தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2011 இந்தியாவின் கொடி 2021
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
தமிழ்நாடு சட்டமன்றத்தின் அனைத்து 232 இடங்கள் (இரு இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது)
மே 16, 2016 (2016-05-16)
முதல் கட்சி இரண்டாம் கட்சி
Jayalalithaa1.jpg M. Karunanidhi.jpg
தலைவர் ஜெ. ஜெயலலிதா மு. கருணாநிதி
கட்சி அஇஅதிமுக திமுக
கூட்டணி அஇஅதிமுக (தனித்து போட்டி) திமுக கூட்டணி
தலைவரானது 1989[1] 1969[2]
தலைவரின் தொகுதி ராதாகிருஷ்ணன் நகர் திருவாரூர்
முந்தைய தேர்தல் 150 இடங்கள் 32 இடங்கள்
வென்ற தொகுதிகள் 134 98
மாற்றம் Red Arrow Down.svg16 Green Arrow Up Darker.svg66
மொத்த வாக்குகள் 17,617,060 13,670,511
விழுக்காடு 41 40
மாற்றம் Green Arrow Up Darker.svg2.4 Green Arrow Up Darker.svg9.2
Tamil Nadu Legislative Assembly election, 2016-ta.png
2016 தேர்தல் வரைபடம் (தொகுதி வாரியாக)

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இட நிலவரம்

பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு 8 இடங்களை கைப்பற்றியது.[3][4][5][6] விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி எத்தொகுதியையும் கைப்பற்றவில்லை. வாக்குகள் எண்ணும் பணி 2016 மே 19 அன்று இடம்பெற்றது.

இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு

பொருளடக்கம்

தேர்தல் அட்டவணை[தொகு]

தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[7].

தேதி நிகழ்வு
22 ஏப்ரல் 2016 மனுத்தாக்கல் ஆரம்பம்
29 ஏப்ரல் 2016 மனுத்தாக்கல் முடிவு
30 ஏப்ரல் 2016 வேட்புமனு ஆய்வு நாள்
2 மே 2016 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
16 மே 2016 வாக்குப்பதிவு
19 மே 2016 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல்[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி[8]:

  • பெண் வாக்காளர்கள் = 2,93,33,927
  • ஆண் வாக்காளர்கள் = 2,88,62,973
  • மூன்றாம் பாலினத்தவர் = 4,720

வயதுவாரியாக[தொகு]

  • 18 முதல் 19 வயதுடையோர் - 21.05 இலட்சம்
  • 20 முதல் 29 வயதுடையோர் - 1.17 கோடி
  • 30 முதல் 39 வயதுடையோர் - 1.39 கோடி
  • 40 முதல் 49 வயதுடையோர் - 1.24 கோடி
  • 50 முதல் 59 வயதுடையோர் - 87.32 இலட்சம்
  • 60 முதல் 69 வயதுடையோர் - 56.15 இலட்சம்
  • 70 முதல் 79 வயதுடையோர் - 26.58 இலட்சம்
  • 80 வயதிற்கு மேற்பட்டோர் - 8.4 இலட்சம்

அதிக வாக்காளர்களும், குறைந்த வாக்காளர்களும்[தொகு]

  • சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி - 6.02 இலட்சம் வாக்காளர்கள்
  • கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி - 1.86 இலட்சம் வாக்காளர்கள்

தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள்[தொகு]

கூட்டணி அமைப்பதற்கான முன்னெடுப்புகள்[தொகு]

தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படாத நிலையிலேயே கட்சிகள் கூட்டணி குறித்த முன்னெடுப்புகளை டிசம்பர் 2015 இறுதிவாக்கில் எடுக்கத் தொடங்கின.

அதிமுக[தொகு]

"பொருத்தமான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்" என கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்[9].

தேமுதிக[தொகு]

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, பாஜக போன்ற கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியும் பெரிதும் முயற்சி செய்துவந்த நிலையில், தனது கட்சி தனித்துப் போட்டியிடுமென கட்சித் தலைவர் விஜயகாந்த் மார்ச் 10 அன்று அறிவித்தார்[10]. எனினும் தேமுதிக பின்னாளில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் உடன்படிக்கைக் கண்டது.

மக்கள் நலக் கூட்டணி[தொகு]

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஈடுபட்டனர். பின்னர் தமிழ் மாநில காங்கிரசும் (த.மா.க) இக்கூட்டணியில் இணைந்தது.

பாஜக[தொகு]

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது.[11].

பாமக[தொகு]

திமுக, அதிமுக தவிர, தங்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக இக்கட்சி அறிவித்தது. இத்தேர்தலில் அதிமுக, நாம் தமிழர் கட்சிகளைப் போல தனித்துப் போட்டியிட்டு 5.3 விழுக்காடு ஓட்டைப் பெற்று அதிமுக, திமுக வை அடுத்த மூன்றாவது தனித்தக் கட்சியாக இடம்பிடித்தது.

இறுதிவடிவம் பெற்ற கூட்டணிகள்[தொகு]

திமுக கூட்டணி[தொகு]

திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள்:

