உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்தறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கல்வியறிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2015ல் வெவ்வேறு நாடுகளின் எழுத்தறிவு சதவீதத்தை குறிக்கும் உலக வரைபடம்  (2015 CIA த வேர்ல்டு ஃபக்ட்புக்) சாம்பல் நிறம் = தரவு இல்லை
1970லிருந்து 2015க்குள் உலக எழுத்தறிவற்றோர் சதவீதம் பாதியாகக் குறைந்துள்ளது .
எழுத்தறிவைப் பெறுவதில் பங்கேற்கும் மூளையின் பகுதிகள்

எழுத்தறிவு என்பது வாசித்தல்எழுதுதல்எண்கணிதப் பயன்பாடு[1] ஆகியவற்றின்தொகுப்பாகும். தற்காலத்தில் எழுத்தறிவு என்பது மொழிப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், கணினிகள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றைஉட்படுத்தியதாகக் கருதப்படுகிறது.[2] பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உள்ள நாடுகள் எழுத்தறிவுக் கருத்துகளை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு ஆகும்.

வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு தங்கியிருப்பவர் அந்நாட்டு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்கவில்லையெனில் அவர் அந்நாட்டில் அந்நாட்டு மக்களால் எழுத்தறிவற்றவராகக் கருதப்படுவார்.

எழுத்தறிவு வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று வாசித்தல் ஆகும். இதன் மற்ற வளர்ச்சித் திறன் கூறுகள்:

  • பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ளல்
  • எழுதப்பட்டவற்றை குறி நீக்கி புரிந்து கொள்ளல்
  • உரைகளைப் படித்து உள்ளார்ந்து புரிந்துகொண்டு உச்ச அளவு பயன்பாடு பெறுதல்
  • வாசித்தலில் உள்ள வளர்ச்சிகள் பின்வரும் பலக்கிய மொழியியல் கூறுகளை உள்ளடக்கியதாகும்:
  • பேச்சில் உள்ள ஒலிக்குறிகள் குறித்த விழிப்புணர்வு (ஒலியனியல்)
  • எழுத்துக்கோர்வை வடிவவிதம் (orthography)
  • வார்த்தைகளுக்கான பொருளறிதல் (சொற்பொருளியல்)
  • இலக்கணம் (சொற்றொடரியல்)
  • வார்த்தை உருவாதலில் வடிவவிதம் (உருபனியல்)
  • இவை அனைத்தும் தடையற்ற ஆற்றொழுக்கு வாசித்தலுக்கும் புரிதலுக்கும் தேவையான அடிப்படை கூறுகளாகும்.

இத்திறன்களைப் பெற்றவர், அச்சிடப்பட்ட கருத்துகளைப் புரிந்து,  நுண்ணாய்வு செய்து பயன் பெறுதல், தொகுத்தல், உய்த்துணர்தல், கோர்வையாகவும், துல்லியமாகவும் எழுதுதல், அச்சிடப்பட்ட கருத்துகளிலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி உட்காட்சி அமைத்தல், முடிவெடுத்தல்,  படைப்புத்திற ஆதார சிந்தனைகள் மேற்கொள்ளல் போன்ற பன்முகத் திறன்களையும் பெற்றவராவர். இவர்களே முழு எழுத்தறிவு பெற்றவராவர்.[3]

இவற்றைப் பெற இயலாதோர் எழுத்தறிவற்றோர் அல்லது எழுத்து அறியாதோர் எனப்படுவர்.[சான்று தேவை]

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவை பின்வருமாறு வரையறுத்துள்ளது: எழுத்தறிவு என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன் பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது தொடர் கற்றல் நிகழ்வு ஆகும். ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கருவியாகும். எழுத்தறிவானது தனியர் தன் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டு, அண்மைச்சமூக நிகழ்வுகளில் பங்கேற்று விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும்[4]

வரலாறு

[தொகு]
Illiteracy rate in France in the 18th and 19th centuries

வரலாற்றுக்கு முற்கால எழுத்தறிவு

[தொகு]

