சிசிலி
Jump to navigation
Jump to search
சிசிலி (Sicily, இத்தாலிய மொழி: Sicilia) இத்தாலி நாட்டின் ஒரு சுயாட்சி பிரிவாகும். இதுவே மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவாகும். 5 மில்லியன் மக்கள் வாழும் இத்தீவின் மொத்தப் பரப்பளவு 25,708 km² ஆகும்.
சிசிலி இன்றைய நிலையில் இத்தாலியின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது முன்னர் ஒரு முழுமையான விடுதலை பெற்ற நாடாக சிசிலி பேரரசு என்ற பெயரில் இருந்தது. இது சில காலம் தெற்கு இத்தாலி, மோல்ட்டா ஆகியவற்றின் பாகுதியாகவும் இருந்தது. இது பின்னர் போர்பன்களின் ஆட்சியில் நேப்பில்ஸ் நகரில் இருந்து ஆளப்பட்டது. அன்றிலிருந்து சிசிலி இத்தாலியின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது.