பேச்சு:சூழலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்புகள்[தொகு]

  • சூழலியம் பொருளாதார வளர்ச்சியை எதிர்க்கிறது.
  • சூழலியம் பயன் தர வல்ல நுட்ப ஆய்வுகளை தடுக்கிறது. எ.க. செயற்கை மரபணு பயிர்கள்
  • சூழலியம் வளங்கள் என்ன என்பதை இறுக்கமாக வரையறை செய்கிறது.
  • சூழலியம் சொத்துரிமையை மீறி, அரசிடம் காடுகளை, பூங்காக்களை, கடல்வளங்களை ஒப்படைக்கிறது. குறிப்பாக காலம் காலமாக இந்த வளங்களை பயன்படுத்தியவர்களின் உரிமையை கருத்தில் கொள்வதில்லை.
  • சூழலியம் உலகளாவிய பலம் பொருந்திய பெரும் சூழலியல் அமைப்புகளால் முன்னெடுக்கப்படுகிறது.

பிற உடனடிப் பிரச்சினைகளைக் கவனிக்காமல் வளங்களை வீணடிக்கிறது[தொகு]

  • பல உடனடிப் பிரச்சினைகள் (நோய், பட்டினி) கிடப்பில் கிடக்க, மிக தெளிவில்லாத நீண்ட நாள் பிரச்சினைகளை முன்னிறுத்தி வளங்களை வீணடிக்கிறது.

மக்கள் தொகை ஒரு பூதப் பிரச்சினையா?[தொகு]

சூழலியம் மக்கள் தொகையை பூமியின் வளங்களைப் சிரமப்படுத்தும் ஒரு கூறாகவே பார்த்து வந்திக்கிறது. மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தால் மக்கள் பட்டிச் சாவி கிடந்து சாவது தவிர்க்க முடியாது என்றும் சில எதிர் கூறினார்கள். எ.கா Paul R. Ehrlich என்ற சூழலியல் ஆய்வாளர் இந்தியாவின் மக்கள் தொகை உயர்வு தொடர்பாஅக பின்வருமாறு கூறினார் "India couldn't possibly feed two hundred million more people by 1980," and "I have yet to meet anyone familiar with the situation who thinks that India will be self-sufficient in food by 1971." மக்கள் தொகை உயர்ந்தது. எனினும் பசுமைப் புரட்சியின் உதவியுடன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டது.

மக்கள் வளங்களை பயன்படுத்பவர்கள் மட்டுமல்ல, அவர்களும் ஒரு வளமே. அதனால் தான் மக்கள் தொகை குறையும் உருசியா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகள் தங்கள் மக்கள் தொகையை உயர்வை ஊக்குவிக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இன்றைய இந்தியாவின் எளிச்சிக்கும் அதன் இளைய சமுதாயமே ஒரு முக்கிய வளமாக பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் மீது பழிபோடல்[தொகு]

மனிதரின் சிறந்த ஆற்றல்களில் ஒன்று தொழில்நுட்பம். தொழில்நுட்பத்தால் மனிதர் நோய்களைக் குணமாக்கி வாழ்நாளை அதிகரித்து இருக்கிறான், மனிதருக்கிடையேயான தொலை தொடர்பை, போக்குவரத்தை விரிபுபடுத்தி பண்பாட்டு அறிவுப் பகிர்தலை ஏற்படுத்தியிருக்கிறான். தொழில்நுட்பம் தொடர் முன்னெற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு செயற்பாடே. ஒரு காலகட்டதில் தீர்வாக தெரியும் ஒரு நுட்பம் பின்னர் அதன் பக்க விளைவுகளை அறியும் பொழுது மேம்படுத்த வேண்டி வரும். அப்படி மேம்படுத்தவும் முடியும். தொழில்நுட்ப சிக்கல்களை அந்த காலகட்டத்தின் தீர்வாக பாக்காமல், ஒட்டுமொத்தமாக தொழிநுட்பமே ஒரு பிரச்சினை என்ற தோற்றப்பாட்டை சூழலியம் உருவாக்குகிறது. இது தவறு. தொழில்நுட்பமே சூழலியல் பிரச்சினைகளை தீர்க ஒரு முக்கிய கருவி.

Precatuinary Principle[தொகு]

சூழலியம் en:Precautionary principle முன்னிறுத்தி, அதை பின்வற்றுவதால் ஏற்படக்கூடிய நஸ்டத்தை கவனத்தில் கொள்ளத் தவறுகிறது. ஒரு தொழில்நுட்பம் சில பாதக விளைவுகளை தந்தாலும், ஒட்டுமொத்தமாக கூடிய நன்மைகளைத் தரக்கூடும். இதைக் கவனிக்காமல் கேடுகளை மட்டும் சுட்டிக்காட்டி, இந்தக் கொள்கை அந்த தொழில்நுட்பத்தை தடுத்தால் அது ஒட்டுமொத்தமாக நன்றன்று.

மனிதன் இயற்கையைப் பயன்படுத்துவது செயற்கையானதா? இயற்கைக்கு புறம்பானதா?[தொகு]

மனிதன் இயற்கையின் ஒரு படைப்பே. எவ்வாறு சிங்கம் பிற விலங்குகளைக் கொண்று உயிர் வாழ்கிறதோ, அவ்வாறே மனிதன் இயற்கையைப் பயன்படுத்தி வாழ்கிறான். மனிதனின் செயற்பாடு மட்டும் எப்பொழுதும் இயற்கையை அழிக்கும் போக்குடையது என்று கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இயற்கையை திருத்தவும் மனிதனால் முடியும்.


புனிதப்படுத்தப்படும் சுற்றுச்சூழல்[தொகு]

மனிதன் இயற்கையின் ஒரு கூறு. இயற்கையை அழித்து அல்லது பாழக்கி தான் நல்வாழ்க்கை அடைய முடியாது. அதேவேளை இயற்கையை புனிதப்படுத்தி அதைப் பயன்படுத்துவதை தடுத்தால் மனிதனின் முன்னேற்றம் தடைப்படும். முன்னைய காலத்தில் இயற்கையை விளங்கிக் கொள்ளாத போதல்லாம் அதற்கு இறை விளக்கம் குடுக்க மனிதர் முற்பட்டான். அதேபோல் இன்றும் தொடர்பது இன்றைய அறிவியல் சூழலில் தேவையற்றது. அதுமட்டுமல்ல சமயத்தை ஒத்து சூழலியமும் பல கூறுகளைக் கொண்டுள்ளது. அதை விளக்கும் பினவரும் கூற்றைப் பாக்க:

There's an initial Eden, a paradise, a state of grace and unity with nature, there's a fall from grace into a state of pollution as a result of eating from the tree of knowledge, and as a result of our actions there is a judgment day coming for us all. We are all energy sinners, doomed to die, unless we seek salvation, which is now called sustainability. Sustainability is salvation in the church of the environment. Just as organic food is its communion, that pesticide-free wafer that the right people with the right beliefs, imbibe.

Michael Crichton [1]


--Natkeeran 20:30, 15 ஜூன் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூழலியம்&oldid=254168" இருந்து மீள்விக்கப்பட்டது