தொகு]

வரலாற்று பெருமை நிறைந்த இவ்வூரில் இன்று பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பிரிஷ்ட் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகும். மேலும், அடைக்கலமாதா கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி மற்றும் மருது பாண்டியர் கல்லூரி போன்ற கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளும் இங்கு உள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. வல்லம் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/vallam/population
  5. Vallam Population Census 2011
  6. Vallam Town Panchayat
  7. "Vallam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. https://www.dinamalar.com/news_detail.asp?id=1161557


"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லம்&oldid=3895268" இலிருந்து மீள்விக்கப்பட்டது