சந்ததி
Appearance
உயிரியலில் சந்ததி எனப்படுவது, இனப்பெருக்கத்தின் ஊடாக பெற்றோரிலிருந்து உருவாகும் ஒரு புதிய உயிரினம் ஆகும். ஒரே பெற்றோரிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்கள் ஒரே நேரத்தில் தோன்றுவதும் உண்டு. ஒரு பெற்றோர் உயிரணு விலிருந்து பெறப்படும் மகள் உயிரணுக்களும் சந்ததி என அழைக்கப்படும். மரபியல் கூற்றுக்களின்படி, பெற்றோரிலிருந்து பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலின்போது ஏற்படும் வேறுபாடுகள் அல்லது மாற்றங்கள் சந்ததிகளில் புதிய இனங்கள் (species) உருவாகவும் வழி வகுக்கின்றன.
ஒரே நேரத்தில் கூட்டமாக சந்ததி உருவாகும்போது அது 'அடை' (brood) என அழைக்கப்படும். மனிதரில் பெறப்படும் சந்ததி குழந்தை என அழைக்கப்படும். பெறப்படும் மனித சந்ததி ஆண் ஆனால் மகன் எனவும், பெண் ஆனால் மகள் எனவும் அழைக்கப்படுகின்றன.