வரிசை எண் கட்சியின் பெயர் கட்சியின் தலைமை
1 திமுக மு.கருணாநிதி (கட்சித் தலைவர்)
2 இந்திய தேசிய காங்கிரசு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (தமிழகக் கட்சித் தலைவர்)
3 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கே. எம். காதர் மொகிதீன் (தமிழகக் கட்சித் தலைவர்)
4 மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா (கட்சித் தலைவர்)
5 புதிய தமிழகம் கட்சி க. கிருஷ்ணசாமி (கட்சித் தலைவர்)
6 பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர். தனபாலன் (கட்சித் தலைவர்)
7 விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பொன் குமார் (கட்சித் தலைவர்)
8 சமூக சமத்துவப் படை சிவகாமி (கட்சித் தலைவர்)
9 மக்கள் தேமுதிக சந்திர குமார் (கட்சித் தலைவர்)
  • திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுமென காங்கிரசின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் பிப்ரவரி 13 அன்று அறிவித்தார்[12]. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்களையும் திமுக அறிவித்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 4 தனி தொகுதிகளையும் திமுக ஒதுக்கியுள்ளது. [13]
  • திமுக கூட்டணியில் இடம்பெற்று தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. எம். காதர் மொகிதீன் பிப்ரவரி 15 அன்று தெரிவித்தார்[14].விழுப்புரம், பூம்புகார், கடையநல்லூர், வாணியம்பாடி, மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[15]
  • திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மார்ச் 19 அன்று அறிவித்தார்[16]. இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உளுந்தூர் பேட்டை தொகுதியை மீண்டும் திமுகவுக்கே கொடுத்துள்ளது. நாகை, இராமநாதபுரம், ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது[17]
  • திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) இணைந்து போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹக்லான் பாகவி மார்ச் 19 அன்று கூறினார்[18]. பின்னர் ஏப்ரல் 7 அன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் கசப்பு காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெகலான் பாகவி அறிவித்தார்.[19]
  • பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன் குமார்,சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி ஆகியோர் மார்ச் 29, 2016 அன்று திமுக கூட்டணியில் இடம் பெற்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார். [20].[21].
  • இத்தேர்தலில் தேமுதிகவில் இருந்து பிரிந்து வந்த மக்கள் தேமுதிக கட்சிக்கு மூன்று தொகுதிகள் (ஈரோடு கிழக்கு , மேட்டூர் , கும்மிடிப்பூண்டி) ஒதுக்கப்பட்டுள்ளன [22]
  • திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அமைப்புகள்: தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிற் சங்க சம்மேளனம் (தமிழ் மாநிலக் குழு), பாரதிய பழங்குடியினர் மக்கள் நலச் சங்கம், அகில இந்தியா பழந்தமிழர் மக்கள் கட்சி, நமது கொங்கு முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்து மருத்துவர் சமூக நலச் சங்கம், தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் உரிமை பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி விசைப்பம்பு மற்றும் கூடுதல் விசைப் பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாநில சங்கம், ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக தர்ஹாக்கள் பேரவை, தலித் பாதுகாப்பு பேரவை, தமிழர் நீதிக்கட்சி, இந்திய குடியரசு கட்சி (ராமதாஸ் அத்வாலே), சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு, காமராஜர் பசுமை பாரதம், அனைத்து மக்கள் முன்னேற்ற கழகம், ஆதி ஆந்திரா நற்பணி மன்றம், தமிழ்மாநில திராவிட முன்னேற்ற கழகம், கர்நாடக மாநில தெலுங்கு தேசம் பார்ட்டி, உழைப்பாளர் மக்கள் கழகம், முக்குலத்தோர் மக்கள் கட்சி, திராவிட தேசம் கட்சி, வன்னியர் கிறிஸ்தவர் பேரவை, தமிழ்நாடு பாரதிய ரிபப்ளிகன் பார்ட்டி, அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், தமிழ்நாடு யாதவர் சங்கம், பழங்குடியினர் வெற்றிச் சங்கம், சமாஜ்வாடி பார்ட்டி, தமிழ்நாடு, சமூக மக்கள் கட்சி, கிறிஸ்தவ மக்கள் கழகம், தமிழ்நாடு போயர் சேவா சமாஜம், எம்ஜிஆர் மக்கள் கட்சி, தமிழ்நாடு கன்னட சமுதாயம், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு அனைத்து சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு, நாடாளும் தெலுங்கு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன[23][24]. சிறிதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகம், திமுகவுக்கு ஆதரவு [25]

அதிமுக கூட்டணி[தொகு]

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள்:[26]

வரிசை எண் கட்சியின் பெயர் கட்சித் தலைமை
1 அதிமுக ஜெ. ஜெயலலிதா (கட்சிப் பொது செயலாளர்)
2 மனிதநேய ஜனநாயக கட்சி மு.தமிமுன்அன்சாரி (மாநில பொதுச்செயலாளர்)
3 தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஷேக் தாவூத்
4 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எஸ்.எம். பாக்கர்
5 இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன்
6 கொங்கு பேரவை கட்சி உ.தனியரசு
7 சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார்
8 சமத்துவ மக்கள் கழகம் எர்ணாவூர் நாராயணன்
  • அதிமுக கூட்டணியில் தொகுதி கிடைக்காததால் அதில் இருந்து மூவேந்தர் முன்னணி கழகம் விலகியது.[27]
  • தொகுதி உடன்பாடு எட்டப்படாததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏப்ரல் 10 அன்று கூட்டணியிலிருந்து விலகியது[28].
  • கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரே சின்னத்தில் (இரட்டையிலை) போட்டியிட்டன.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி[தொகு]

இடம்பெற்ற கட்சிகள்:

வரிசை எண் கட்சியின் பெயர் கட்சியின் தலைமை
1 தேமுதிக விஜயகாந்த் (கட்சித் தலைவர்)
2 மதிமுக வைகோ (கட்சி பொதுச்செயலாளர்)
3 இந்திய கம்யூனிஸ்டு இரா. முத்தரசன் (தமிழகக் கட்சித் தலைவர்)
4 இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஜி. ராமகிருஷ்ணன் (கட்சித் தமிழகச் செயலாளர்)
5 விடுதலைச் சிறுத்தைகள் தொல். திருமாவளவன் (கட்சித் தலைவர்)
6 தமிழ் மாநில காங்கிரசு க வாசன் (கட்சித் தலைவர்)
  • மார்ச் 23, 2016 அன்று மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக தேர்தலுக்காக கூட்டணி அமைத்தது. தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். [29][30].
  • ஏப்பிரல் 9 அன்று தமிழ் மாநில காங்கிரசு தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தது. [31]

பாஜக கூட்டணி[தொகு]

இடம்பெற்ற கட்சிகள்:

வரிசை எண் கட்சியின் பெயர் கட்சியின் தலைமை
1 பாஜக தமிழிசை சௌந்தரராஜன் (மாநிலத் தலைவர்)
2 இந்திய சனநாயக கட்சி பாரிவேந்தர் (தலைவர்)
3 இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தேவநாதன் (தலைவர்)

கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்[தொகு]

  1. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்
  2. பாமக வேட்பாளர் பட்டியல்
  3. இந்திய சமூக ஜனநாயகக் கட்சி(எஸ்.டி.பி.ஐ கட்சி)
  4. தமிழக வாழ்வுரிமைக் கட்சி[32].
  5. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி[33].

