ஆப்பெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பெழுத்தில் சுமேரிய மொழி, கிமு 26ம் நூற்றாண்டு

ஆப்பெழுத்து உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.[1] ஆப்பெழுத்துக்கள் தொடக்கத்தில் பட எழுத்துக்களாகவே ஆரம்பித்தன. காலப் போக்கில் இவை எளிமையாக்கப்பட்டுப் நுண்மமாக்கல் (abstract) தன்மை கொண்டனவாக மாறின.

ஆப்பெழுத்துக்கள் களிமண் தகடுகளில், ஸ்டைலஸ் எனப்படும் மழுங்கிய புற்களால் எழுதப்பட்டன. இவற்றால் உருவான பதிவுகள் ஆப்பு வடிவில் இருந்ததால், இவை ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன.

ஆப்பெழுத்துகள் மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய மொழி அக்காடிய மொழி, எலமைட் மொழி, ஹிட்டைட் மொழி, ஹுரியன் மொழி போன்ற மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டது.

Cuneiform sign SAG.svg

பட எழுத்து முறையிலிருந்து ஆப்பெழுத்துக்கள் உருவான வளர்ச்சிப் படிகளைக் காட்டும் படம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cuneiform WRITING SYSTEM
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பெழுத்து&oldid=3325916" இருந்து மீள்விக்கப்பட்டது