காலநிலை மாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குறித்தவொரு காலப்பகுதியில்(பத்து வருடம் அல்லது அதற்கும் அதிகமாக) காலநிலை அளவீடுகளில் புள்ளிவிபர ரீதியில் கணிசமானதெனக் கொள்ளத்தக்கதென ஏற்படும் மாற்றங்கள் காலநிலை மாற்றம் எனப்படும்.


இந்நாட்களில் வானம் அடிக்கடி பொய்த்துவிடுகிறது. ஆடியிலே காற்றடிக்கும்; ஐப்பசியில் மழைபொழியும் என்று நிட்சயப்படுத்தமுடிவதில்லை. சிலவேளைகளில் மார்கழியில் தான் மழையே ஆரம்பிக்கிறது. இதனால் மழை தேவைப்படும் காலத்தில் பயிர்வாடிக் கிடக்க நேரிடுகிறது. உலகளாவிய ரீதியில் இந்நிலை இப்போதெல்லாம் பெரிதும் பேசப்படுவதாயிருக்கிறது. காலநிலை, எச்சரிக்கை கொள்ளச் செய்யும் வீதத்தில் மாற்றமடைந்து செல்வதை இவை காட்டிநிற்கின்றன.


காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு (IPCC) வெளியிட்ட அண்மைய அறிக்கையொன்றில் கடந்த நூற்றாண்டில் சராசரி உலகவெப்பநிலை 0.76oCஆல் உயர்வடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வெப்பநிலை உயர்வு 2050ஆம் ஆண்டில் 2oC ஆல் உயர்வடைந்திருக்கும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.

வெவ்வேறு கருதுகோள்களின் கீழ் பெறப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலைகள் பத்தாண்டு அள்விடையில் காணல் நீக்கிய வளைகோடுகளாக தரப்பட்டுள்ளன. காணல் நிக்கா நிலையில் 2004 ஆம் ஆண்டுக்கான மதிப்பிடு ஒப்பீட்டிற்காகக் குறிக்கப்பட்டுள்ளது.

புவி சூடாதலின் போது புவிக்கு அண்மித்த வெப்பநிலையின் உலகலாவிய சராசரியின் மாற்றம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை 0.74 °C ±0.18 °C ஆல் கூடியுள்ளது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை கூடும் வீதத்தோடு ஒப்பிடுகையில் அதன் கடைசி 50 ஆண்டுகளில் வெப்பநிலை கூடும் வீதம் இரட்டிப்பாகியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C ±0.03 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.07 °C ± 0.02 °C என்பதை ஒப்பிடுக). நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு புவி சூடாதலுக்கு 1900 ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு 0.002 °C என்ற வீத்ததால் புவி வெப்பநிலையைக் கூட்டியுள்ளது.[1]செய்மதி அளவீடுகளின் படி 1979 ஆம் ஆண்டு முதல் அடிவளிமண்டலத்தின் கீழ் பகுதியில் வெப்பநிலை பத்து ஆண்டுகளுக்கு 0.12 தொடக்கம் 0.22 °C வரை கூடியுள்ளது (0.22 - 0.4 °F). 1850 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒன்று அல்லது இரண்டு ஆயிரம் ஆண்டுகளின் காலத்தில், இடைமத்திய கால வெப்பமான காலகட்டம் அல்லது சிறு பனி யுகம் ஆகிய உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் தவிர்ந்தவிடத்து ஒப்பீட்டளவில் சராசரி வெப்பநிலை கூடுதல் மாற்றம் இருந்திருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.இத்தகைய வெப்பநிலை உயர்வு கடல் மட்ட உயர்வினை ஏற்படுத்துவதுடன் துருவப்பனிப்பாறைகளையும் உருகச் செய்யும். இதனால் ஏற்படும் மழைவீழ்ச்சி முறையிலுள்ள மிகைமாற்றம் கிராமிய விவசாய உற்பத்தியை பெரிதும் பாதிப்பதாயிருக்கும்.


காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய காரணாகாரியமாயினும் அயனமண்டலத்தை அண்டிய கிராமங்களே இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதன் பாதிக்கப்படும் தன்மை உள்ளுர் இடவமைவு மற்றும் நிலவமைப்பியலிலே தங்கியுள்ளது. இது தவிர வரட்சி மற்றும் சடுதியான மாற்றங்களை எதிர் கொள்ளும் திறன், காலநிலை மாற்றம் பற்றித் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் தன்மை என்பனவும் பங்களிப்புச் செய்யும். மற்றுமிரு மிக முக்கியமான காரணிகள் ஆகும்;. அயனமண்டல் மற்றும் உபஅயனமண்டலத்திற்குரிய விவசாயக் காலநிலை சூழல் தொகுதிகள் கடந்த தசாப்தங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது.


இது பிரதானமாக விவசாயிகளின் நிலப்பயன்படுத்துகை முறைகள், செறிந்த விவசாய செய்கைமுறைகள் மற்றும் காடழிப்பு என்பவற்றால் விளைந்தவையாகும். இப்போதுள்ள காலநிலை மாற்றம் நிலைமையை மேலும் மோசமாக்குவதுடன் ஒட்டுமொத்த நிலச்சீரழிவை விளைவிக்கும். எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணைமுறைக்கு தம்மை மாற்றுவதே இதற்குள்ள சாத்தியமான மீட்சியாகும்.


காலநிலை மாற்றம் இயற்கையின் அகச்செயற்பாடுகளால் புறவழுத்தங்களால் மற்றும் சுற்றாடல் மற்றும் மண்ணின் பயன்பாட்டின் மீது தாக்கம் செய்யும் மனித அபிவிருத்திச் செயற்பாடுகளால் நிகழலாம்.

மேலும் வாசிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Trenberth, Kevin E.; et al. (2007). "Chapter 3: Observations: Surface and Atmospheric Climate Change" (PDF). IPCC Fourth Assessment Report. Cambridge, United Kingdom and New York, NY, USA: Cambridge University Press. p. 244. http://www.ipcc.ch/pdf/assessment-report/ar4/wg1/ar4-wg1-chapter3.pdf. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=காலநிலை_மாற்றம்&oldid=1354962" இருந்து மீள்விக்கப்பட்டது