யுரேசியப் புல்வெளி
யுரேசியப் புல்வெளிகள் (Eurasian Steppe), என்பதை பெரிய மேய்ச்சல் புல்வெளி நிலங்கள் என்றும் அழைப்பர். ஆசியா – ஐரோப்பாவை இணைக்கும் யுரேசியாவில் இப்புல்வெளி சமவெளிகள் காணப்படுவதால் இதற்கு யுரேசியப் புல்வெளி பெயராயிற்று. மரங்களற்ற ஸ்டெப்பி என அழைக்கப்படும் இப்புல்வெளிச் சமவெளிகள் கால்நடைகளை மேய்ப்பதற்கு ஏற்ற மேய்ச்சல் நிலங்களாகும். கால்நடைகளை மேய்த்த சிதியர்கள், பார்த்தியர்கள் போன்ற நாடோடி இன மக்கள் இப்புல்வெளிச் சமவெளிகளில் வாழ்ந்தவர்களே.
யுரேசியா ஸ்டெப்பிப் புல்வெளிகள் வழியாக செல்லும் பட்டுப்பாதை, கிழக்கு ஐரோப்பா, நடு ஆசியா, சீனா, தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியா பகுதி மக்களின் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் மற்றும் வணிக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]கிழக்கு ஐரோப்பாவின் மல்தோவா பகுதியிலிருந்து, உக்ரைன், தெற்கு ருசியா, கசக்ஸ்தான், சீனாவின் சிஞ்சியாங் மற்றும் மங்கோலியா முதல் மஞ்சூரியா வரை யுரேசியா ஸ்டெப்பிப் புல்வெளிப் பகுதிகள் பரவியுள்ளது.[1]
தட்பவெப்பம்
[தொகு]கிழக்கு ஐரோப்பா மற்றும் நடு ஆசியாவின் புல்வெளிப் பகுதிகளில் கோடைகாலத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குளிர் காலத்தில் பூஜ்ஜியம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும் காணப்படுகிறது. ஆனால் மங்கோலியப் பகுதி ஸ்டெப்பிப் புல்வெளிகளில் பகல் நேர வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கு கீழே சென்று விடுகிறது.
புவியியல்
[தொகு]யுரேசிய புல்வெளிப் பிரிவுகள்
[தொகு]யுரேசியப் புல்வெளிகள் டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கி பல ஆயிரக்கணக்கான மைல் தொலவு வரை படர்ந்து பசிபிக் பெருங்கடல் வரை நீள்கிறது. யுரேசியப் புல்வெளிச் சமவெளியின் வடக்கில் ருசியாவின் சைபீரியாக் காடுகளும்; தெற்கில் உறுதியற்ற எல்லையும், வறட்சியும் காணப்படுகிறது. ஸ்டெப்பிப் புல்வெளி மேய்ச்சல் நிலங்கள் இரண்டு இடங்களில் குறுகிக் காணப்படுவதால் யுரேசியாப் புல்வெளிகள் மூன்று பெரும் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்தியப் யுரேசியப் புல்வெளிகள்
[தொகு]- மேற்கத்திய யுரேசியப் ஸ்டெப்பிப் புல்வெளிகள் தன்யூப் ஆற்று முகத்துவாரத்தின் அருகிலிருந்து துவங்கி, உரால் மலைத்தொடரின் தெற்கு பகுதியில் முடிகிறது.
- தென்கிழக்கில் யுரேசியப் புல்வெளிகள் கருங்கடல் – காஸ்பியன் கடல் மற்றும் காக்கசஸ் மலைத்தொடர் இடையே பரந்துள்ளது.