எழுத்தறிவின் மூலம்

[தொகு]
கிமு 2600ல் கட்டப்பட்ட ஆண் அடிமை விற்பனைக்கான சுமேரியாவின் ஒப்புகை

கிமு 8000ன் முற்பகுதியில், கணக்கிடும் கருவிகள் வந்த பின்பு, எண்ணியல் வேகமாக வளர்ந்தது. அப்பொழுது எழுத்தறிவு பற்றிய சிந்தனை தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது மெசொப்பொத்தேமியாஎகிப்து,  இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிசீனா போன்ற பகுதிகளில் தனித்தனியாக எழுத்துகள் தோன்றி வளர்ந்தன.[5] கிமு 3500-3000 ஆண்டுகளில்   சுமேரியாவில் தோன்றியது. அந்த நூற்றாண்டில் மிகையளவு உற்பத்தி, அதையொட்டிய புதிய வாணிபம், புதிய மேலாண்மைகள், புதிய அதிகப்படியான ஆரம்பகால எழுத்து வடிவ தகவல் தொடர்பு மெசபடோமியாவின் தென் பகுதியில் உள்ள தகவல்கள் போன்றவை மக்களை செயல்முறை எழுத்தறிவை நோக்கி நகர்த்தின.[6]  மெசபடோமியாவில், வேளாண்மை உற்பத்தி, வாணிபம் ஆகியவற்றை மேலாண்மை செய்ய முத்திரை இடப்பட்ட வில்லைகள் பயன்படுத்தப்பட்டன. பதிவு முறை தொடங்கப்பட்ட இக்காலத்தில் எழுதும் முறை  உருவானது.[7]  ஆப்பெழுத்து தோன்றுவதற்கான முன் அறிகுறியாக களிமண் மீது எழுதப்பட்ட அடையாள வில்லைமுறை அமைந்துள்ளது. படவெழுத்துகள் எண்ணுருக்கள் பொருள்களின் வடிவங்கள் கூட்டல் முறை போன்றவை ஆப்பெழுத்து முறையில் பயன்படுத்தப்பட்டன.

கிமு 3300-3100ல் எகிப்து நாட்டின் ஹீரோகிளிப்ஸ் உருவானது. இது படிமவியல் அடிப்படையில் உயர்ந்தோர் குழுவின் அதிகாரம் வளப்பம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. இது ஒலியியல் குறிமான முறை அமைக்க அடிப்படையாக அமைந்தது. கிமு. 900-400ல்  இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளில் ஓல்மெக் மற்றும் ஸாபோடெக் நாகரிகத்தின் போது எழுதும் முறை பழகத்திற்கு வந்தது.  இது கிளிப்டிக் முறை எனப்படுகிறது. உயர்மட்ட படிமவியல் முறையில் நாட்காட்டி குறிப்புகள், எழுத்துகள், எண்கள் போன்றவை புள்ளிகளாலும் கோடுகளாலும் குறிக்கப்பட்டன. சீனாவில் கிமு 1200ல் சாங் அரசமரபினர் காலத்தில் எழுத்து வடிவம் தோன்றியது. உயர்ந்தோர் குழுவின் செயல்பாடுகள், வேட்டையாடப்பட்ட விலங்குகள், பெற்ற விழுமங்கள், செய்த தியாகங்கள் போன்றவை முறைப்படுத்தப்பட்ட குறியீடுகளால் எலும்புகளில் பொறிக்கப்பட்டன. பண்டைய சீனர்கள் ஆரகிள்-எலும்பு எழுத்துக்களை உருவாக்கினர். இவை தற்கால எண்களையும் எழுத்துகளையும் குறிக்கும் பட எழுத்துகளாகும்.

எழுத்தறிவானது மேலாண்மை செயல்களில் ஈடுபடுவோர், அதிகார அமைப்பிலுள்ளோர், மேல்தட்டு மக்கள் என 1% க்கும் குறைவானவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது என்பதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

எழுத்துக்களின் தோற்றம்

[தொகு]

