இயற்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1982 ஆம் ஆண்டின் கலுங்குங் எரிமலை வெடிப்பின்போது மின்னர் தாக்கும் காட்சி. ஒரு இயற்கை நிகழ்வு.
ஹோப்டூன் அருவி, ஆஸ்திரேலியா. சுற்றுலாப் பயணிகளைப் போதிய அளவு அனுபதிக்கும் அதே வேளை, இவற்றின் இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.

இயற்கை (nature) என்பது இயல்பாக இருப்பது என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும்.

இதனால், இயல்பாக இருக்கும் உலகம், இயற்பியல் அண்டம் என்பன இயற்கையுள் அடங்குகின்றன. இயற்கை இயற்பியல் உலகின் தோற்றப்பாடுகளையும், உயிர்வாழ் இனங்களையும் குறிக்கிறது. மனிதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், மனித செயற்பாடுகளின் விளைவான பிறவும் இயற்கை என்பதற்குள் அடங்குவதில்லை. இயற்கை பொதுவாக இயல்பு கடந்தவற்றில் இருந்து வேறுபாடானது. இது, அணுவிலும் சிறிய துகள்கள் சார்ந்தனவாகவோ அல்லது நாள்மீன்பேரடைகளைப் போல் மிகப் பெரிய அளவு சார்ந்தனவாகவோ இருக்கலாம்.

இயற்கைக் காட்சிகள்[தொகு]

இயற்கைக் காட்சிகள் மனதுக்கு இதமளிப்பவை. இதனால் நிம்மதி மற்றும் மனச்சாந்திக்காக இயற்கை சூழலை நாடிச்செல்கின்றோம். இன்று கடற்கரைக் காட்சி , சூரிய உதயம், சூரியன் மறைவு, நதிக் கரையோரம், செவ்வானம், நீர்வீழ்ச்சி எனப் பல சூழல்களை இரசிக்கின்றோம்.

நதிக்கரை சூரியன் மறைவுக் காட்சி, இடம் மட்டக்களப்பு, கும்புறுமூலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை&oldid=2242842" இருந்து மீள்விக்கப்பட்டது