இந்து தமிழ் (நாளிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்து தமிழ் (நாளிதழ்)
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)தி இந்து குழுமம்
நிறுவியதுசெப்டம்பர் 16, 2013 (தமிழ்)
மொழிதமிழ்
தலைமையகம்அண்ணா சாலை, சென்னை
இணையத்தளம்https://www.hindutamil.in

இந்து தமிழ் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஆகும். இதன் முதல் பதிப்பு, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழ், த இந்து ஆங்கில நாளிதழின் ஒரு அங்கம் ஆகும்.[1] இந்த இதழின் பெயரான தி இந்து என்பதை 2018 சூலை முதல் நாளில் இருந்து இந்து தமிழ் திசை என்ற தலைப்போடும் அதிகாரபூர்வமாக இந்து தமிழ் என்றும் பெயர் மாற்றப்பட்டது. [2] [3]

தலைப்புகளும் துணைத் தலைப்புகளும்[தொகு]

தமிழகம், இந்தியா, உலகம், வணிகம், விளையாட்டு, சினிமா, சிந்தனைக் களம், பொது, சமூகம் போன்ற தலைப்புகளும், சிறப்புக் கட்டுரைகள், கலைஞர் பக்கம், கல்வி, தொழில்நுட்பம், நலமே நாடி, சுற்றுச்சூழல், ஆன்மீகம் போன்ற துணைத் தலைப்புகளையும் கொண்டு பளபளப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. [4] 16 செப்டம்பர் 2016ல் தன் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது [5]

தேசிய விருது[தொகு]

2014ஆம் ஆண்டு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் கோவாவில் நடந்த கோவா ஃபெஸ்ட் 2014 என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில் என்ற விளம்பர வாசகத்திற்கு தேசிய தங்க விருது வழங்கப்பட்டது.[6]

மேற்கோள்[தொகு]

  1. நனவாகும் நூறாண்டுக் கனவு
  2. தி இந்து - தமிழ் நாளிதழின் இணையதளம்
  3. வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி. (2018 சூலை 3). "வாசகர்களின் எண்ணம் நிறைவேறியது". வாசகர் கடிதம். இந்து தமிழ். 3 சூலை 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  4. http://www.livemint.com/Consumer/dLro0NLJ7ujfKJbTswsGgL/The-Hindu-to-launch-Tamil-newspaper-on-16-Septemberhtml
  5. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/article9114549.ece?homepage=true%7C அன்பு வாசக நெஞ்சங்களே...] தி இந்து தமிழ் 16 செப்டம்பர் 2016
  6. 'தி இந்து தமிழ்' நாளிதழுக்கு சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தேசிய தங்க விருது

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_தமிழ்_(நாளிதழ்)&oldid=2891434" இருந்து மீள்விக்கப்பட்டது