தொகுதிப் பங்கீடு / கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை[தொகு]

கூட்டணி[தொகு]

வரிசை எண் கூட்டணியின் பெயர் கட்சி போட்டியிடும்
தொகுதிகள்
குறிப்புகளும் ஆதாரங்களும்
1 அதிமுக கூட்டணி அதிமுக 227 கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளர்கள் அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டனர்.[34] [35][36]
மனித நேய ஜனநாயக கட்சி 2 மனித நேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதன் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியும், நாகப்பட்டினத்தில் ஹாரூன் ரசீத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.[37]மனிதநேய ஜனநாய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் இதற்கு பதிலாக அக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என ஏப்பிரல் 21 அன்று அறிவிக்கப்பட்டது.[38]
இந்திய குடியரசு கட்சி 1
சமத்துவ மக்கள் கட்சி 1
கொங்குநாடு இளைஞர் பேரவை 1
முக்குலத்தோர் புலிகள் படை 1
தமிழ் மாநில முஸ்லிம் லீக் 1
2 திமுக கூட்டணி திமுக 174 [39][40][41]
இந்திய தேசிய காங்கிரசு 41 [42]
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.[43]
மனித நேய மக்கள் கட்சி 4 ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.[44]மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்தார்.[17]
புதிய தமிழகம் கட்சி 4 ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.[45][46]
மக்கள் தேமுதிக 3 ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.[22]
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[47]
சமூக சமத்துவப் படை 1 பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[48]
விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி 1 பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[49]
3 தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரசு அணி தேமுதிக 104 ஏற்கனவே ஏற்பட்டிருந்த தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உடன்பாட்டின்படி, தேமுதிகவிற்கு 124 இடங்கள் என்றும், மக்கள் நலக் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு 110 இடங்கள் என்றும் பங்கீடு இருந்தது. தமிழ் மாநில காங்கிரசு இந்தக் கூட்டணியில் இணைந்த பிறகு, பங்கீட்டில் இறுதி மாற்றங்கள் செய்யப்பட்டன[50]
மதிமுக 29
தமிழ் மாநில காங்கிரசு 26
மார்க்சிய கம்யூனிஸ்ட் 25
இந்திய கம்யூனிஸ்ட் 25
விடுதலை சிறுத்தைகள் கட்சி 25
4 பாஜக கூட்டணி பாஜக 141
இந்திய ஜனநாயக கட்சி 45
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 24
கொங்கு ஜனநாயகக் கட்சி 4

தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்[தொகு]

வரிசை எண் கட்சியின் பெயர் போட்டியிடும் தொகுதிகள் மேற்கோள்கள்
1 நாம் தமிழர் கட்சி 234 [51][52]
2 பாட்டாளி மக்கள் கட்சி 234
3 எஸ்.டி.பி.ஐ கட்சி (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) 30
4 சமாஜ்வாடி கட்சி 50

கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்[தொகு]

வரிசை எண் கட்சியின் பெயர் வேட்பாளர் பட்டியல் விவரம் குறிப்புகளும் மேற்கோள்களும்
1 நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்குரிய வேட்பாளர் பட்டியல். [53][54]
2 பாசக முதல் கட்டமாக 54 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மார்ச் 25 அன்று அறிவித்தது. [55][56]
இரண்டாவது வேட்பாளர் பட்டியல் மூலமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏப்ரல் 10 அன்று அறிவிக்கப்பட்டனர். [57][58]
கூட்டணி கட்சியான இஜ கட்சிக்கு 45 தொகுதிகளும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. [59][60]
57 பேர் கொண்ட 3ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது [61][62][63]
பென்னாகரத்தில் முதன்மை & மாற்று என ஆகிய இரு பாசக வேட்பாளர்களின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த இரு வேட்பாளர்களும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியை விட்டுநீக்கப்பட்டுள்ளனர்
3 அதிமுக அதிமுக ஏப்ரல் 4 அன்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. [64][65]
அதிமுக ஏப்ரல் 7 வரை 5ஆவது முறையாக வேட்பாளர்களை மாற்றியது. அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 6ஆவது முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டன. திருச்சி மேற்கு தொகுதிக்கு மனோகரனும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தமிழரசியும் ராதாபுரத்துக்கு இன்பதுரையும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 7ஆவது முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டன[66][67] [68] [69]
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் இதற்கு பதிலாக அக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. [38]
கும்பகோணம் தொகுதி வேட்பாளர் ராமநாதன் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் ரத்னா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் [70]
4 இந்திய தேசிய காங்கிரசு திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 41 தொகுதிகளின் பெயர்களை அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஏப்ரல் 7 அன்று அறிவித்தார். [71]
முதற்கட்டமாக 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். [72]
8 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரசு வெளியிட்டது. உதகமண்டலம் தொகுதியில் கணேசுக்கு பதிலாக ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். [73][74]
5 பாமக பாமக முதல் கட்டமாக 45 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஏப்ரல் 11 அன்று அறிவித்தது. [75][76].
பாமக இரண்டாம் கட்டமாக தான் போட்டியிடும் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. [77][78]
பாமகவின் 3ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. [79][80]
பாமகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உளுந்தூர்பேட்டையில் ராமமூர்த்தி மாற்றப்பட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலுவின் பெயர் அறிவிக்கப்பட்டது. [81][82]
முதல் முறை உளுந்தூர்பேட்டை வேட்பாளரை மாற்றிய பாமக இரண்டாவது முறையாக மயிலாப்பூர், தளி, பாலக்கோடு, திருத்துறைப்பூண்டி வேட்பாளர்களை மாற்றியது. சிவகாசி, குமாரபாளையம் தொகுதி பாமக வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். [83][84]
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளர் திருப்பதி வெற்றிக்கிழமை, நெல்லை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி வேட்புமனு விலக்கிக்கொள்ளும் நாளுக்கு பின்பு அதிமுகவில் இணைந்துள்ளார். [85]
வாசுதேவநல்லூர் தனித் தொகுதி பாமக வேட்பாளர் காசி பாண்டியன் திமுகவில் சேர்ந்துள்ளார். [86]
6 தேமுதிக 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விசயகாந்த் வெளியிட்டார். [87]
35 தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக விசயகாந்து வேட்பாளர்களை அறிவித்தார். [88]
18 வேட்பாளர்களைக் கொண்ட தேமுதிகவின் 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுவரை மொத்தம் 93 வேட்பாளர்களை தேமுதிக அறிவித்துள்ளது. [89][90]
தேமுதிக 11 பேர் கொண்ட 6வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. [91][92][93]
7 விசிக கட்சித் தலைவர் காட்டுமன்னார்குடியில் போட்டியிடுவார் என்பதை மட்டும் விசிக அறிவித்தது. [94]
விசிக போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. [95]
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டது. [96]
* காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவனும், ஆர்.கே.நகரில் வசந்திதேவி போட்டியிடுவார் என்றும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. [97]
12 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. [98][99]
மானாமதுரை , வானூர் தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். வானூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ம.தமிழ்செல்வன் மாற்றப்பட்டு கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் புதிய வேட்பாளராகவும், மானாமதுரை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கு.கா.பாவலன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சிவகங்கை மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளரான தீபா என்கிற திருமொழி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர். [100]
8 மதிமுக மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளை வைகோ அறிவித்தார். [101][102]
அண்ணாநகரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அப்போது மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். [103][104]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியிலிருந்து விலகி அவருக்கு பதில் விநாயகா ரமேசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. [105][106]
9 இந்திய பொதுவுடமைக் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது [107]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. [108][109]
10 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. [110]
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் 25 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். [111][112]
11 தமாகா தமாகா போட்டியிடும் 26 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. [113][114]
26 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். [115]
கிள்ளியூரில் ஜான் ஜேக்கபிற்கு பதிலாக குமாரதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. [116]
12 புதிய தமிழகம் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மருத்துவர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். [117][118]
13 தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. [119]
14 சமாஜ்வாடி கட்சி 36 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டது.
15 எஸ்.டி.பி.ஐ கட்சி எஸ்.டி.பி.ஐ கட்சி 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹக்லான் பாகவி அறிவித்தார். திரு.வி.க நகர் (தனி) தொகுதியில் புஷ்பராஜ், ராயபுரத்தில் கோல்டு ரபீக், துறைமுகத்தில் அமீர் ஹம்ஸா, தாம்பரத்தில் முகமது பிலால், மேலூரில் ரிஷி கபூர், சேலம் வடக்கில் அம்ஜத் பாஷா, ஈரோடு கிழக்கில் சாதிக் பாஷா ஆகியோர் போட்டி. [120]

