சிரிய பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரிய பாலைவனம் (بادية الشَّام)
Badiyat al-Sham
sand desert
நில அமைப்பியல் வரைபடத்தில் சிரிய பாலைவனம்
நாடு சிரியா
ஈராக்கு
ஜோர்தான்

சிரிய பாலைவனமானது (அரபு மொழி: بادية الشام‎, Bâdiyat aş-Şâm), அமத் எனவும் அழைக்கப்படுகிறது.[1] இது ஸ்டெப்பி புல்வெளிகள் மற்றும் பாலைவனம் ஆகியவை இணைந்த நிலப்பகுதியாகும். இது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு சிரியா, வடகிழக்கு ஜோர்தான், வடக்கு சவூதி அரேபியா மற்றும் மேற்கு ஈராக்கு ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கி 500000 சதுர கிலோமீட்டர்கள் அல்லது 200000 சதுர மைல்கள் அளவிற்குப் பரவியுள்ளது. இதனுடைய தெற்கத்திய எல்லைகள் அரேபியன் பாலைவனத்துடன்  இணைகின்ற விதத்தில் உள்ளது.[2] இந்த நிலப்பகுதியானது திறந்த, வறட்சியான பாலைவனப்பகுதியாகவும், அவ்வப்போது காணப்படுகின்ற வறண்ட ஆற்றுப்படுகைகளைக் கொண்டதாகவும் உள்ளது.[3]

இட அமைவு மற்றும் பெயர்[தொகு]

இந்தப் பாலைவனமானது, மேற்கில் ஒரோன்டெஸ் பள்ளத்தாக்கு மற்றும் அராட் அல்-சாமாவினுடைய எரிமலைப் பாறை களத்தையும் கிழக்கே புறாத்து ஆற்றையும் கொண்டுள்ளது. வடக்கில் இந்தப் பாலைவனம் வளமான புல்வெளிகளையும் தெற்கில் இது அராபியத் தீபகற்பத்தின் பாலைவனங்களோடு இணையும் விதத்திலும் அமைந்துள்ளது.[4]

சில மூலநூல்கள் சிரிய பாலைவனத்தை அமத் பாலைவனம் எனக் குறிப்பிடுகின்றன. வேறு சில மூலங்கள் அமத் என்ற பெயரை தெற்கு மத்திய பீடபூமிக்கு மட்டுமாக வரையறுத்துக் கொண்டுள்ளன.[5] இன்னும் சிலர் அமத் என்பதை முழுமையான பகுதிக்கும் வடக்குப் பகுதிக்கு மட்டும் சிரியன் பாலைவனம் என்பதாகவும் கருதுகிறார்கள்.[6]

சிரிய பாலைவனத்தின் பல பகுதிகள் பல்மைராவைச் சுற்றியுள்ளதால் பல்மைரின் பாலைவனம் என்றும் ஓம்ஸ் பாலைவனம் என்றும் அழைக்கப்படுகின்றன.[7]

சிரிய பாலைவனத்தின் தோற்றம்

சாமியா என்ற பெயரும் சிரிய பாலைவனத்தைக் குறிப்பிட உதவும் மற்றொரு பெயராகும்.[8]

புவியியல்[தொகு]

700-900 மீட்டர் உயர் பகுதியில் உள்ள பாலைவனத்தில் நடுவில் உள்ளது அமத் பீடபூமி, இது தட்டையான, கற்பாங்கான, சுண்ணாம்பால் ஆன படுகைப் பாறையை சிலிக்கா கனிம வகைச் சரளையால் மூடப்பட்ட பகுதியளவு பாலைவனத்தன்மையைக் கொண்ட நிலமாக உள்ளது. பீடபூமிப் பகுதியில் பெய்யும் சிறிதளவு மழையானது உள்ளூர் ஏரியடி உப்புடன் கலந்து விடுகிறது. இந்த பீடபூமியில் 1000மீ+ உயரம் கொண்ட சவுதி அரேபியாவின் காவ்ர் உம் உவால் மற்றும்  960மீ  உயர, ஜோர்தான், ஈராக்கு மற்றும் சவுதி அரேபியா எல்லையில் அமைந்த ஜெபெல் அனெய்சா ஆகிய சிகரங்கள் அமைந்துள்ளன.[9][10]

அராபியத் தீபகற்பத்தில் காணப்படும் மற்ற பாலைவனங்களுடன் இணைத்துப் பார்க்கும் போது அமத் பாலைவனமும் உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[11]