சமூக மானிடவியலர் ஜாக் கூடி (Jack Goody) என்பவர் எழுத்துக்களின் தோற்றம் குறித்த இரண்டு கருத்துக்களை முன் வைக்கிறார். வரலாற்று ஆசிரியர் இக்னேஸ் கெல்ப் (Ignace Gelb) என்னும் அறிஞரின் கூற்றுப்படி கிமு 750ல் பண்டைய கிரேக்கர்கள் முதல் எழுத்துருவை உண்டாக்கினர்.  இவர்கள் உயிரெழுத்துக்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடத்தக்க குறியீடுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கிறார்.  ஆனால் (Goody) கூற்றுப்படி மேற்கு ஆசியாவிலிருந்து பெறப்பட்ட மெய்யெழுத்துக்களுக்கு உரிய வடிவங்கள் கிரேக்க உயிரெழுத்துக்களுடன் சேர்க்கப்பட்டன.  ஆனால் கிரேக்க கலாச்சாரத்தைத் தொடர்ந்து வந்த மேற்கு ஐரோப்பிய வரலாற்றில் அடிப்படைவாதிகள் கிரேக்கர்கள்தான் முதலில் எழுத்துருக்களை உண்டாக்கினர் என்ற கருத்தை திணித்தனர்.[8] இவ்வாறு பல அறிஞர்கள் மற்றும் முன்னாள் எழுத்துருவாக்கவியலார் கூற்றுப்படி கிமு 1500ல் வடக்கு கானான் (தற்போதைய சிரியா) பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருந்தது. 

1905ல் ஆங்கில தொல்லியலார் ஃப்லிண்டர்ஸ் பெட்ரி (Flinders Petrie) என்பார் செராபித் எல் காதெம் (Serabit el-Khadem) எனும் இடத்திலுள்ள பச்சைக் கலந்த நீல நிற சுரங்கங்களில் கானான் எழுத்து முறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இக்கொள்கைகளுக்கு ஆதாரமாக அமைந்தது. பத்து ஆண்டுகளுக்குப்பின் ஆலன் கார்டினர் (Alan Gardiner) எனும் ஆங்கில எகிப்தியியலார் கானானில் கிடைத்த கல்வெட்டு எழுத்துக்கள் அங்குள்ள அஷேரா (Asherah) எனும் தேவதையைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.  

1948ல், வில்லியம் எஃப் ஆல்பிரைட் (William F. Albright) என்பவர், கூடியின் கருத்துக்களை ஒட்டிய கல்வெட்டு ஆதாரங்களை அடையாளங் கண்டுணர்ந்து வெளிப்படுத்தினார்.  1929ல் உகாண்ட்  பகுதியில் பிரான்சு நாட்டு தொல்லியலார்  கிளாடு  எஃப் ஏ ஸ்சேஃபர் (Claude F. A. Schaeffer) என்பார் கல்வெட்டு எழுத்துக்கள் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்தார்.  அவற்றில் சில எழுத்துக்கள் புராண கால கருத்துக்களைக் கூறுவனவாக உள்ளன. இவை முற்கால கானான் நாட்டின் வட்டாரப் பேச்சுமொழியினை வரிவடிவம் செய்திருப்பதைக் காட்டுகிறது. இந்த கல்வெட்டுகளில் 32 மெய்யெழுத்துக்கள் ஆப்பெழுத்துகளக உள்ளன

1953ஆம் ஆண்டு கானான் நாட்டின் ஒரு பகுதியில் முன்று தலை அம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒரே மாதிரியான கிமு 12ஆம் நூற்றாண்டின் கானான் முறை கல்வெட்டு எழுத்துக்கள் பதியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.[9] ஃப்ராங்க் மூர் கிராஸ் (Frank Moore Cross) என்பாரின் கூற்றுப்படி இந்த கல்வெட்டு எழுத்துகள் தற்போதைய எழுத்துமுறைகளை ஒத்துள்ளன. இந்த் கல்வெட்டு எழுதுக்கள் பட எழுத்துக்களிலிருந்து நேர்க்கோட்டு எழுத்து முறைக்கு மாற்றம் அடையும்போது தோன்றிய எழுத்துக்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. மேலும் இந்த கல்வெட்டுகள் இதற்கு முந்தைய கால எழுத்துக்களுக்கும் தற்போதுள்ள எழுத்துக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பை நன்கு விளக்குவதாக உள்ளது என்று கூறுகிறார். கானானைட் மொழியில் மெய்யெழுத்துக்களுக்கான முறைமை பல பிற்கால மொழிகளிலும் இந்த முறைமையைப் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. வெண்கல காலத்தின் பிற்பகுதியில் மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய பல்வேறு எழுத்துருக்கள் போனீசியன், ஹீப்ரூ, அராமிக் எனும் மூன்று மொழிகளாக பிரித்து விரிவாக்கப்பட்டன.

