ஸ்டெப்பி புல்வெளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தோ ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடமாகவும், உலகில் முதலில் குதிரைகளை வளர்ப்பு விலங்காக பழக்கப்படுத்தப்பட்ட யுரேசியப் புல்வெளி வலையம் (இளஞ்சிவப்பு நிறம்)
உக்ரைன் நாட்டு புல்வெளிகள்
கசக்ஸ்தான் நாட்டுப் புல்வெளிகள்
மங்கோலியா நாட்டுப் புல்வெளிகள்

ஸ்டெப்பிப் புல்வெளிகள் (Steppe)[1][2] ஸ்டெப்பி எனப்படும் இப்புல்வெளிகளின் பெயர்களும், வளர்ச்சியும், புவியியல் மற்றும் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. பொதுவாக மழை வளம் குன்றிய, மேட்டு நிலங்களில் காணப்படும் ஸ்டெப்பிப் புல்வெளிகள் மரங்களற்ற அல்லது மிகவும் குட்டையான மரங்கள் கொண்டதாக உள்ளது. ஸ்டெப்பிப் புல்வெளியால் ஆன சமவெளிகள் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு ஏற்றதாக உள்ளது. இதனால் யுரேசியப் புல்வெளி பகுதிகளில் குதிரைகள், ஆடுகள், மாடுகள் மற்றும் ஒட்டகங்களின் இனப்பெருக்கம் அதிகமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் வேளாண் இன மக்களை விட கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இன மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். கிழக்கு ஐரோப்பா, நடு ஆசியா, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளில் யுரேசியப் புல்வெளிகளில் வாழ்ந்த இன மக்களால் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது. யுரேசிய ஸ்டெப்பி புல்வெளி பகுதிகள் வறண்ட வானிலையும், மிகக் குறைந்த மழைப் பொழிவும் கொண்டதாக உள்ளது. கோடைக்கால வெப்ப நிலை 40 பாகை செல்சியஸ் அளவிற்கு உயர்ந்தும், குளிர்கால வெப்பநிலை பூச்சியம் 40 பாகை செல்சியசுக்கும் குறைந்து காணப்படுகிறது.

இரண்டு வகை புல்வெளிகள்[தொகு]

குளிர்காலத்தில் மரங்கள் கூடிய தெற்கு சைபீரியா புல்வெளிகள்

குளிர் மண்டல மற்றும் மித வெப்ப மண்டல புல்வெளிகள் என இரண்டு வகையான புல்வெளிகள் பதிவாகியுள்ளது:[3]

புல்வெளிகளின் பெயர்களும், நாடுகளும்[தொகு]

 1. ஸ்டெப்பிப் புல்வெளிகள் - யுரேசியா
 2. லானாஸ் புல்வெளிகள் - கினியா
 3. சவன்னா புல்வெளிகள்[4][5] - ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா
 4. பிரெய்ரி புல்வெளிகள் - வட அமெரிக்கா
 5. பாம்பாஸ் புல்வெளிகள் - அர்ஜென்டினா
 6. காம்பாஸ் புல்வெளிகள் - பிரேசில்

அமைவிடங்கள்[தொகு]

படகோனிய குளிர்நிலை புல்வெளிகள், அர்ஜெண்டினா

குளிர்ப் பகுதி புல்வெளிகள்[தொகு]

உலகின் மிகப் பெரிய புல்வெளிச் சமவெளி யுரேசியப் புல்வெளி ஆகும். யுரேசியப் புல்வெளிகள் கிழக்கு ஐரோப்பா மற்றும் நடு ஆசியாவின் உக்ரைன், தெற்கு ருசியா, கிழக்கு ருசியாவின் தெற்கு சைபீரியா, கசக்ஸ்தான், துருக்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் காணப்படுகிறது.

துருக்கியின் உள் அனதோலியா, நடு அனதோலியா, கிழக்கு அனதோலியா, தென்கிழக்கு அனதோலியா மற்றும் ஆர்மீனியா மற்றும் வடக்கு ஈரான் குளிர்ப் பகுதி புல்வெளிச் சமவெளிகளைக் கொண்டது.

கிழக்கு ஐரோப்பாவின் அங்கேரி பகுதியிலும் இவ்வகை புல்வெளிகள் உள்ளது.

பிரெய்ரி புல்வெளிகள், ஆல்பர்ட்டா, கனடா

வட அமெரிக்காவின் மேற்கு கனடா, மத்திய அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் வடக்கு மெக்சிகோ பகுதிகளில் நெட்டை பிரெய்ரி புல்வெளிகள் உள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, வாசிங்டனில் குட்டை பிரெய்ரி புல்வெளிகள் காணப்படுகிறது.

தெற்கு அமெரிக்காவின் உயர்ந்த ஆண்டீஸ் மலைப் பகுதியின் படகோனியாவில் குளிர் மண்டல புல்வெளிகள் உள்ளது.

தெற்கு நியுசிலாந்து தீவின் உட்பகுதியில் குட்டை புல்வெளிகள் உள்ளது.

நிவாடாவின் வடகிழக்கில் புல்வெளிகள்

மித வெப்ப மண்டல புல்வெளிகள்[தொகு]

மித வெப்ப நிலை கொண்ட மத்திய சிசிலி, தெற்கு போர்த்துகல், கிரீஸ் நாட்டின் சில பகுதிகள், தெற்கு ஏதன்ஸ் ஸ்ட்ப்பி புல்வெளிகள் காணப்படுகிறது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. steppe
 2. ஸ்டெப்பிப் புல்வெளிகள்[தொடர்பிழந்த இணைப்பு]
 3. Ecological Subregions of the United States
 4. Savannah grassland
 5. TROPICAL GRASSLANDS (SAVANNAS)
 6. "HNMS". Hnms.gr. 2007-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Steppes
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 • "The Steppes". barramedasoft.com.ar. 1998–2008. 2008-04-04 அன்று பார்க்கப்பட்டது.