சுற்றுச்சூழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் சிறப்பாகக் குறிக்கின்றது. சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூக, பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் சூழல் என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை சூழ்மை என்றும் குறிப்பிடலாம்.

கலைச்சொற்கள்[1][தொகு]

 • உயிரினப் பன்முகம் - Biodiversity
 • உயிரினத் தொகுதி - Biome
 • சூழ்நிலைமண்டலம் - Ecosystem
 • அழிவின் விளிம்பு - Hotspot
 • மரபினப் பன்முகம் - genetic diversity
 • நேர்ச்சிப் புகைசுவாசம் - Passive smoking
 • உயிரியத் தேக்கம் - Bio-accumulation
 • உயிரியப் பெருக்கம் - Biomagnification

மேற்கோள்கள்[தொகு]

 1. சூழல் படும் பாடு. பொன்ராணி பதிப்பகம். டிசம்பர் 1999. பக். 272. ISBN 81-86618-12-0. 


  சுற்றுச்சூல் சீர்கேடு உலக உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தாறும் மாசடைந்து வருகின்றது. இம்மாசுபாடுகளால் உலக உயிர்களின் வாழ்நாள் சுருங்கிக் கொண்டேயிருக்கிறது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை யாருக்கும் கிடைக்கவில்லை. சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் மனித நடவடிக்கைகளே பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே, மாசுபாட்டை நீக்கி நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்க சுற்றுச்சூழலை சிறந்த முறையில் பாதுகாத்தல் அவசியம். 

மக்கள் தொகையும் சுற்றுச் சூழலும்

  முப்பது கோடி முகமுயாள் என்றார் பாரதி. பாரதியின் காலத்தில் முப்பது கோடி முகமுடையவளாக இருந்த பாரத அன்னை தற்போது நூறு கோடிக்கு மேற்பட்ட முகமுடையவளாக இருக்கிறாள். இதனால் நிலையாக உள்ள நாட்டின் நிலையாக உள்ள பரப்பளவில் மக்கள் வசிக்கும் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதற்காக காடுகளும் விளைச்சல் நிலங்களும் அழிக்கப்பட்டு வீடுகளும் கட்டடங்களும் எழுப்படுகின்றன. அதிகமான நகர்புறங்கள் தோன்றுகின்றன. இவையெல்லாம் சுற்றுச்சூழலை மிக அதிக அளவில் மாசுபடுத்துகின்றன. மனித இனம் கல்வியறிவு பெற்று இவற்றின் ஆபத்தை அறிந்திருந்த போதிலும் மாற்றக்கூடிய சமுதாய மாற்றங்களில் இதுவும் ஒன்று என்ற எண்ணத்தில் இதைப் பெரிதுபடுத்துவதில்லை. இதனால் மனித இனத்திற்கு பெரும் அபாயம் காத்திருக்கின்றது. 

மாணவர்களின் பங்கு

   சுற்றுப்புறச் சூழல் மனிதர்களின் நடவடிக்கைகளாலேயே முற்றிலும் சீர்கெட்டுக் காணப்படுகின்றன. இதனால் மாணவர்கள் இச்சீர்கேடுகளை நீக்க நடவடிக்களில் ஈடுபட வேண்டும். முதலில் தாங்கள் குப்பைகளை உரிய குப்பைத் தொட்டியில் போட பழகிக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் எச்சில் உமிழ்தல், இரைச்சல் மிகு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த ஆலோசனைகள் கூற வேண்டும். 
  மொத்தத்தில் மனிதர்களின் நடவடிக்கைகளால் பிற்காலத்தில் அவர்களது சந்ததியினருக்கும் சமுதாயத்திற்கும் வரப்போகும் பின்விளைவுகளைப் பற்றி அபாயத்தை அறிவுப்பூர்வமாக விளக்க வேண்டும். மாணவர்கள் அளிக்கும் விளக்கங்கள் அறிவுபூர்வமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள அறிவியல் சாதனப் பொருள்களைக் கூட சுற்றுப்புறம் சீர்கேடு அடையாத வகையில் பயன்படுத்த முன்வருவார்கள். 

முடிவுரை

  சுத்தம் சுகம் தரும். அதோடு அதிக சத்தம் சுமை தரும் என்பதனையும் மனிதர்கள் உணர்ந்து நம் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் அமைதியாகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். 

[1]

 1. சுராவின் பொதுக்கட்டுரைகள் - சுரா பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுச்சூழல்&oldid=2608900" இருந்து மீள்விக்கப்பட்டது