தொகுதிகளில் கூட்டணிகள் / கட்சிகளின் போட்டி விவரம்[தொகு]

முக்கியக் கட்சிகளுக்கு இடையே இருந்த நேரடிப் போட்டிகள் குறித்த விவரம்[தொகு]

நேரடிப் போட்டி தொகுதிகளின் எண்ணிக்கை
அதிமுக (எதிர்) திமுக தொகுதிகள் விவரம் 169
அதிமுக (எதிர்) தேமுதிக தொகுதிகள் விவரம் 104
அதிமுக (எதிர்) இந்திய தேசிய காங்கிரசு 40
திமுக (எதிர்) தேமுதிக தொகுதிகள் விவரம் 75
திமுக (எதிர்) மதிமுக 24
இந்திய தேசிய காங்கிரசு (எதிர்) தமிழ் மாநில காங்கிரசு 9
பாஜக (எதிர்) இந்திய தேசிய காங்கிரசு தொகுதிகள் விவரம் 23

கட்சிகளின் தேர்தல் பரப்புரை[தொகு]

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்[தொகு]

வேட்புமனு தாக்கல், இறுதிப் பட்டியல்[தொகு]

தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட மனுக்கள் போட்டியிடுவோர் குறிப்புகளும், மேற்கோள்களும்
7151 3024 4127 351 3776 [121]
  • 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் வங்கி விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் இருக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.[122]
  • 25 ஏப்ரல் 2016 - திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.[123]
  • 28 ஏப்ரல் 2016 - 226 அதிமுக வேட்பாளர்களும் அதன் 7 கூட்டணி வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்[124] [125][126]
  • பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.[127]

கருத்துக் கணிப்புகள்[தொகு]

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்[தொகு]

  • திமுகவை விட அதிமுக சற்று முன்னணியில் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரிவித்தது[129][130].

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்[தொகு]

கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியான தேதி அதிமுக கூட்டணி திமுக கூட்டணி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி / மற்றவர்கள் குறிப்புகளும் ஆதாரங்களும்
டைம்ஸ் நவ் ஏப்ரல் 1, 2016 130 70 34 [131][132]
ஸ்பிக் செய்திகள் மே 4, 2016 136 81 3 [133]
நியூஸ் நேஷன் ஏப்ரல் 1, 2016 107 111 14 [134][135]
கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியான தேதி அதிமுக கூட்டணி திமுக கூட்டணி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பாமக பாஜக கூட்டணி இழுபறி நிலை அணுகுமுறை குறிப்புகளும் ஆதாரங்களும்
தந்தி டிவி [136] [137]
நியூஸ் 7 தொலைக்காட்சி - தினமலர் நாளிதழ் மே 2 - 6, 2016 87 141 1 2 1 2 ஒவ்வொரு தொகுதியிலும் 1000 பேர் வீதம், தமிழகத்தில் 234 தொகுதிகளில் மொத்தம் 2.34 லட்சம் வாக்காளர்கள் சந்திக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.[138] மேற்கு மண்டலம்[139], தெற்கு மண்டலம்[140], கிழக்கு மண்டலம்[141], வடக்கு மண்டலம்[142], சென்னை மண்டலம்[143], ஒட்டு மொத்தம்[144]
புதிய தலைமுறை தொலைக்காட்சி மே 9, 2016 164 66

வாக்குப்பதிவு[தொகு]

  • அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல், மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  • 232 தொகுதிகளுக்கான ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி = 74.26%

வாக்கு எண்ணிக்கை பணி[தொகு]

  • 68 நடுவங்களில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டது. இதற்கு அரை மணிநேரம் கழித்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

முடிவுகள்[தொகு]

