சூழலியம்
Jump to navigation
Jump to search
சுற்றுச்சூழலை (Environmentalism) பாதுகாப்பதை குறிக்கோளாக கொண்டு முன்னெடுக்கப்படும் சமூக, அரசியல், பொருளாதார உலகாளவிய தத்துவமும் இயக்கமும் சூழலியம் ஆகும். இது ஒரு தனி இயக்கம் இல்லை. மாறாக பல தரப்பட்ட தத்துவ நடைமுறை வேறுபாடுகளுடன் இயங்கும் பல்வேறு இயக்கங்களை குறிக்க இந்த சொல் பயன்படுகிறது.
சூழலியம் கருத்தியல் நோக்கில் பேண்தகா பொருளாதார முன்னேற்றத்தை, பொருள்மையவாத ஆடம்பர நுகர்வுப் பண்பாட்டை விமர்சிக்கின்றது. மக்கள் தொகை அதிகரிப்பை சூழலுக்கு கேடு விளைவிக்கு ஒரு நிகழ்வாகப் பாக்கிறது. தற்கால மனிதர் இயற்கையோடு இயைந்து செயற்படாமல், அதை பாழடைய செய்வதாக விமர்சிக்கின்றது. எதிர்கால சந்ததிகளுக்கு பேணி கொடுக்க வேண்டிய இயற்கை வளங்களைப் இப்போதே பயன்படுத்தி, அல்லது அழிப்பதாக சூழலியம் விமர்சிக்கிறது.