கூடியின் கருத்துப்படி ஆப்பெழுத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்குப்பின் கிரேக்க எழுத்துக்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கக்கூடும். வரலாற்றுப் பூர்வமாக கிரேக்கர்கள் தங்கள் மொழியை போனீஷியன்கள் சீரமைத்ததை உறுதிப்படுத்துகின்றனர். எனினும் பல எழுத்துருவாக்கவியலார் கிமு 1100 ஆண்டுகளுக்குமுன் இருந்த கானானைட் மொழி எழுத்துக்களைக்கொண்டு பண்டைய கிரேக்கர்கள் இசைவான எழுத்தறிவு பெற்றிருந்ததாக நம்புகின்றனர். ஆனால், முற்கால கிரேக்க எழுத்துக்கள் கிமு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கானானைட் மொழி கல்வெட்டுப் பதிவுகள், கிரேக்கர்கள் கிமு 1100லிருந்தே இம்மொழியைக் கையகப்படுத்தி பயன்படுத்துவது உறுதியாகிறது. மேலும் உயிரெழுத்துக்களைக் குறிக்கும் ஐந்து எழுத்துகளைப் பின்னாளில் சேர்த்ததும் உறுதியாகின்றது[10]

போனீசியன் எழுத்துமுறை மட்டுமே முதன் முதல் தோன்றிய "நேர்கோட்டு எழுத்துமுறை" என்று கருதப்படுகிறது. வட கானான் பகுதியிலுள்ள துறைமுக நகரங்களில் இது விரைவாகப் பரவுயது.

எபிரேய, அராமிக் போன்ற மொழிகள் சம காலகட்டத்தில் தோன்றின. ஒரே மாதிரியான அமைப்புகளைப் பெற்றிருந்தன. எனவே இவை ஒத்த மொழித் தொகுதியாக்ச் கருதப்படுகின்றன. இக்காரணங்களின் அடிப்படையில் சில தொல்லியலாளர்கள் போனீசியன் வரிவடிவத்தின் தாக்கம் எபிரேய மற்றும் அராமிக் வரிவடிவத்தில் உள்ளது என்று நம்புகின்றனர்[11].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literate."
  2. UNESCO. "Education for All: A Global Monitoring Report" (PDF). UNESCO. UNESCO. p. 150.
  3. Margie Gillis, Ed.D., President, Literacy How, Inc., and Research Affiliate, Haskins Laboratories at Yale University; Sally Grimes, Ed.M., Executive Director, Literate Nation and Founder, Grimes Reading Institute; Cinthia Haan, Author and Chair, The Haan Foundation for Children and President, Power4Kids Reading Initiative; Peggy McCardle, Ph.D., M.P.H., Chief, Child Development and Behavior Branch, National Institute of Child Health and Human Development; Louisa Moats, Ed.D., President, Moats Associates Consulting, Inc.; Anthony Pedriana, Author and retired urban schoolteacher and principal; Susan Smartt, Ph.D., Senior Research Associate, National Comprehensive Center for Teacher Quality, Vanderbilt University; Catherine Snow, Ph.D., Author, Researcher and Professor of Education, Harvard Graduate School of Education, Harvard University; Cheryl Ward, M.S.M., C.A.L.P., Co-founder of Wisconsin Reading Coalition and academic language practitioner; Maryanne Wolf, Ed.D., Author and Director, Center for Reading and Language Research, Tufts University.
  4. "The Plurality of Literacy and its implications for Policies and Programs". UNESCO Education Sector Position Paper: 13. 2004. http://unesdoc.unesco.org/images/0013/001362/136246e.pdf. 
  5. Chrisomalis, Stephen (2009), "The Origins and Coevolution of Literacy and Numeracy", in Olsen, D. & Torrance, N. (Eds.
  6. Easton, P. (in press).
  7. Schmandt-Besserat, D (1978). "The earliest precursor of writing". Scientific American 238 (6): 38–47. https://archive.org/details/sim_scientific-american_1978-06_238_6/page/38. 
  8. Goody, Jack (1987).
  9. Cross, Frank Moore, "Newly Found Inscriptions in Old Canaanite and Early Phoenician Scripts", Bulletin of the American Schools of Oriental Research, No. 238 (Spring, 1980) p. 1-20.
  10. Goody, Jack (1987). The Interface Between The Written and the Oral. Cambridge, UK: Cambridge University Press, p. 40-49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-33268-0
  11. McCarter, P. Kyle. "The Early Diffusion of the Alphabet", The Biblical Archaeologist 37, No. 3 (Sep., 1974): 59-61.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தறிவு&oldid=3931418" இலிருந்து மீள்விக்கப்பட்டது