[உரை] – [தொகு]
2016 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்[145]
கட்சி சுருக்கம். கூட்டணி வாக்குகள் % போட்டியிட்ட
தொகுதிகள்
வென்ற
தொகுதிகள்
+/-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிமுக 1,76,17,060 41.06% 227 134 Red Arrow Down.svg16
திராவிட முன்னேற்றக் கழகம் திமுக திமுக 1,36,70,511 31.86% 173 89 Green Arrow Up Darker.svg66
இந்திய தேசிய காங்கிரசு இதேகா திமுக 27,74,075 6.47% 41 8 Green Arrow Up Darker.svg3
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இஒமுலீ திமுக 3,13,808 0.73% 5 1 Green Arrow Up Darker.svg1
பாட்டாளி மக்கள் கட்சி பாமக 23,00,775 5.36% 234 0 Red Arrow Down.svg3
பாரதிய ஜனதா கட்சி பாஜக தேஜகூ 12,28,692 2.86% 234 0 Straight Line Steady.svg
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக மநகூ 10,34,384 2.41% 104 0 Red Arrow Down.svg29
சுயேச்சைகள் சுயே 6,17,907 1.44% 234** 0 Straight Line Steady.svg
நாம் தமிழர் கட்சி நாதக 4,58,104 1.07% 234 0 Straight Line Steady.svg
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மதிமுக மநகூ 3,73,713 0.87% 28 0 Straight Line Steady.svg
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சிபிஐ மநகூ 3,40,290 0.79% 25 0 Red Arrow Down.svg9
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக மநகூ 3,31,849 0.77% 25 0 Straight Line Steady.svg
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஎம் மநகூ 3,07,303 0.72% 25 0 Red Arrow Down.svg10
தமிழ் மாநில காங்கிரசு தமாகா மநகூ 2,30,711 0.54% 26 0 Straight Line Steady.svg
புதிய தமிழகம் கட்சி புதக திமுக 2,19,830 0.51% 4 0 Red Arrow Down.svg2
மனிதநேய மக்கள் கட்சி மநேமக திமுக 1,97,150 0.46% 5 0 Red Arrow Down.svg2
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கொமதேக 1,67,560 0.39% n/a 0 Straight Line Steady.svg
பகுஜன் சமாஜ் கட்சி பசக 97,823 0.23% n/a 0 Straight Line Steady.svg
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி இசசக 65,978 0.15% எ/இ 0 Straight Line Steady.svg
நோட்டா நோட்டா 5,61,244 1.31% 234*
மொத்தம் 4,29,08,767 100.00% 234 232 Red Arrow Down.svg2


இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andipatti Constituency". http://www.tamilnadumlas.com/admk_andipatti_j_jayalalitha.asp. 
  2. "Jun 1969 - Orissa. - Report on Inquiry into Corruption Charges against Former Ministers". Keesing's Record of World Events. 1 June 1969. http://www.keesings.com/search?kssp_selected_tab=article&kssp_a_id=23416n01ind. பார்த்த நாள்: 1 March 2011. 
  3. "May is the cruellest month: DMK pays heavy price for seat-sharing". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (20 மே 2016). பார்த்த நாள் 20 மே 2016.
  4. "Congress could be DMK's Achilles' heel". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (8 மே 2016). பார்த்த நாள் 20 மே 2016.
  5. "4 States, Puducherry was set to go to polls between April 4 and May 16". The Hindu. 4 மார்ச் 2016. http://www.thehindu.com/news/national/election-dates-for-five-states-announced/article8313813.ece. 
  6. "Simplified For You: Tamil Nadu Electoral Landscape In 8 Charts".
  7. "4 States, Puducherry to go to polls between April 4 and May 16". தி இந்து (ஆங்கிலம்). பார்த்த நாள் 5 மார்ச் 2016.
  8. "Voters count stands at 5.82 cr.". தி இந்து (ஆங்கிலம்) (30 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 1 மே 2016.
  9. "Right decision at the right time: Jayalalithaa on alliance". தி இந்து (ஆங்கிலம்) (31 டிசம்பர் 2015). பார்த்த நாள் 31 டிசம்பர் 2015.
  10. "‘Captain’ Vijayakant to steer his own ship". தி இந்து (ஆங்கிலம்) (10 மார்ச் 2016). பார்த்த நாள் 11 மார்ச் 2016.
  11. "Vijayakant keeps BJP guessing". தி இந்து (ஆங்கிலம்) (31 டிசம்பர் 2015). பார்த்த நாள் 31 டிசம்பர் 2015.
  12. "Congress, DMK firm up alliance". தி இந்து (ஆங்கிலம்) (14 பிப்ரவரி 2016). பார்த்த நாள் 13 பிப்ரவரி 2016.
  13. "சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்களையும் திமுக அறிவித்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 4 தனி தொகுதிகளையும் திமுக ஒதுக்கியுள்ளது.". தட்சு தமிழ். பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
  14. "திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்: கே.எம். காதர் மொகிதீன்". தினமணி (15 பிப்ரவரி 2016). பார்த்த நாள் 15 பிப்ரவரி 2016.
  15. "இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் பட்டியல் வெளியீடு". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  16. "திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்:அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா". தி இந்து (19 மார்ச் 2016). பார்த்த நாள் 19 மார்ச் 2016.
  17. 17.0 17.1 "உளுந்தூர்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி போட்டியில்லை: ஜவாஹிருல்லா அறிவிப்பு". தட்சு தமிழ். பார்த்த நாள் 15 ஏப்ரல் 2016.
  18. "திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும்:அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹக்லான் பாகவி". தினமணி (20 மார்ச் 2016). பார்த்த நாள் 20மார்ச் 2016.
  19. "தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. திமுக கூட்டணியில் இருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ கட்சி!". தட்சு தமிழ். பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
  20. |url = http://tamil.oneindia.com/news/tamilnadu/nrd-led-party-gets-seat-from-dmk-250022.html |publisher = தமிழ் ஒன் இந்தியா |accessdate = 29 மார்ச் 2016|date = 29 மார்ச் 2016 }}
  21. |url = http://tamil.oneindia.com/news/tamilnadu/pon-kumar-party-seeks-5-seats-from-dmk-250016.html%7Cpublisher = தமிழ் ஒன் இந்தியா |accessdate = 29 மார்ச் 2016|date = 29 மார்ச் 2016 }}
  22. 22.0 22.1 "திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி தொகுதிகள்". தட்சு தமிழ். பார்த்த நாள் 12 ஏப்ரல் 2016.
  23. "திமுக கூட்டணிக்கு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன". தமிழ் இந்து (15 மார்ச் 2016). பார்த்த நாள் 15 மார்ச் 2016.
  24. "திமுக கூட்டணிக்கு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன". தமிழ் ஒன் இந்தியா (17 மார்ச் 2016). பார்த்த நாள் 17 மார்ச் 2016.
  25. "அதிமுகவில் சீட் கிடைக்காத மூவேந்தர் முன்னேற்ற கழகம், திமுகவுக்கு ஆதரவு". தட்சு தமிழ். பார்த்த நாள் 23 ஏப்ரல் 2016.
  26. "அதிமுக கூட்டணி". விகடன் (13 மார்ச் 2016). பார்த்த நாள் 13 மார்ச் 2016.
  27. "சீட் தராத அதிமுக கூட்டணியில் இருந்து மூவேந்தர் முன்னணி கழகம் விலகியது: சேதுராமன்". தட்சு தமிழ். பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
  28. "தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு". மக்கள் முரசு. பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  29. http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmdk-enters-into-alliance-with-pwf/article8388756.ece
  30. http://www.dinamalar.com/news_detail.asp?id=1485129
  31. "தேமுதிக - மநகூட்டணியில் இணைந்த வாசன்... தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 9 ஏப்ரல் 2016.
  32. "தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு". மக்கள் முரசு. பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  33. "கொமதேக-72-தொகுதிகளில்-தனித்து போட்டி". தினமணி.
  34. "அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 4 ஏப்ரல் 2016.
  35. "அதிமுகவின் 227 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டி". தமிழ் இந்து. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2016.
  36. "அதிமுக முழுமையான வேட்பாளர்கள் பட்டியல்". மக்கள் முரசு. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2016.
  37. "மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்.. தமிமுன் அன்சாரி, ஹாரூன் ரசீத் போட்டி !". தட்சு தமிழ். பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.
  38. 38.0 38.1 "கூட்டணி கட்சிக்கு தொகுதியை மாற்றிய ஜெ: ஒட்டன்சத்திரத்தில் அதிமுக- ம.நே.ஜ. கட்சிக்கு வேலூர்!!". தட்சு தமிழ். பார்த்த நாள் 21 ஏப்ரல் 2016.
  39. "DMK to contest in 176 seats". தி இந்து (ஆங்கிலம்) (9 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 9 ஏப்ரல் 2016.
  40. "திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது: திருவாரூரில் கருணாநிதி, கொளத்தூரில் ஸ்டாலின் போட்டி". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  41. "இன்று மாலை (13-04-2016) தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு". மக்கள் முரசு. பார்த்த நாள் 12 ஏப்ரல் 2016.
  42. "Congress gets 41 seats; Azad confident of win for DMK alliance". தி இந்து (ஆங்கிலம்) (4 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 4 ஏப்ரல் 2016.
  43. "வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை..இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொகுதிகள்". தட்சு தமிழ். பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.
  44. "மனித நேய மக்கள் கட்சிக்கு உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் தொகுதிகள்!". தட்சு தமிழ். பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.
  45. "திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள்; கருணாநிதி- கிருஷ்ணசாமி சந்திப்பில் உடன்பாடு!". தட்சு தமிழ். பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
  46. "புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிகள் ஒதுக்கீடு". தட்சு தமிழ். பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.
