சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்வகைப்பட்ட இனங்கள் கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்புகளை வைத்திருக்கும் இள வயதினர்.

சமூகம் என்பது, தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த ஒரு மனிதர் கூட்டத்தைக் குறிக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது, இது பல்வேறுபட்ட மக்களை அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு பொருளியல், சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். சமூகம் என்பது "தமிழர்" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிக்கக்கூடும்[1] .

அரசறிவியலில், சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கப் பயன்படுகிறது. சமூகவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில், சமூகம் என்பது ஓரளவு மூடிய சமூக முறைமையை உருவாக்கும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கும். இதில், பெரும்பாலான ஊடுதொடர்புகள் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்களுடனேயே இடம்பெறுகின்றன. சமூகம் என்பது சில வேலைகளில் பண்பாடு என்பதிலிருந்து முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிளிபர்ட் கீர்ட்ஸ் என்பவர், சமூகம் என்பது சமூகத் தொடர்புகளின் உண்மையான ஒழுங்கமைவு என்றும், பண்பாடு என்பது நம்பிக்கைகளாலும், குறியீட்டு வடிவங்களாலும் ஆனது என்றும் குறிப்பிட்டார்[2][3].

ரிச்சார்ட் ஜெங்கின்ஸ் என்னும் சமூகவியலாளர், சமூகம் என்பது மனிதர் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சினைகளைக் கையாளுகிறது என்கிறார்.

 1. புலன்களால் உணரப்படும் உலகம் மனித அனுபவத்தின் ஒரு சிறு பகுதியே. எனவே உலகைப் புரிந்து கொள்வதற்கு, மனிதத் தொடர்புகளைப் பண்பியல் (abstract) அடிப்படையில் (அதாவது, சமூகம் என்பதன் மூலம்) உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
 2. பல தோற்றப்பாடுகளை தனிப்பட்ட நடத்தைகளாகப் பார்க்க முடியாது. சில நிலைமைகளை விளக்குவதற்கு, "பகுதிகள் எல்லாவற்றின் கூட்டுத்தொகையிலும் பெரிதான ஒன்று" தேவையாக இருக்கிறது.
 3. கூட்டுநிலை, தனிப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரதும் வாழ்க்கைக் காலத்தையும் தாண்டி நிலைக்கக்கூடியது.
 4. மனித நிலைமைகள் எப்பொழுதும் எமது புலன்கள் தரும் சான்றுகளுக்கும் அப்பால் செல்லுகிறது; நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் கூட்டுநிலையோடு பிணைக்கப்பட்டுள்ளது[4].

பொதுவுடமை கருத்தியலில் சமூகம்[தொகு]

ஆதி பொதுவுடமை சமூகம்[தொகு]

உற்பத்தி சாதனங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் சமூகத்தின் பொது சொத்தாக இருந்தது. கல் ஆயுதங்கள் முதல் வில் அம்பு வரை பொதுவிலிருந்தது. ஆந்த ஆதி மனிதர்கள் இயற்கையையும், காட்டு மிருகங்களையும் எதிர்த்து போராடி வாழ்ந்தார்கள். எனவே கூட்டு வாழ்வு, கூட்டு உழைப்பு, உற்பத்தி பலனை பொதுவில் அனுபவிப்பது நடைமுறையாக இருந்தது. சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற சமூக அமைப்பாக அது இருந்தது.

அடிமை சமூகம்[தொகு]

இதில் உற்பத்திச் சாதனங்கள் அடிமை எஜமானர்களுக்கு (ஆண்டை) சொந்தம். அடிமையும், ஆண்டையின் உடமைதான். அடிமைகளை மிருகங்கள் போல வாங்கலாம், விற்கலாம். கல் ஆயுதங்களுக்கு பதில் இரும்பு, செம்பு போன்ற உலோக ஆயுதங்கள் வந்தன. விவசாயம், கைத்தொழில் வளர்ந்தது. ஏராளமான வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டன. அடிமைகளின் எலும்புக் கூடுகளால் உருவான சமூகம் இது. அடிமைகளின் உழைப்பை நிர்பந்தமாய் சுரண்டி ஆண்டைகள் கொழுத்தனர். தனியுடமை, அரசு, குடும்பம் தோன்றின.