மைய யுரேசியப் புல்வெளி
[தொகு]- நடு ஸ்டெப்பிப் புல்வெளிகள் அல்லது கசக்ஸ்தான் ஸ்டெப்பிப் புல்வெளிச் சமவெளிகள் உரால் மலைத் தொடரிலிருந்து சுன்காரியா (Dzungaria) முடிய பரவியுள்ளது. பாலைவனச் சுழல் காணப்படும் இப்பகுதியில் அமு தாரியா மற்றும் சிர் தாரியா என இரண்டு ஆறுகள் பாய்கிறது. தாஷ்கண்ட், சமர்கண்ட், புகாரா போன்ற வரலாற்று கால நகரங்கள் அமைந்துள்ளது.
கிழக்கத்திய யுரேசியப் புல்வெளிகள்
[தொகு]- மேற்கில் பாமிர் மலைகள், சீனாவின் சிஞ்சியாங் பகுதியிலிருந்து துவங்கி கிழக்கில் மங்கோலியாவின் அல்த்தாய் மலைத்தொடர்கள் வழியாக படர்ந்து பசிபிக் பெருங்கடல் கரையில் உள்ள மஞ்சூரியாவில் முடிகிறது.
யுரேசியாப் புல்வெளிப் பேரரசுகள்
[தொகு]யுரேசியப் புல்வெளிகளில் பெருமளவு கால்நடைகளை மேய்த்த நாடோடி இன மக்களும், சிறிதளவு உழவுத் தொழில் செய்த இன மக்களும் ஒன்றிணைந்து நடு ஆசியாவிலும், தெற்காசியாவிலும்; மேற்காசியாவிலும் மற்றும் கிழக்கு ஆசியாவிலும் பல பேரரசுகளை நிறுவினர். அவைகளில் சில;
படக்காட்சிகள்
[தொகு]-
சைபீரியாவின் தெற்குப் புல்வெளிகள்
-
சைபீரியாவின் தெற்குப் புல்வெளிகள்
-
கசக்ஸ்தான் புல்வெளிகள்
-
மேற்கு கசக்ஸ்தான் புல்வெளிகள்
-
வோல்காகிராட் புல்வெளிகள்
-
வோல்காகிராட் புல்வெளியில் இயற்கைப் பூங்கா
-
தென்கிழக்கு சைபீரியாவின் புல்வெளிகள்
-
கிர்கிஸ்தான் நாட்டுப் புல்வெளிகள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Canada's vegetation: a world perspective – Geoffrey A. J. Scott – Google Knihy. Books.google.sk. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Plano Carpini, John of, "History of the Mongols," in Christopher Dawson, (ed.), Mission to Asia, Toronto: University of Toronto Press, 2005, pp. 3–76.
- Barthold, W., Turkestan Down to the Mongol Invasion, T. Minorsky, (tr.), New Delhi: Munshiram Manoharlal Publishers, 1992.
- Christian, David, A History of Russia, Central Asia and Mongolia, Volume 1: Inner Eurasia from Prehistory to the Mongol Empire’, Malden MA, Oxford, UK, Carlton, Australia: Blackwell Publishing 1998.
- Fletcher, Joseph F., Studies on Chinese and Islamic Inner Asia, Beatrice Forbes Manz, (ed.), Aldershot, Hampshire: Variorum, 1995, IX.
- Grousset, Rene, The Empire of the Steppes: a History of Central Asia, Naomi Walford, (tr.), New Brunswick, NJ: Rutgers University Press, 1970.
- Krader, Lawrence, "Ecology of Central Asian Pastoralism," Southwestern Journal of Anthropology, Vol. 11, No. 4, (1955), pp. 301–326.
- Lattimore, Owen, "The Geographical Factor in Mongol History," in Owen Lattimore, (ed.), Studies in Frontier History: Collected Papers 1928–1958, London: Oxford University Press, 1962, pp. 241–258.
- Sinor, Denis, "The Inner Asian Warrior," in Denis Sinor, (Collected Studies Series), Studies in Medieval Inner Asia, Aldershot, Hampshire: Ashgate, Variorum, 1997, XIII.
- Sinor, Denis, "Horse and Pasture in Inner Asian History," in Denis Sinor, (Collected Studies Series), Inner Asia and its Contacts with Medieval Europe, London: Variorum, 1977, II.