  47. "திமுக அணியில் சிவகாமிக்கு பெரம்பலூர்; என்.ஆர். தனபாலனுக்கு பெரம்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு". தட்சு தமிழ். பார்த்த நாள் 9 ஏப்ரல் 2016.
  48. "திமுக அணியில் சிவகாமிக்கு பெரம்பலூர்; என்.ஆர். தனபாலனுக்கு பெரம்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு". தட்சு தமிழ். பார்த்த நாள் 9 ஏப்ரல் 2016.
  49. "திமுக கூட்டணியில் பொன். குமாருக்கு பண்ருட்டி ஒதுக்கீடு". ஒன் இண்டியா. பார்த்த நாள் 12 ஏப்ரல் 2016.
  50. "தேமுதிக-104, மதிமுக- 29; தமாகா-26; இடதுசாரிகள், வி.சி- தலா 25 தொகுதிகள்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு". தட்சு தமிழ். பார்த்த நாள் 9 ஏப்ரல் 2016.
  51. http://www.dailythanthi.com/News/State/2016/02/14010335/NTK-candidates-competing-for-234-seats.vpf
  52. "பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்". மக்கள் முரசு. பார்த்த நாள் 16 ஜூன் 2015.
  53. http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-234-candidates-list-246825.html
  54. "நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  55. "பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவையில் வானதி, தி.நகரில் ஹெச்.ராஜா போட்டி". தட்சு தமிழ். பார்த்த நாள் 25 மார்ச் 2016.
  56. "பாரதிய ஜனதா கட்சி 1வது வேட்பாளர் பட்டியல் 2016". மக்கள் முரசு. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  57. "விருகம்பாக்கத்தில் தமிழிசை போட்டி":பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு". தினமணி (11 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 11 ஏப்ரல் 2016.
  58. "2016 தேர்தல் பாஜக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு". மக்கள் முரசு. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  59. "பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே.,வுக்கு 45 தொகுதிகள்.. தேவநாதன் கட்சிக்கு 24 தொகுதிகள்". தட்சு தமிழ். பார்த்த நாள் 11 ஏப்ரல் 2016.
  60. "இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக". மக்கள் முரசு. பார்த்த நாள் 12 ஏப்ரல் 2016.
  61. "57 பேர் கொண்ட 3-வது பட்டியல் வெளியீடு: இதுவரை 141 வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக!". தட்சு தமிழ். பார்த்த நாள் 14 ஏப்ரல் 2016.
  62. "2016 பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு". மக்கள் முரசு. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  63. "பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  64. http://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/all-india-anna-dravida-munnetra-kazhagam.html
  65. "அதிமுக வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  66. "ஜெயலலிதா 7வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை மாற்றினார்". மக்கள் முரசு. பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  67. "அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள் 13பேர் மாற்றம் ஜெயலலிதா அறிவிப்பு". மக்கள் முரசு. பார்த்த நாள் 6 ஏப்ரல் 2016.
  68. "5வது முறையாக அதிமுக வேட்பாளர்களை மாற்றிய ஜெ.- பென்னாகரம், வேப்பனஹள்ளி வேட்பாளர்கள் மாறறம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
  69. "6-வது முறையாக அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: திருச்சி மேற்கு- மனோகரன்; திருச்சி கிழக்கு- தமிழரசி". தட்சு தமிழ். பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.
  70. "ஜெ. பெயரை இன்சியலாக போட்ட ராம. ராமநாதன் மாற்றம்: கும்பகோணம் தொகுதி வேட்பாளரானார் ரத்னா". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-04-25.
  71. "DMK, Congress clinch deal on constituencies". தி இந்து (ஆங்கிலம்) (7 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
  72. "காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு... இளங்கோவன் எங்கே போட்டி?". தட்சு தமிழ். பார்த்த நாள் 19 ஏப்ரல் 2016.
  73. "காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மயிலாப்பூரில் கராத்தே தியாகராஜன் போட்டி". தட்சு தமிழ். பார்த்த நாள் 22 ஏப்ரல் 2016.
  74. "காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  75. "பாமகவின் முதற்கட்ட பட்டியலில் 45 வேட்பாளர்கள் அறிவிப்பு". தமிழ் இந்து. பார்த்த நாள் 11 ஏப்ரல் 2016.
  76. "பா ம க வேட்பாளர் பட்டியல் விவரம் 2016". மக்கள் முரசு. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  77. "பாமக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியானது: அன்புமணி, ஜி.கே.மணி தொகுதிகள் சஸ்பென்ஸ்". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  78. "பாமகவின் 2- ம் கட்ட பட்டியலில் 72 வேட்பாளர்கள் அறிவிப்பு". தமிழ் இந்து. பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016..
  79. "பென்னாகரத்தில் களமிறங்கும் அன்புமணி ராமதாஸ்... மேட்டூரில் ஜி.கே.மணி!". தட்சு தமிழ். பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  80. "பாமக முன்றாவது வேட்பாளர் பட்டியல் 2016". மக்கள் முரசு. பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  81. "பாமகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆர்.கே.நகரில் ஜெ.வை எதிர்க்கும் ஆர்கினட்ஸ்". தட்சு தமிழ். பார்த்த நாள் 19 ஏப்ரல் 2016.
  82. "பாமக வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  83. "இது 2-வது முறை: பாமகவில் 4 வேட்பாளர்கள் மாற்றம்". தமிழ் இந்து. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2016.
  84. "சிவகாசி, குமாரபாளையம் தொகுதி பாமக வேட்பாளர்கள் மாற்றம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 23 ஏப்ரல் 2016.
  85. "ஆபரேஷன் மாம்பழம்? அதிமுகவில் இணைந்தார் கோபி தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி!". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-05-14.
  86. "திமுகவில் இணைந்த வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர்.. 3 நாட்களில் 3 பேர் 2 கட்சிகளுக்குத் தாவல்!". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-05-15.
  87. "40 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கட்டமாக வெளியிட்ட விஜயகாந்த்". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  88. "35 பேர் கொண்ட 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  89. "18 வேட்பாளர்களை கொண்ட தேமுதிக 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்- விஜயகாந்த் பெயர் இல்லை!". தட்சு தமிழ். பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  90. "தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016". மக்கள் முரசு. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  91. "உளுந்தூர்பேட்டையில் நிற்கிறார் விஜயகாந்த்!". தட்சு தமிழ். பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  92. "15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விஜயகாந்த்". மக்கள் முரசு. பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  93. "தேமுதிக வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  94. "காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டி". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  95. "ஜெ.க்கு எதிராக ஆர்.கே.நகரில் வி.சி.க.- 25 தொகுதிகள் பட்டியல் வெளியீடு". தட்சு தமிழ். பார்த்த நாள் 14 ஏப்ரல் 2016.
  96. "விடுதலை சிறுத்தைகள் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு... திருமாவளவன் எங்கே போட்டி?". தட்சு தமிழ். பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  97. "ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் களமிறங்கும் முனைவர் வசந்திதேவி ஜெயிப்பாரா?". தட்சு தமிழ். பார்த்த நாள் 20 ஏப்ரல் 2016.