நிலப்பிரபுத்துவ சமூகம்[தொகு]

உற்பத்திச் சாதனங்களனைத்தும் இதில் நிலப்பிரபுவுக்கு சொந்தம். ஆனால் உழைப்பாளி நிலப்பிரபுவின் அடிமையல்ல. அவனை முன்பு போல் மிருகம் போல வாங்கி விற்பது, கொலை செய்வது முடியாது. கருவிகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இரும்பை உருக்கி கருவிகள, கலப்பைகள், தறிகள் என்று கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. முன்பு அடிமையாக இருந்தோர் தற்போது சொந்த வேளாண்மை, கைத்தொழில் செய்யலாம். ஆனால் நிலப்பிரபுவுக்காக உழைக்க வேண்டும். சாகுபடி செய்து அறுவடையில் பங்குதர வேண்டும். இந்த முறையில் சுரண்டல் கொடுமை நெடுங்காலம் நீடித்தது.

முதலாளித்துவ சமூகம்[தொகு]

இதில் உறபத்திச் சாதனங்களான தொழிற்சாலைகளும், கருவிகளும் முதலாளிக்கு சொந்தம். உற்பத்தி கருவிகள் உழைப்பாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தொழிலாளி தனது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. கைத்தொழில்கள் சிதைந்து எந்திர உற்பத்தி பெருமளவில் வளர்ச்சியடைந்தது. நிலங்கள் முதலாளித்துவ விவசாய பண்ணைகளாய் உருமாறின. விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றால் பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது.

பொதுவுடைமை சமூகம்[தொகு]

முதலாளித்துவ முரண்பாடுகளாலும், உற்பத்தியின் சமூக தன்மைக்கு உற்பத்திச் சாதனங்கள் தனியுடைமை விரோதமானதாக ஆகிறது. இதனால் புரட்சியின் மூலம் முதலாளித்துவ சமூகம் வீழ்ந்து பொதுவுடைமை சமூகம் பிறக்கிறது. இச்சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், கருவிகளும் சமுதாய உடைமையாகின்றன. உழைப்புக்கேற்ற பங்கீடு கிடைக்கும். உழைக்காதவனுக்கு சோறில்லை. இச்சமூகத்தில் உற்பத்தி சக்திகளுக்கு முற்றிலும் பொருத்தமான உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன.

நிலப்பிரபுத்துவ சமூகம்[தொகு]

நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலத்தின் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் ஒரு வடிவமாகும். இன்றைய விவசாயிகள் போலல்லாமல், நிலப்பிரபுத்துவத்தின் கீழ் சிற்றரசர்களாக இருப்பவர்கள் தங்கள் கடவுளின் தேசத்தில் வேளாண்மை செய்து வருவர். பிரபுக்கள், நில உரிமையாளர்கள் உணவு, பயிர்கள், கைவினை, அஞ்சலி, மற்றும் பிற சேவைகளை விவசாயிகளுக்கு சாதகமாக வழங்குவர். நிலப்பிரபுத்துவ உலகினில் விவசாயிகள் தங்கள் தலைமுறைக்காக கடவுளின் நிலத்தினில் வேளாண்மை செய்து வந்தனர்.

தொழில்துறை சமூகங்கள்[தொகு]

15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு புதிய பொருளாதார முறை, என்று நிலப்பிரபுத்துவ பதிலாக தொடங்கியதே தொழில்துறை சமூகங்கள் . தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு உழைத்து ஊதியங்கள் வாங்குபவை நடைமுறைக்கு வந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இம்முறை பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

 1. Briggs, Asa (2000, 2nd Edition). The Age of Improvement. Longman. பக். 9. ISBN 0-582-36959-2. 
 2. Maurice Godelier, Métamorphoses de la parenté, 2004
 3. "New Left Review - Jack Goody: The Labyrinth of Kinship". பார்த்த நாள் 2007-07-24.
 4. Lenski, G. 1974. Human Societies: An Introduction to Macrosociology.

மேலும் படிக்க[தொகு]

 • Effland, R. 1998. The Cultural Evolution of Civilizations Mesa Community College.
 • Jenkins, R. 2002. Foundations of Sociology. London: Palgrave MacMillan. ISBN 0-333-96050-5.
 • Lenski, G. 1974. Human Societies: An Introduction to Macrosociology. New York: McGraw- Hill, Inc.
 • Raymond Williams, "www.flpmihai.blogspot.com", in: Williams, Key Words: A Vocabulary of Culture and Society. Fontana, 1976.

வெளியிணைப்புகள்[தொகு]

சமூகம் திறந்த ஆவணத் திட்டத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகம்&oldid=2280216" இருந்து மீள்விக்கப்பட்டது