கோவி. செழியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோவி. செழியன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) உமாதேவி
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

கோவி. செழியன் (Govi. Chezhian) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளராகவும், மாணவரணி இணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.தமிழக சட்டமன்றத்தின், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். இவருக்கு உமாதேவி.என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும், சபரிசெல்வன் என்ற மகளும் உள்ளனர். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலையும், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும். படித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், முதுகலை சமூகவியல் ஆகியவற்றை முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதியின் பேச்சு குறித்து ஆய்வு செய்து முனைவர் . பட்டம் பெற்றுள்ளார்.[1]

2011 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், 2016 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் திருவிடைமருதூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இவர் தமிழக அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கபட்டார்.[4]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 திருவிடைமருதூர் திமுக
2016 திருவிடைமருதூர் திமுக

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவி._செழியன்&oldid=3144329" இருந்து மீள்விக்கப்பட்டது