எரிமலை வெடிப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எரிமலை வெடிப்பு அல்லது எரிமலைச்சீற்றம் என்பது பேரழிவை ஏற்படுத்தும் ஒரு வகை இயற்கைச் செயல்பாடாகும்.இந்த நிகழ்வில் பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும்,அதீத வெப்பமுடைய நீரும்,கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும்,அதீத விசையுடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படுகிறது.இவற்றுடன் தீப்பிழம்பும்,கரியமில வாயுவும்,கரும்புகையும் சேர்ந்து பேரழிவை ஏற்படுத்துகிறது.
இயக்கம்[தொகு]
பேரழிவை ஏற்படுத்தும் எரிமலைகள் சாதாரண மலைகளைப் போன்றே இருக்கும்.இந்த நிலையினை தூங்கு நிலை என்று அழைப்பர்.இந்த நிலையில் இம்மலைகள் பேரழிவை ஏற்படுத்தாது. பல நூறு ஆண்டுகள் ஏன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கூட இந்த மலைகள் தூங்கு நிலையில் இருக்க வல்லவை.பின்பு பூமியின் அடிப்பாக செயல்பாட்டினால் பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி பூமியின் மேற்பறப்பில் விரிசல் ஏற்பட்டு எரிமலை இயங்கு நிலை அடைகிறது. இயங்கு நிலையில் இம்மலைகள் கட்டுக்கடங்காத பேரழிவை ஏற்படுத்துகிறது. இயங்கு நிலையில் பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும்,அதீத வெப்பமுடைய நீரும்,கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும்,அதீத விசையுடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படுகிறது.இவற்றுடன் தீப்பிழம்பும்,கரியமில வாயுவும்,கரும்புகையும் சேர்ந்து பேரழிவை ஏற்படுத்துகிறது.