காட்டுயிர்கள்[தொகு]

சிரிய பாலைவனமே சிரிய வெள்ளெலிகளின் பிறப்பிடமாக உள்ளது.[12] நாரைகள், கொக்குகள், வெள்ளமடையான் நாரைகள், சிறிய கரையோரப் பறவைகள், இரைவாரிச் செல்லும் பறவைகள் போன்றவை பருவகால ஏரிகளுக்கு வந்து செல்பவையாகும். சிறிய கொறிக்கும் வகை விலங்குள் பொதுவாகக் காணப்படுபவையாகும். பாம்புகள், தேள்கள், ஒட்டகச் சிலந்திகள், ஓநாய், குள்ள நரி, நரி, பூனை, மான் போன்ற விலங்கு, நெருப்புக்கோழி, காட்டுக்கழுதை, சிறுத்தை போன்றவை காணப்படுகின்றன. மனிதர்கள் வேட்டையாடி அழித்து விட்ட காரணத்தால் பெரிய பாலுாட்டி இனங்கள் காணப்படாமலிருக்கலாம் என கருதப்படுகிறது.[4][8]

வரலாறு[தொகு]

தொன்மைக்காலம்[தொகு]

பல்மைரா சிரிய பாலைவனத்தில் அமைந்த முக்கிய வணிக மையம்

இந்தப் பாலைவனமானது, வரலாற்றுரீதியாக, பெடௌயின் இன பழங்குடி மக்கள் மற்றும் பல பழங்குடிகளின் வசிப்பிடமாக இருந்துள்ளது. இன்றும் கூட சில பழங்குடி இன மக்கள் இந்தப்பகுதியில் பாலைவனச்சோலைகளின் அருகாமையில் அமைந்த நகரங்கள் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மிகச்சில பெடௌயின் இன மக்கள் தங்களின் மரபுவழி வாழ்க்கை முறையின்படி பாலைவனத்தில் வசித்து வருகின்றனர். எழுத்தறிவு பெற்ற பெடௌயின் இன மக்களால் எழுதப்பட்ட செமிட்டிக் கல்வெட்டுகள், ஆதி அராபிய எழுத்துக்களடங்கிய கல்வெட்டுக்கள் சிரிய பாலைவனம் முழுவதிலும் காணப்படுகின்றன. இவை கி.மு. முதலாம் நுாற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நுாற்றாண்டு வரையான காலகட்டத்திற்குரியவையாக கண்டறியப்பட்டுள்ளன.

சிரிய பாலைவனத்தின் மிகப் பழமையான குடியேற்றப்பகுதிகளில் ஒன்றாக பல்மைரா கண்டறியப்பட்டுள்ளது. இது உரோமைப் பேரரசின் காலத்தில் பழம்பெரும் வணிக மையமாக திகழ்ந்துள்ளது.இப்பகுதி மக்கள் பெயர் பெற்ற வணிகர்களாக இருந்துள்ளனர். தொலைதுார கிழக்குப் பகுதிகளை மத்தியதரைக்கடல் பகுதியுடன் இணைத்தத பட்டுப் பாதையை தங்கள் வணிக மேம்பாட்டிற்கு சாதகமான முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் பெயர் பெற்ற வணிகர்களாக இருந்துள்ளனர். தொலைதுார கிழக்குப் பகுதிகளை மத்தியதரைக்கடல் பகுதியுடன் இணைத்தத பட்டுச்சாலையை தங்கள் வணிக மேம்பாட்டிற்கு சாதகமான முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர். பாலைநிலங்களை மூடிய வண்டிகளில் கடக்கும் வணிகர் கூட்டங்களுக்கு வரி விதித்தும், பட்டுப் பாதையின் மீது தொலைதுாரக் கிழக்குப் பகுதியிலிருந்து வரும் அரிய பொருட்களை வணிகம் செய்தும் தங்கள் நகருக்கு மிகப்பெரும் செல்வத்தை ஈட்டித் தந்தனர்.