  98. "12 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது வி.சி.- ரவிக்குமார் போட்டியில்லை!". தட்சு தமிழ். பார்த்த நாள் 21 ஏப்ரல் 2016.
  99. "விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  100. "விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 2 பேர் மாற்றம்". தமிழ் இந்து. பார்த்த நாள் 23 ஏப்ரல் 2016.
  101. "சாத்தூர், ஈரோடு மேற்கு உட்பட 29 தொகுதிகளில் மதிமுக போட்டி! இரு தொகுதிகளை விட்டுத்தரவும் சம்மதம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 14 ஏப்ரல் 2016.
  102. "மதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ அவர்கள் வெளியிட்டார்". மக்கள் முரசு. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  103. "கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டி - மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு". தட்சு தமிழ். பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  104. "மதிமுக வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  105. "சட்டசபை தேர்தலில் போட்டியில்லை: வைகோ திடீர் அறிவிப்பு- கோவில்பட்டியில் விநாயகா ரமேஷ் போட்டி!!". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-04-25.
  106. "தேர்தலில் போட்டியிடவில்லை வைகோ அறிக்கை!!". மக்கள் முரசு. பார்த்த நாள் 25 ஏப்ரல் 2016.
  107. "கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் மற்றும் மாதவரம், சைதை, ஸ்ரீரங்கம்... இ.கம்யூவின் 25 தொகுதிகள்". தட்சு தமிழ். பார்த்த நாள் 14 ஏப்ரல் 2016.
  108. "திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து மாசிலாமணி போட்டி- 25 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது இ.கம்யூ.". தட்சு தமிழ். பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  109. "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  110. "விஜயகாந்த் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்கிரவாண்டியில் சிபிஎம் போட்டி- 25 தொகுதி விவரம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 14 ஏப்ரல் 2016.
  111. "25 சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு- மதுரை(மே)- உ.வாசுகி; மதுரவாயல்- பீமராவ்; பெரம்பூர்- சவுந்தரராஜன்". தட்சு தமிழ். பார்த்த நாள் 18 ஏப்ரல் 2016.
  112. "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  113. "மயிலாப்பூர், கிள்ளியூர் உள்பட 26 தொகுதிகளில் தமாகா போட்டி: தொகுதிகள் பட்டியல் விவரம்! Read more at:". தட்சு தமிழ். பார்த்த நாள் 14 ஏப்ரல் 2016.
  114. "தமாகா வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  115. "தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வாசன், ஞானதேசிகன் போட்டியில்லை". தட்சு தமிழ். பார்த்த நாள் 19 ஏப்ரல் 2016.
  116. "தமாகாவிலும் வேட்பாளர் மாற்றம்- கிள்ளியூரில் டாக்டர் குமாரதாஸ் போட்டி". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-04-25.
  117. "புதிய தமிழகம் கட்சியின் 4 வேட்பாளர்கள் அறிவிப்பு- ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டி". தட்சு தமிழ். பார்த்த நாள் 20 ஏப்ரல் 2016.
  118. "புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல் 2016". chennaivision.
  119. "சட்டசபை தேர்தல்: 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக வாழ்வுரிமை கட்சி". தட்சு தமிழ். பார்த்த நாள் 22 ஏப்ரல் 2016.
  120. "25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  121. "2016 தமிழ்நாடு சட்டசபை தேர்தல், வேட்பு மனுதாக்கல் இன்று மாலை முடிவடைந்தது". மக்கள் முரசு. பார்த்த நாள் 29 ஏப்ரல் 2016.
  122. "83 candidates file nominations on Day 1". தி இந்து (ஆங்கிலம்) (23 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 24 ஏப்ரல் 2016.
  123. "ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி வேட்புமனு தாக்கல்: ஒரே நாளில் 777 பேர் மனு தாக்கல்". தி இந்து (தமிழ்) (26 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 26 ஏப்ரல் 2016.
  124. "233 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! - என்ன காரணம்?". விகடன். பார்த்த நாள் 2016-04-28.
  125. "இன்றுடன் முடிகிறது வேட்புமனு தாக்கல்: இதுவரை 4,082 பேர் மனு அளிப்பு". தினமணி (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 29 ஏப்ரல் 2016.
  126. "2016 தமிழ்நாடு சட்டசபை தேர்தல், வேட்பு மனுதாக்கல் இன்று மாலை முடிவடைந்தது". மக்கள் முரசு. பார்த்த நாள் 29 ஏப்ரல் 2016.
  127. "பந்தாடப்பட்ட பாமக வேட்பாளர்கள்...! மலைக்க வைத்த மனு பரிசீலனை". விகடன். பார்த்த நாள் 2016-04-30.
  128. "சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பு!". விகடன் (23 சனவரி 2016). பார்த்த நாள் 23 சனவரி 2016.
  129. "AIADMK has slight edge over DMK: survey". தி இந்து (ஆங்கிலம்) (16 பிப்ரவரி 2016). பார்த்த நாள் 16 பிப்ரவரி 2016.
  130. "Puthiya Thalaimurai survey: 7 charts that explain AIADMK's edge and DMK's surge". The News Minute (16 பிப்ரவரி 2016). பார்த்த நாள் 16 பிப்ரவரி 2016.
  131. "தமிழகத்தில் மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா; டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தகவல்". தினமலர் (1 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 3 ஏப்ரல் 2016.
  132. "Times Now-CVoter survey results out: Clean victory for Jayalalithaa in TN". thenewsminute.com (1 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 3 ஏப்ரல் 2016.
  133. "தமிழகத்தில் மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா; கருத்துக்கணிப்பில் தகவல்". ஸ்பிக் செய்திகள் (4 மே 2016). பார்த்த நாள் 4 மே 2016.
  134. "திமுக-111; அதிமுக - 107 :கருத்துக்கணிப்பில் தகவல்". தினமலர் (2 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2016.
  135. "திமுக அதிக இடங்களை கைப்பற்றும்:நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு". நக்கீரன் (2 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2016.
  136. தினத்தந்தி (5 மே 2016)
  137. தினத்தந்தி (6 மே 2016)
  138. "பிரமிப்பு!". தினமலர் (3 மே 2016). பார்த்த நாள் 5 மே 2016.
  139. "சட்டசபைத் தேர்தல்: மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: நியூஸ் 7 கருத்துக் கணிப்பு". ஒன்இண்டியா தமிழ் (2 மே 2016). பார்த்த நாள் 2 மே 2016.
  140. "தெற்கு மண்டலத்திலும் திமுகவே அதிக தொகுதிகளை வெல்கிறது - நியூஸ் 7 கருத்துக் கணிப்பு". ஒன்இண்டியா தமிழ் (4 மே 2016). பார்த்த நாள் 4 மே 2016.
  141. "கிழக்கு மண்டலத்திலும் மொத்தமாக அள்ளுகிறது திமுக - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு". ஒன்இண்டியா தமிழ் (4 மே 2016). பார்த்த நாள் 5 மே 2016.
  142. "வடக்கு மண்டலத்திலும் திமுகவுக்கு பெரும் வெற்றி - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள்". ஒன்இண்டியா தமிழ் (5 மே 2016). பார்த்த நாள் 6 மே 2016.
  143. "வெள்ளத்தை மறந்த சென்னை மக்கள்.. அதிமுகவுக்கு பேராதரவு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு". ஒன்இண்டியா தமிழ் (7 மே 2016). பார்த்த நாள் 8 மே 2016.
  144. "திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 வெல்லும்: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள்". ஒன்இண்டியா தமிழ் (6 மே 2016). பார்த்த நாள் 8 மே 2016.
  145. "General Election to Legislative Assembly Trends & Results 2016". இந்தியத் தேர்தல் ஆணையம்.

வெளியிணைப்புகள்[தொகு]