நவீன கால வரலாறு[தொகு]

1919 ஆம் ஆண்டு இயக்கூர்தியால் முதன்முதலாகக் கடந்து செல்லப்பட்டது.[13] ஈராக் போரின் போது, இந்தப் பாலைவனம் 2003 – 2011 ஆம் ஆண்டு வரையில் ஈராக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய இடமாகத் திகழ்ந்துள்ளது. பாலைவனத்தில் எதிர்ப்பின் இருப்பினை அகற்றுவதில் தொடர்ச்சியான கூட்டு இராணுவ நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் திறனற்றுப் போயின. எதிர்ப்பாளர்கள் சுற்றியுள்ள பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகையில், கூட்டு இராணுவப் படையின் சார்பாகப் பேசும் பிரதிநிதிகள் கிளர்ச்சியாளர்களின் இராணுவச் செயல்பாடுகளுக்கு மையமாகத் திகழும் சிரிய பாலைவனத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் விதத்தில் பேசத் தொடங்கினர். இருப்பினும், சிரிய பாலைவனமானது, சிரியாவின் எல்லைப்புறத்திற்கருகில் அதன் அமைவிடத்தின் காரணமாக ஆயுதக்கடத்தலுக்கு உகந்த முக்கியப்பாதையாக நிலைத்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் அல் அன்பார் மாகாணம் வந்த பிறகு, தங்களின் படைகளையும், தலைவர்களையும் கிழக்கு நோக்கி நகரச் செய்து, புறாத்து ஆற்றின் அருகாயைிலுள்ள எதிர்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட நகரங்களுக்கு கொண்டு சென்றனர்.[14][15][16][17][18]

மேற்கோள்கள்[தொகு]

 1. Encyclopædia Britannica: A New Survey of Universal Knowledge, Volume 2. 1941. p. 173. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
 2. Harris, Nathaniel (2003). "Syrian+desert" Atlas of the world's deserts. New York: Fitzroy Dearborn. pp. 49, 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781579583101. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
 3. "Syrian Desert". Archived from the original on January 13, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help), New International Encyclopedia, Edition 2, Published by Dodd, Mead, 1914, Arabia, page 795 and Syrian Desert, Encarta
 4. 4.0 4.1 Betts, Alison (1996). The Harra and the Hamad : excavations and surveys in Eastern Jordan, vol. 1. England: Collis Publication. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850756149. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
 5. "Syrian Desert". 1999. பார்க்கப்பட்ட நாள் 3 February 2017.
 6. The International Whitaker, Volume 2. International Whitaker. 1913. p. 62. பார்க்கப்பட்ட நாள் 3 February 2017.
 7. Annual Review, Volume 2. Institute for Defence Studies and Analyses. 1973. p. 476. பார்க்கப்பட்ட நாள் 3 February 2017.
 8. 8.0 8.1 McIntosh, Jane (2005). "Shamiyah+desert" Ancient Mesopotamia: New Perspectives (in ஆங்கிலம்). Santa Barbara: ABC-CLIO. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576079652. பார்க்கப்பட்ட நாள் 3 February 2017. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
 9. Wagner, Wolfgang (2011). Groundwater in the Arab Middle East. New York: Springer. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642193514. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
 10. "Jebel 'Aneiza, Saudi Arabia". பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
 11. "Transboundary Aquifers, Challenges and New Directions" (PDF). Paris: யுனெசுகோ. December 2010. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
 12. McPherson, Charles W. (1987). Laboratory hamsters. Orlando: Academic Press. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780127141657. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
 13. Grant, Christina Phelps (2003). The Syrian desert : caravans, travel and exploration. Hoboken: Taylor and Francis. p. 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136192715.
 14. "U.S. diplomat apologizes for remarks". MSNBC. 2006-10-22. http://www.msnbc.msn.com/id/15362568/. பார்த்த நாள்: 2011-02-02. 
 15. Knickmeyer, Ellen (2006-05-29). "U.S. Will Reinforce Troops in West Iraq". Washingtonpost.com. https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/05/29/AR2006052901172_pf.html. பார்த்த நாள்: 2011-02-02. 
 16. "WP: U.S. to reinforce troops in west Iraq". MSNBC. 2006-05-30 இம் மூலத்தில் இருந்து 2012-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://wayback.archive-it.org/all/20120525180025/http://msnbc.msn.com/id/13039231/. பார்த்த நாள்: 2011-02-02. 
 17. "Situation Called Dire in West Iraq". Washington Post. 2006-09-10. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
 18. http://www.freemarketnews.com/WorldNews.asp?nid=
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிய_பாலைவனம்&oldid=3448076" இலிருந்து மீள்விக்கப்பட்டது